பத்தாம் வகுப்பு - தமிழ்
முன்னுரிமைப் பாடம்
இயல் - 6 , வாழ்வியல் இலக்கியம்
திருக்குறள் - பொருள் செயல் வகை ( 76 )
*************** ************** ***********
வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் வாழ்வியல் இலக்கியம் என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள ' திருக்குறள் ' ஆகும்.
முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.
நண்பர்களே ! குறட்பாக்களுக்கான விளக்கத்தை மிக அருமையாக விளக்கிய பெரும்புலவர் ஐயா அவர்களுக்கு நன்றி.
பொருள்செயல் வகை ( 76 ) அதிகாரத்தில் 5 குறட்பாக்கள் நமக்குக் கொடுக்கப் பட்டுள்ளன. குறட்பாக்களையும் அவற்றிற்கான பொருளையும் காண்போம்.
பொருள் செயல் வகை (76)
5. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.*
( மனப்பாடக்குறள் )
பொருள் :
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.
அணி: சொற்பொருள் பின்வருநிலை அணி
6. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
பொருள்:
முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்.
7. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
பொருள் :
மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளைஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிடவேண்டும்.
8. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை. *
( மனப்பாடக்குறள் )
பொருள்:
தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப்போரைக் காண்பது போன்றது.
அணி: உவமை அணி
9. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
பொருள்:
ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும்; அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை.
**************** ************ ************
0 Comments