பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - மொழியை ஆள்வோம் - மதிப்புரை எழுதுக / 10th TAMIL - EYAL 5 - MOZHIYAI AALVOM - MATHIPPURAI EZHUTHUKA

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 5 

மொழியை ஆள்வோம் 

மதிப்புரை எழுதுக

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை கட்டுரை/சிறுகதை கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்பு - நூலின் தலைப்பு - நூலின் மையப் பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு - நூல் ஆசிரியர்.

விடை :

நூலின் தலைப்பு :

அன்று இந்தியாவை அறியாதவர்கள்கூட காந்தியடிகளை அறிந்து இருந்தார்கள். காந்தி தேசத்தில் இருந்து வருகிறீர்களா! என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களை அறிந்து இருக்கிறார்கள். கலாம் தேசத்திலிருந்து வருகிறீர்களா? என்பார்கள் இந்தியாவின் அடையாளமாக, தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல்கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம்தான் இந்த ‘கனவெல்லாம் கலாம்' இந்நூலின் தலைப்பாகும்.

நூலின் மையப் பொருள் :

நூலாசிரியர் தமிழ்தேனீ முனைவர் இரா. மோகன் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி உற்று நோக்கி மாமனிதர் அப்துல்கலாம் பற்றி வந்த தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்து வகுத்து உள்ளார். அப்துல் கலாம் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் "கனவெல்லாம் கலாம்". நூலைப் படித்தால் வாசகர்கள் கனவெல்லாம் கலாம் வருவார். 

     மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் வெற்றிக்கு காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை. அவர் உலகப்  பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு மறந்து விடாமல் அதன்படி வாழ்ந்த காரணத்தால் உலகப் புகழ் ஈட்டினார் என்பதே உண்மை அதனை இந்நூலில் நன்கு உணர்த்தி உள்ளார். 1.காணிக்கைக்     கட்டுரைகள், 2. இரங்கல் செய்திகள், 3. கவிதை மாலை, 4. கலாம் அலைவரிசை, 5. கலாம் கருவூலம் என ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்து உள்ளார்.

நூலின் நயம் :

பேராசிரியர் தி. இராசகோபாலன் தொடங்கி கவிக்கோ. அப்துல் ரகுமான், தமிழர் தலைவர் பழ.நெடுமாறன், தினமலர் ஆசிரியர்,  இரா.கிருஷ்ணமூர்த்தி, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், புதிய தலைமுறை ஆசிரியர் மாலன், எழுத்தாளர் சிவசங்கரி, முதுமுனைவர். வெ. இறையன்பு ஆகியோர் வரிசையில் என்னுடைய கட்டுரையும், கவிதையும் இந்த நூலில் இடம் பெற்று இருப்பது மனமகிழ்ச்சி மட்டுமல்ல, பெருமையாகவும்  இருந்தது. முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமல்ல சிற்றிதழ்கள் வரை கலாம் பற்றிய தகவல்களை தேனீ போலவே தேடித்தேடி தொகுத்து உள்ளார்கள். தோரண வாயிலில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மை.

         பொதுவாக ஒரு தொகை நூலைப் பொருத்த வரையில் தேடித்  தொகுப்பது கூட அத்தனை அரிய செயல் அன்று; ஆனால் தொகுத்தவற்றை எல்லாம் வகுத்து முறைப்படுத்துவது என்பது அரிதினும் அரிதாகும். அதற்குள் சொந்தமாக தனிநூலை நாம் எழுதி விடலாம். இம்முயற்சியில் எனக்குத் தோன்றிய துணையாக இருந்து வலதுகரமாக செயல்பட்டவர் என வாழ்க்கைத் துணைவியர் பேராசிரியர் நிர்மலா.


Post a Comment

0 Comments