பத்தாம் வகுப்பு - தமிழ் - முன்னரிமைப் பாடம் - இயல் 4 - கற்கண்டு - பொது / 10th TAMIL - EYAL 4 - KARKANDU - POTHU

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

முன்னுரிமைப் பாடம் - 2020 - 2021

இயல் - 4 

கற்கண்டு - இலக்கணம் - பொது 

இருதிணை , ஐம்பால் , மூவிடம்

விரிவான காட்சிப் பதிவு விளக்கம்

***************   *************   *************

               வணக்கம் அன்பு நண்பர்களே ! நமது ஆசிரிய நண்பர்கள் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளின்படி , பத்தாம் வகுப்பிலுள்ள முன்னுரிமைப் பாடங்கள் மீண்டும் நமது இணைய தளத்தில் உலா வர இருக்கின்றன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

   இன்றைய வகுப்பில் இருதிணை , ஐம்பால் , மூவிடம் பற்றி விரிவாக , எளிமையான விளக்கங்களுடன் காண்போம். 

முதலில் நமது பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் பாட விளக்கத்தினைக் காட்சிப் பதிவாகக் காண்போம்.




        நண்பர்களே ! காட்சிப் பதிவினைப் பார்த்தீர்களா ? மிக எளிமையாகப் பாடம் புரிந்ததல்லவா ? இனி வரி வடித்தில் காண்போம்


இருதிணை

          ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற   பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.

ஐம்பால்

           பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும்.

       உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.

உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்

வீரன், அண்ணன், மருதன் - ஆண்பால்

மகள், அரசி, தலைவி  - பெண்பால்

மக்கள், பெண்கள், ஆடவர் - பலர்பால்

அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்

                 அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.

எ.கா. யானை, புறா, மலை

    அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது
பலவின்பால் ஆகும்.

எ.கா.  -   பசுக்கள், மலைகள்

மூவிடம்:

       தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.


இடம்      பெயர் / வினை     எடுத்துக்காட்டு

தன்மை - தன்மைப் பெயர்கள்     நான்,                                                             யான், நாம், யாம் .

தன்மை வினைகள் - வந்தேன், வந்தோம்

முன்னிலை -                -நீ, நீர், நீவிர், நீங்கள்
முன்னிலைப் பெயர்கள்

முன்னிலை வினைகள்

நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் ...

படர்க்கை   -  படர்க்கைப் பெயர்கள் - அவன், அவள், அவர், அது, அவை.

படர்க்கை வினைகள்

வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள்
பறந்தது, பறந்தன...

*****************   *********   ***************

வாழ்த்துகள் நண்பர்களே ! 

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

**************   ************** **************

Post a Comment

0 Comments