TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி
பொதுத்தமிழ் - பகுதி - இ: 2
மரபுக்கவிதை - பகுதி - 2
வாணிதாசன்
* பிறந்த ஊர்: புதுவையைச் சேர்ந்த வில்லியனூர்
* பிறப்பு: 22.02.1915 - இறப்பு: 07.08.1974.
* தமிழாசிரியர்: பாவேந்தர் பரம்பரையினர்
* நூல்கள்: தமிழச்சி, கொடிமுல்லை, எழிலோவியம், தீர்த்த யாத்திரை, இன்ப இலக்கியம், பொங்கல் பரிசு, இரவு வரவில்லை, சிரித்தநுணா, வாணிதாசன் கவிதைகள், பாட்டரங்கப் பாடல்கள், இனிக்கும்பாட்டு, எழில்விருத்தம், தொடுவானம், பாட்டுப்
பிறக்குமடா - 14 நூல்கள்.
* தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்: பாட்டரங்கப் பாடல்கள்
* விருத்தத்திற்கு இலக்கணமாகத் திகழ்வது: எழில் விருத்தம்
* இசைப்பாடல் நூல்கள்:- தொடுவானம், பாட்டுப் பிறக்குமடா
* வாணிதாசன் எழுதியது: தமிழச்சி; பாரதிதாசன் எழுதியது தமிழச்சியின் கத்தி
* சமதர்ம நோக்கும் சீர்திருத்தப் போக்கும் மிக்கவர்.
* 1979-இல் பாவேந்தர் விருது பெற்றவர்..
பெற்ற பட்டங்கள்: புதுமைக்கவிஞர், பாவலரேறு, பாவலர்மணி, தமிழ்நாட்டுத் தாகூர்.
மேற்கோள்
“இடுவெயில் போல் உழைக்கும் சேரிவாழ் ஏழைமக்கள்
கொடுவெயில் குளிர்மழைக்குக் குந்திடக் குடிசை உண்டோ?”
“மக்கட்கே வானை என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்
மக்கட்கே ஆறு வற்றாத அருவி தந்தாய்”
“நிலவில் 'பாரி' அடிப்பதுவும் நீரில் 'ஓரி' அடிப்பதுவும்
அலைகடல் மூழ்கிக் குளிப்பதுவும் அறிவுக்கு ஆக்கம் அளிப்பனவாம்”
“பாரதிதாசன் பெயரை உரைத்திடப்
பாட்டுப் பிறக்குமடா”
0 Comments