12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 . பண்பாடு - சுற்றத்தார் கண்ணே உள - இயங்கலைத் தேர்வு / 12th ONLINE CERITIFICATE TEST

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் - 3 , பண்பாடு

சுற்றத்தார் கண்ணே உள

இயங்கலைத் தேர்வு - வினா & விடை 

வினா உருவாக்கம்

திரு.மா.சண்முக வேலு , மு.க.தமிழாசிரியர் , அ.ஆ.தி.ந.மே.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை

பாராட்டுச் சான்றிதழ் பெறுவதற்கான மதிப்பெண் 60 பெற்றும் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்குத் தங்களது பெயர் , வகுப்பு , மாவட்டம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

*****************   ************   ************

1) ' எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே

ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' - 

 என்னும்   பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது -----

அ ) தனிக்குடும்ப முறை

ஆ ) விரிந்த குடும்ப முறை

இ ) தாய்வழிச் சமூகமுறை

ஈ ) தந்தைவழிச் சமூகமுறை

விடை : ஈ ) தந்தைவழிச் சமூகமுறை

2) நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்   போன்றது -----

அ ) திருமணம் , குடும்பம்

ஆ ) தனிக்குடும்பம் , கூட்டுக்குடும்பம்

இ )  தாய்வழிக்குடும்பம் , தந்தைவழிக் குடும்பம்

ஈ ) கணவன் , மனைவி

விடை : அ ) திருமணம் , குடும்பம்


3) மணந்தகம் என்பது ---- குறிக்கும். 

அ ) வீடு
ஆ ) கோவில்
இ ) இல்லறத் தொடக்கம்
ஈ ) திருமணக்கூடம்

விடை : இ ) இல்லறத்தொடக்கம்

4) தமிழர் மானிடவியல் என்னும் நூலை
இயற்றியவர் -------

அ ) சுப்பிரமணிய பாரதி
ஆ ) பக்தவச்சல பாரதி
இ ) பாரதி பாஸ்கர்
ஈ ) சோமசுந்தர பாரதி

விடை : ஆ ) பக்தவச்சல பாரதி 

5) இவற்றை வாயிலுக்கே சென்று
இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று
ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது எதனை?

அ ) வக்கிரம்
ஆ ) அவமானம்
இ ) வஞ்சனை
ஈ ) இவை அனைத்தும்

விடை : ஈ ) இவை அனைத்தும்

6) ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளை
தமிழில் ' தாகங்கொண்ட மீனொன்று' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவர் யார் ?

அ ) சிற்பி பாலசுப்பிரமணி
ஆ ) பா.ஆனந்த குமார்
இ ) சத்திய மூர்த்தி
ஈ ) தி.சு.நடராசன்

விடை : இ ) சத்தியமூர்த்தி 

7) ' உவா உற வந்து கூடும் உடுபதி
, இரவி ஒத்தார்' - யார் ? யார் ?

அ ) சடாயு , இராமன்
ஆ ) இராமன் , குகன்
இ ) இராமன் , சரயு

ஈ ) இராமன் , சுக்ரீவன்

விடை : ஈ ) இராமன் , சுக்ரீவன்

8) ' நளிர் கடல்' என்பதன் இலக்கணக்
குறிப்பு -----

அ ) வினைத்தொகை
ஆ ) பண்புத்தொகை
இ ) உவமைத்தொகை
ஈ )  வேற்றுமைத்தொகை

விடை : அ ) வினைத்தொகை

9) யாவரும் கேளிர் என்பது ------

அ ) தமிழர் உயிர்பண்பின் முதிர்ச்சி
ஆ ) தமிழர் நற்பண்பின் மலர்ச்சி
இ ) தமிழ்ப்பண்பின் தொடர்ச்சி
ஈ ) தமிழர் நற்பண்பின் வளர்ச்சி

விடை : ஈ ) தமிழ் நற்பண்பின் வளர்ச்சி 

10 ) கூற்று 1 - ' இனி நாம் ஓர் ஐவர்கள் உளர்ஆனோம் ' இதில் குறிப்பிட்ட ஐந்தாவது நபர்குகன் ஆவார்.

 கூற்று 2 - இராமனைச்சுக்ரீவனுடன் நட்பு கொள்ளச் செய்தவர் அனுமன் ஆவார்.

அ ) கூற்று 1 மட்டும் சரி

ஆ ) கூற்று 1 , 2 சரி
இ ) கூற்று 1 தவறு , 2 மட்டும் சரி
ஈ ) கூற்று 1, 2 தவறு

விடை : அ) கூற்று 1 மட்டும் சரி

11 ) ' உரிமைத் தாகம்' சிறுகதையின்
ஆசிரியர் யார்?

அ ) சி.சு.செல்லப்பா
ஆ ) பூமணி
இ )உத்தம சோழன்
ஈ ) கி.இராஜநாராயணன்

விடை : ஆ ) பூமணி 

12 ) பூமணியின் சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினம் -----

அ ) வெக்கை
ஆ) பிறகு
இ ) அஞ்ஞாடி
ஈ ) கொம்மை

விடை : இ ) அஞ்ஞாடி

13) பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.

அ ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்

ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்

இ ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

ஈ ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்

விடை : இ ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

14 ) சரியான தொடரைத் தேர்வு செய்யவும்.

அ) குதிரையும் யானையும் வேகமாக ஓடியது
ஆ ) அவன் வெண்மதியிடம் பேசினாய்
இ ) கோவலன் மதுரைக்குச் சென்றது
ஈ ) சென்னையிலிருந்து நேற்று வந்தான்

விடை : ஈ ) சென்னையிலிருந்து நேற்று வந்தான்

15 ) திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை -----

அ )  9 
ஆ ) 4
இ ) 10
ஈ  ) 13

விடை : அ ) 9 

16 ) வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுபவர் ------

அ ) இலமென்று வெஃகுதல் செய்யாதவர்

ஆ ) பயன் தூக்காது உதவி செய்பவர்

இ ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்

ஈ ) இயல்பினன் இல்வாழ்க்கை வாழ்பவர்

விடை : இ ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்

17 ) வையகமும் வானகமும் ஆற்றலரிது . எதற்கு ?

அ ) செய்யாமல் செய்த உதவி 

ஆ ) பயன்தூக்கார் செய்த உதவி

இ ) தினைத்துணை நன்றி 

ஈ ) செய்ந்நன்றி 

விடை : அ ) செய்யாமல் செய்த உதவி

18 ) ' நாடகவியல் ' என்னும் இலக்கண நூலை இயற்றியவர் ------

அ ) பம்மல் சம்மந்த முதலியார்

ஆ ) பரிதிமாற் கலைஞர்

இ ) சி.வை.தாமோதரம் பிள்ளை 

ஈ ) சங்கரதாஸ் சுவாமிகள்

விடை : ஆ ) பரிதிமாற் கலைஞர்

19 ) ' MINI MEALS ' என்ற சொல்லின் தமிழாக்கம் ------

அ ) தேநீர் சிற்றுண்டி

ஆ ) சிற்றுணவு 

இ ) முழு உணவு 

ஈ ) மதிய உணவு

விடை : ஆ ) சிற்றுணவு 

20 ) ' CHEKOUT ' - என்ற சொல்லின் தமிழாக்கம் ------

அ ) உள்ளே வருதல்

ஆ ) வெளியேறுதல்

இ ) இருக்கையில் அமர்தல்

ஈ ) எழுந்து நிற்றல் 

விடை : ஆ ) வெளியேறுதல் 

****************   ***************   ***********

Post a Comment

0 Comments