12 ஆம் வகுப்பு - தமிழ் - நவம்பர் - 2021
மாதிரித் தேர்வு
அரசு (ஆதி.ந) மேல்நிலைப்பள்ளி, இளமனூர் - மதுரை
(முதல் 5 இயல்கள் மாதிரி தேர்வு)
வகுப்பு: 12 நேரம்: 2.30
பாடம்: தமிழ் மதிப்பெண் : 90
வினா உருவாக்கம்
' நன்னெறி ஆசிரியர் ' - திரு.மா.சண்முகவேலு , மு.க.தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.
பகுதி - I
அனைத்து வினாக்களுக்கும் உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
14 X 1 = 14
1. சிற்பி பாலசுப்பிரமணியன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பொழி பெயர்ப்பு நூல்---
அ) நிலவுப்பூ ஆ ) ஒளிப்பறவை
இ ),அக்கினிசாட்சி ஈ ) ஒரு கிராமத்து நதி
2 . கீழ்க்கண்டவற்றுள் அய்யப்பமாதவன் இயக்கிய குறும்படத்தின் பெயர் -----
அ) மழைக்குப் பிறகு மழை
ஆ) நானென்பது இன்னொருவன்
இ) நீர்வெளி ஈ) இன்று
3 ) ' உவா உறவந்து கூடும்
உடுபதி இரவி ஒத்தார் யார் யார்?
அ) சடாயு இராமார்
ஆ இராமன் சுக்ரீவன்
இ) இராமன் குகன் ஈ) இராமன் சவரி
4. சுரதா நடத்திய கவிதை இதழ் ----
அ) இலக்கியம் ஆ) காவியம்
இ ), ஊர்வலம் ஈ ) விண்மீன்
5. இலக்கியத்தையும் மொழியைம் ஒரு சேரப்பேசும் இலக்கண நூல்,
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தாட்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்நூல்
6. உரிமைத் தாகம் என்னும் சிறுகதையின் ஆசிரியர்.
அ) உத்தமசோழன்
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயகாந்தன் ஈ) பூமணி
7. குழிமாற்று எந்தத் துறையோடு தொடர்புடையது.
அ) இலக்கியம் ஆ) கணிதம்
இ) புவியியல் - ஈ ) வேளாண்மை
8 ) உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் இத்தொடர் உணர்த்தும் பண்பு.
அ) நேர்மறைப் பண்பு
ஆ) எதிர் மறைப் பண்பு
இ) முரண்பண்பு ஈ ) இவை அனைத்தும்
9. பிழையான தொடாரக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ ) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
10. தமிழில் திணை பாகுபாடு -----
அ) பொருட்குறிப்பு ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க்குறிப்பு ஈ) எழுத்துக் குறிப்பு
11. Platform என்பதன் தழிழாக்கம்,
அ) இருப்பப்பாதை ஆ) நடைமேடை
இ) காட்சி மோடை ஈ) தொடர்வண்டி பாதை
12. " வெங்கதிர்" சொல்லின் இலக்கணக் குறிப்பு.
அ) வினைத்தொகை
ஆ) உவமைத் தொகை
இ) பண்புத்தொகை
ஈ) அண்மொழித்தொகை
13 ) கடவு என்ற சொல்லின் பொருள் ----
அ) பாதை ஆ) படித்துறை
இ) வயலின் பெயர் ஈ) ஒரு அளவு
14 யார்? எது? ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அனமந்து உணர்த்தும் திணைகள்
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை அஃறிணை
இ) விரவுத்திணை , அஃறிணை
ஈ ) விரவுத்திணை , உயர்திணை
II அ) குறுவிளா (எவையேனும் 3 மட்டும்)
3 X 2 = 6
15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்குக.
17. நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?
18. - கலிவிழா, ஒலிவிழா -விளக்கம் தருக
II ஆ) (எவையேனும் 2 மட்டும் ) 2x2 =4
19. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்தை குறிப்பிடுக.
20. "புக்கில், தன்மனை" சிறு குறிப்பு வரைக.
21. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
II - இ) குறுவினா (எவையேனும் 7 மட்டும்)
7x2=14
22. கிணற்றுத்தவளை போல, அச்சாணி இல்லாத தேர் போல உவமைத் தொடர்களை சொற்றொடரில் அமைத்து எழுதுக
23. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
விலை, விளை, விழை
24. திருவளர்ச் செல்வன், திருவளர்செல்வன் - இவற்றில் சரியான தொடர் பாது?. அதற்கான இலக்கண விதி யாது ?
6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களுக்கான வினாத்தாள்கள் , விடைக்குறிப்புகள் , தினம் ஒரு ஆன்லைன் தேர்வு எழுத விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
0 Comments