தேசிய கல்வி தினம் ( நவம்பர் 11)
சிறப்பு வினாடி வினா - இயங்கலைத் தேர்வு
மௌலானா அபுல்கலாம் ஆசாத்
பிறந்த தினம்
வினா உருவாக்கம் -
'பைந்தமிழ் மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர், மதுரை .
80% மதிப்பெண் பெற்றும் சான்றிதழ்
கிடைக்கவில்லை எனில் 97861 41410 என்ற வாட்சாப் எண்ணில் தங்கள் பெயர் , படிப்பு , மாவட்டம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
***************** ************* *********
1) தேசிய கல்வி தினம் இந்தியாவில் ----- நாளில் கடைப்பிடிக்கப் படுகிறது.
அ) நவம்பர் 1
ஆ) நவம்பர் 11
இ) டிசம்பர் 01
ஈ) டிசம்பர் 11
விடை : ஆ ) நவம்பர் 11
2) சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் -----
அ) அபுல்கலாம் ஆசாத்
ஆ) அப்துல்கலாம்
இ) அம்பேத்கர்
ஈ) நரசிம்மராவ்
விடை : அ ) அபுல்கலாம் ஆசாத்.
3) ஆசாத் என்ற சொல்லின் பொருள் -----
அ) மகிழ்ச்சி
ஆ) விடுதலை
இ) நேர்மை
ஈ) கண்ணியம்
விடை : ஆ ) விடுதலை
4) 1992 ஆம் ஆண்டு அபுல்கலாம்
ஆசாத் மறைவிற்குப் பின் வழங்கப்பட்ட விருது
அ) பாரத ரத்னா
ஆ) தாமரைத்திரு
இ) பத்மவிபூஷன்
ஈ) பத்மபூஷன்
விடை : அ ) பாரத ரத்னா
5 ) ' கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை
நன்றே ' என்று கூறும் நூல் -----
அ ) நீதிநெறி விளக்கம்
ஆ) வெற்றி வேற்கை
இ) புறநானூறு
ஈ) ஆத்திசூடி
விடை : ஆ ) வெற்றி வேற்கை
6) ' கல்வி கரையில் கற்பவர்
நாள் சில' என்று ------ நூல் கூறுகிறது.
அ ) நாலடியார்
ஆ) நான்மணிக்கடிகை
இ) ஏலாதி
ஈ) திருக்குறள்
விடை : அ ) நாலடியார்
7) கற்கக் கசடற' - என்று கூறும் நூல்
அ) ஆத்திசூடி
ஆ) இன்னிலை
இ) திருக்குறள்
ஈ) பழமொழி
விடை : இ ) திருக்குறள்
8) ' கல்விக்கழகு ------ மொழிதல்
அ) கவனமுடன்
ஆ) இனிமையுடன்
இ) மகிழ்வுடன்
ஈ) கசடற
விடை : ஈ ) கசடற
9 ) ' வெள்ளத்தால் அழியாது
வெந்தழலால் வேகாது' அது ------
அ) புகழ்
ஆ) கல்வி
இ ) மானம்
ஈ) செல்வம்
விடை : ஆ ) கல்வி
10) ' கண்ணுடையர் என்போர் ------
அ) கற்றோர்
ஆ) பெற்றோர்
இ) மற்றோர்
ஈ) உற்றோர்
விடை : அ ) கற்றோர்
11 ) ' எம்மை உலகத்தும் யாம் காணோம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து " என்று கூறிய நூல் -------
அ) திருக்குறள்
ஆ) ஆசாரக்கோவை
இ) திரிகடுகம்
ஈ) நாலடியார்
விடை : ஈ ) நாலடியார்
12) மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் சிறப்புடையவன் ------
அ ) மன்னன்
ஆ) அமைச்சன்
இ) ஒற்றன்
ஈ) கற்றவன்
விடை : ஈ ) கற்றவன்
13) ' நீரளவே ஆகுமாம் நீராம்பல்
தான்கற்ற நூலளவே ஆகுமாம்
நுண்ணறிவு ' என்று கூறும் நூல்
அ) பழமொழி நானூறு
ஆ) மூதுரை
இ) புற நானூறு
ஈ) இனியவை நாற்பது
விடை : இ ) மூதுரை
14) ' சங்கத் தமிழ் மூன்றும் தா
என விநாயகரிடம் கேட்டவர் ------
அ) ஔவையார்
ஆ) பாரதியார்
இ) பொன்முடியார்
ஈ) நாகம்மையார்
விடை : அ ) ஔவையார்
15 ) ' கற்றலின் ------ நன்று'
அ) கேட்டல்
ஆ) பார்த்தல்
இ) பேசுதல்
ஈ) எழுதுதல்
விடை : அ ) கேட்டல்
16 ) ஆயிரம் கோவில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது
என்றவர் -----
அ) காமராசர்
ஆ) பாரதிதாசன்
இ) பாரதியார்
ஈ) அண்ணா
விடை : இ ) பாரதியார்
17) கல்விக் கண்திறந்தவர் என்று புகழப்படுபவர் ------
அ ) இராஜாஜி
ஆ) பக்தவச்சலம்
இ ) காமராசர்
ஈ) எம்.ஜி.ஆர்.
விடை : இ ) காமராசர்
18 ) யாருடைய பிறந்த நாள் தேசிய கல்வி தினமாகக் கொண்டாட்டப்படுகிறது?
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) அப்துல்கலாம்
இ) அபுல்கலாம் ஆசாத்
ஈ) அம்பேத்கர்
விடை : இ ) அபுல்கலாம் ஆசாத்
19 ) தமிழகத்தின் தற்போதைய கல்வி அமைச்சர் மாண்புமிகு -------
அ) துரைமுருகன்
ஆ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இ) தங்கம் தென்னரசு
ஈ) பொன்முடி
விடை : ஆ ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி
20 ) தற்போது தமிழக அரசால்
அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் -------
அ ) இல்லம் தேடிகல்வி
ஆ) உள்ளம் தேடி கல்வி
இ ) வீட்டைத்தேடி கல்வி
ஈ) நாட்டைத்தேடி கல்வி
விடை : அ ) இல்லம் தேடி கல்வி
************************ *****************
தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் சான்றிதழ்த் தேர்வை எழுத உங்களுக்கு விருப்பமா ? உங்களது வாட்சாப் எண்ணிற்கு வினா இணைப்பு வர வேண்டுமா ? உங்கள் பெயர் , படிப்பு இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்புங்கள். தினமும் தேர்வை எழுதி அரசுப்பணிக்கு ஆயத்தமாகுங்கள். வாழ்த்துகள்.
0 Comments