உலக வறுமை ஒழிப்பு தினம் - World Poverty Eradication Day - October - 17

 


      உலக   வறுமை  ஒழிப்புத்தினம் 

         ( World  Poverty  Eradication  Day )

                        17 • 10 • 2021


" இன்மையின்   இன்னாதது   யாதெனின்   இன்மையின் 

  இன்மையே      இன்னா     தது ."

                                                        ( குறள் :1041 )

    வறுமையைவிடத்    துன்பம்   தருவது   எது  என்று  ஆராய்ந்தால்   வறுமையைப்   போல்   துன்பம்  தருவது வேறு ஒன்றும்   இல்லை என்கிறார் வான் புகழ் வள்ளுவப் பேராசான்.


   " திறமையை  அழிக்கும்  ஆயுதம்  வறுமை "

                                                - அமர்த்தியா  சென்  -

"  எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் 

இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் " 

             வறுமை என்பது  ஒரு  தனி  மனித  அல்லது சமூகம் குறைந்த பட்ச   வாழ்க்கைத்  தரத்தை நிர்ணயிக்க உதவும் நிதி  ஆதாரங்களும், அத்தியாவசியங்களும் இல்லாத நிலையே  ஆகும். வறுமை  ஒழிப்புத்தினமானது  1987 - ஆம்  ஆண்டு   முதன்   முதலாக   பிரான்சின்  பாரிஸ்  நகரில்  கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும்  உலகம்  முழுவதும் வறுமை   தொடர்பான   விழிப்புணர்வால்  பசிக்கொடுமையிலிருந்து  மக்களை  விடுவிக்க   ஐக்கிய  நாடுகள்  சபை  1992 -- ஆம்  ஆண்டு  முதல்   அக்டோபர் 17-- ஆம்  நாளை  வறுமை  ஒழிப்புத் தினமாக  அறிவித்தது.

       வறுமை  என்பது  உணவு  இல்லாதது   மட்டுமன்றி, உணவு , உடை, உறைவிடம்  ,  கல்வி ,  வேலைவாய்ப்பு  , வருமானம்  போன்றவற்றையும்         உள்ளடக்கியதாக       உள்ளது. ஒரு  இடம்  அல்லது  நாட்டின்   அடிப்படையிலான  வாழ்க்கைத் தரத்திற்குக்   கீழ்  வாழும்   மக்களை   ஏழ்மை  நிலைக் கோட்டின்கீழ்  வாழ்பவர்களாகக்   கருதப்படுகின்றது.  ஒரு குறிப்பிட்ட   அளவு   வருமானத்தை  வைத்தே   ஏழ்மை  நிலை  அளவு சார்ந்து    மதிப்பிடப்படுகிறது.

       உலகின்   மிகப்பெரிய 3 பணக்கார நாடுகளின்  வருமானத்தை  விட   46-- ஏழைநாடுகளின்   வருமானம்  குறைவாகவே உள்ளது. வறுமையின்  காரணமாக   தினமும்  30,000 குழந்தைகள்   இறப்பதாக   யுனிசெஃப்   கூறுகிறது . ஆசியா. ஆப்ரிக்கா , அமெரிக்கா ,  லத்தீன்  போன்ற  நாடுகளில்  70 - கோடிக்கும்  மேற்பட்ட   மக்கள்   வறுமையால்  இன்றளவும்  வாடுகின்றனர்.  இந்த   வறுமையை  ஒழிக்க  பல நாடுகள் வெவ்வேறான  திட்டங்களைச்  செயல்படுத்தி வருகின்றன.  வறுமையில்  உழல்வது   ஒருவரின்  மூளைத்திறனைப் படிப்படியாகக் குறைப்பதாக  கருதப்படுகின்றது.

இந்திய வறுமை  ஒழிப்புத்   திட்டங்கள் :

        .உலகில்  வாழும்  ஏழைகளில்   மூன்றில்   ஒரு   பங்கு இந்தியவில்   வாழ்கின்றனர் .  1950 - தில்  இருந்து  இந்திய  அரசும் , அரசு  சாரா  நிறுவனங்களும்   வறுமையை ஒழிக்கப்  பல திட்டங்களை செயல்படுத்தி  வருகின்றன. அவை  உணவு மற்றும்  இதர  அவசியத்  தேவைக்கான  கடன்கள்  பெற அனுகுவது,  விவசாயத்  தொழில்நுட்பங்கள்  ,   கல்வி  மேம்பாடு மற்றும்  குடும்ப  நலத்  திட்டங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கினர். இந்த   வழிமுறைகள்  வறுமையை  ஒழிக்க  , வறுமைக்கோட்டினை  பாதியளவுக்கு  மேல் குறைக்கவும் , எழுத்தறிவின்மையைக்   குறைக்கவும் ,  மற்றும்  ஊட்டச்சத்தின்மை யைக்  குறைக்கவும்  உதவிசெய்தன.  1990 - ஆம்  ஆண்டுகளின்  நடுப்பகுதியிலிருந்து   30 - மில்லியன்  மக்கள்  பசியின்   வரிசைப்  பட்டியலில்  சேர்க்கப்  பட்டனர்.  மேலும்  46%குழந்தைகள்  எடை குறைவாகவே   இருந்தனர்.

       இந்தியாவும்   வறுமையை   ஒழிக்க   பல்வேறு முறைகளில்தொடர்ந்து   முயற்சிகளை   மேற்கொண்டு  வருகின்றது. இந்தியாவில்   இன்னும்  30 - கோடி  மக்கள்  வறுமைக் கோட்டில்   இருப்பதாக   அறிக்கைகள்   தெரிவிக்கின்றன. இந்தியாவில்   மத்திய  அரசு  மட்டும்  ,  ஓராண்டிக்கு    மூன்றுலட்சம்   கோடிகள்   வறுமை   ஒழிப்புக்காகச்  செலவிடுகிறது. அதற்கு  மேல்  மாநில  அரசுகளும்   வறுமை  ஒழிப்புக்கான பல்வேறு  திட்டங்களை  நிறைவேற்றிவருகின்றன. 

வறுமை  ஒழிப்பு  முயற்சிகள் :

                    1950 - ஆம்  ஆண்டுகளின்   தொடக்கத்திலிருந்து  அரசு  பல்வேறு  திட்டங்களைத்  தீட்டி  ஏழை  மக்கள்   உணவு உற்பத்தியில்  தன்னிறைவு  அடைவதில் உதவ பலமுயற்சிகளை  நிலைநிறுத்தியது . அடிப்படைப்  பொருட்கள்  கிடைக்க  வேண்டி வழிவகை   செய்தன.

இந்தியாவில்   கிராமப்புற  வறுமை ஒழிப்பு :

* பிரதான்  மந்திரி  கிராமின்  ஆவாஸ்  போஜனா  -- கிராமப்புற  ஏழைகளுக்கான  வீடு  வழங்கும்  திட்டம்.

* அடல்  ஓய்வூதியத்   திட்டம்  - ( APY ) இந்தியாவில்  ஓய்வூதியத்தை  அதிகரிப்பது  இத்திட்டத்தின்   நோக்கம்.

* சன்  ஆதர்ஷ்  கிராம  போஜனா  -- ( SAGY )-- கிராமப்புறங்களில்  உள்கட்டமைப்பு   வளர்ச்சியை  மேம்படுத்துவதை    நோக்கமாகக்   கொண்டது.

* பிரதான்  மந்திரி  பசல்  பீமா  போஜனா-- 

    பாசன  முதலீடுகளை  ஈர்ப்பதை   நோக்கமாக்  கொண்டது.

* தீன்தியான்   உபாத்யாய   கிராமின்  கெளசல்யா  போஜனா-

   கிராமப்புற   இளைஞர்களின்  திறன்   மேம்பாட்டுக்கான  திட்டம்.

* மகாத்மா காந்தி தேசிய  ஊரக  வேலைவாய்ப்புச்  சட்டம் -

    கிராமபுற   தொழிலாளர்களுக்கு   குறைந்த பட்ச  நாட்கள் வேலைக்கு  உத்திர  வாதம்   அளிப்பதன்  மூலம்  வாழ்வாதாரப்  பாதுகாப்பை வழங்குதல். 

* தேசிய  குடும்ப நலத்   திட்டம்  :

      வறுமைக்  கோட்டிற்கு  கீழுள்ள  ஒரு  நபர்  இயற்கை  மரணம்   அடைவதால்   அவரைச்   சார்ந்தவருக்கு  நிதி இழப்பீடு வழங்கப்படுகிறது .வறுமை  என்பது   வேலையின்  வருமான  நிலை  மிகவும் குறைவாக   இருப்பதால்   மனித   தேவைகளை  பூர்த்தி செய்யமுடியாத   நிலையாகும் . இவை  நகர்ப்புறங்களை விட  கிராமப்புறங்களில்  வறுமை  அதிகமாக  உள்ளது. எனவே  அனைத்து   மக்களும்  குறைந்த பட்ச  அடிப்படைத் தேவைகள்  நிறைவடைய   முயற்சிகள்  செய்யவேண்டும். அரசின்  வழிகாட்டுதலின் படி  வறுமையை  ஒழிப்பதற்காக  இணைந்து  செயல்பட்டு  வெற்றிகொள்வோம்.!

Post a Comment

0 Comments