உலக எலும்புப்புரை தினம்
( World Osteoporosis Day )
20 • 10 • 2021
அக்டோபர் 20 - ஆம் நாளை உலக சுகாதார நிறுவனம் எலும்புப்புரை ( ஆஸ்டியோபோரோசிஸ்) தினமாக அறிவித் துள்ளது. இந்த நாள் உலகம் முழுவதும், உலக எலும்புப்புரை நோய் தினம் கடைபிடிக்கின்றது. இது இங்கிலாந்தின் தேசிய எலும்புப்புரை கழகத்தால் 1996 -- ம் ஆண்டு உலக எலும்புப்புரை தினமாக தொடங்கப்பட்டது . பின்னர் 1997 -- ம் ஆண்டு முதல் சர்வதேச எலும்புப்புரை அறக்கட்டளையால் இந்த விழிப்புணர்வு நாள் நடத்தப்படுகிறது.இது மனித இனத்தை மிகவும் அச்சத்திற்கு உள்ளாக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லி நோய், எலும்புப்புரை நோய் எனப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஆகும்.
இவற்றால் இந்தியாவில் 50 % பெண்கள் மாதவிடாய் நின்ற பின் எலும்புப்புரை நோயால் துன்பப்படுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலும்புப்புரை நோயைக் கண்டறிந்து தடுக்கும் விதமாகவும் சிகிச்சை அளித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக இத்தினம் அர்ப்பணிக்கப்படுகிறது. அனைவரும் தங்கள் எலும்புகளையும் , தசைகளையும் பாதுகாக்க , மக்கள் அனைவரும் எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மருத்துவர்களையும் , சுகாதார அதிகாரிகளையும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப் படுகிறது.
எலும்புப்புரை நோய் :
எலும்புத் திசுக்கள் சிதைவடைவது இந்த நோயின் இயல்பு ஆகும். எலும்புகள் உடையும் தன்மையும் பலவீனம் அடைவதும் , முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்புகள் முறிவும் ஏற்படுகிறது. இந்தநோயால் ஆண்களை விட ப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயால் வலி , முதுகுத்தண்டு, இடுப்பு எலும்புடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வரை நோயாளி தனக்கு நோய் இருப்பதை உணரவோ , அறியவோ முடிவதில்லை . எனவே இந்த நோய்க்கு " மெளன நோய் " என்று பெயர் பெறுகிறது.
பெண்களைத் தாக்கும் எலும்புப்புரை நோய் :
இந்த நோயானது பெண்களை அதிகம் பாதிப்படையச் செய்கிறது. மாதவிடாய் நின்ற பின் உண்டாகும் இயக்கு நீர் ( ஹார்மோன்) மாற்றங்களால் பெண்களுக்கு எலும்பு இழப்பு வேகமாக ஏற்படுகிறது . எனவே பெண்களுக்கான பாதிப்புகள் அதிகமாகிறது . பெண்கள் எலும்புகளின் உறுதிக்கு அவர்களின் பாலின ஹார்மோனான " ஈஸ்ட்ரோஜென் " பங்கு மிக முக்கியமான தாகிறது. பெண்கள் 40 - வயதைக் கடக்கும் போது அல்லது மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் போதும் ஈஸ்ட்ரோஜென் அளவு ஹார்மோன் சுரப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கிப் பின்பு நின்றுவிடும். இதன்காரணமாக எலும்புகளுக்குச் சத்துக் கிடைக்காமல் போவதால் அவர்கள் " ஆஸ்டியோபோரோசிஸ் " நோய்க்கு எளிதில் ஆளாகின்றனர் . இது முதன்மைக் காரணமாக இருந்த போதும் , அதுபோலவே மெனோபாஸ் நிலைக்கு முன்னதாக அறுவைச் சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர் களுக்கும் இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு நிற்பதால் எலும் புத் தேய்மானம் ஏற்படுகிறது. இந்த எலும்புகள் தேய்மானத் தால் பலகீனமடையும் போது பலமாக இருமினாலும் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது . வேகமாக நடந்து செல்லும் போது தடுக்கினாலும் கூட எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் பெண்களிடமும் காணப்படும் இதய நோய் , புற்றுநோய் களை விட எலும்புச்சிதைவு நோய் அதி கமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது அதிர்ச்சி தரும் செய்திகளாகிறது.
30 - வயதுக்கு மேல் கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைப்பாட்டால் சிலருக்கு எலும்புத் தேய்மானம் ஏற்பட்டுதீவிரமடைந்து எலும்பு மிகவும் பலவீனமாகி , சிறு அடி பட்டாலும் , உட்கார்ந்து எழும்பும் போதும் கூட நொறுங்கி விடும் ஆஸ்டியோபோரோசிஸ் நிலைக்குத் கொண்டு செல்லும் . மேலும் இது தண்டுவடத்தைத் தான் அதிகம் பாதிக்கின்றது. அடுத்து இடுப்பு மூட்டுகளை பாதிப்படையும் , சோர்வு , களைப்பு , சதைவலி மற்றும் எலும்பு வலிளைத் தரும் . எனவே இந்த நோயை " சைலன்ட் கில்லர் " என அழைக்க ஏதுவாகிறது . அந்த அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்து கின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள கால்சியம், வைட்டமின் டி நிறைந்த பால் , தயிர் , கீரைகள், சூரிய ஒளி ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் நோய் பாதிப் பை தடுக்கலாம் . மேலும் தற்காத்துக் கொள்ள சரியான உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் . புகைத்தல் , மது போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும். மன அழுத்தம் குறைக்கும் யோகா , தியானம் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் தடுக்கலாம். மேலும் உடல் எடை , கால்சியம் , வைட்டமின் டி போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
நோய்க்கான ஆய்வுகள் :
பெண்கள் 30 - வயதிற்கு மேல் எலும்பு , தசை சம்பந்தமானவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் 65 - வயதும் அதற்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் எலும்புச் செறிவிற்கான ஆய்வைச் செய்தல் வேண்டும். இவற்றை அமெரிக்க தடுப்புச் சட்டம் சேவைகளின் செயற்படை ( U S P S T F ) 2002 - ம் ஆண்டு பரிந்துரைத்தது. ஆபத்தும் , பாதிப்பும் அதிகமாகும் வயதான 60 - லிருந்து 64 - வயதுடைய பெண்களை ஆய்வு செய்யவேண்டும் என இந்தச் செயற்பாடை பரிந்துரைத்து. இந்த நோய் ஆண் பெண் இருபாலரையும் பாதிக்கும் எனினும் பெண்களுக்கேஅதிக பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களிடம் அதிகமாக க் காணப்படுகிறது. எந்த விதமான நோயையும் குணப்படுத்தவும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சிகள் மிகவும் இன்றியமையாததாகிறது. அவை எளியமுறையில் செய்யப்படும் நடைப்பயிற்சி , ஓட்டம் , படியேறுதல் , எடை தாங்கும் உடற் பயிற்சிகள் போன்றவை எலும்பிழப்பைத் தடுத்து எலும்புகளைப் பலப்படுத்தும் .
முதியவர்களுக்கு இந்த நோய் அதிகமாக காணப்படுகின்றது . எனவே இவர்கள் வேகநடையை எலும்புப்புரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மாதவிடாய்க்குப் பின்பும் முதிய பெண்களுக்கு முதுகுத் தண்டு உடையும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் தொடர்வலி முதுகு வளைதல் , உயரம் குறைதல் போன்றவை உண்டாகி உணவை உண்ணுவதிலும் , மூச்சு விடுவதிலும் , செரிமானத்திலும் பிரச்சனைகள் ஏற்படுத்துகின்றன. சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் அவை: தொடர்ந்து முதுகு வலியிருத்தல், இடுப்பு அல்லது முதுகுத்தண்டு உடைதல், வளைந்த முதுகுத் தோற்றம் , மற்றும் நாளாக ஆக உயரம் குறைத்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்டு ஒரளவு எலும்பிழப்பு நோயை ஊகித்து சரியான மருத்துவம் மேற்கொண்டால் பாதிப்புகளைக் குறைத்து நலம் காண முடியும்.
பயன்படுத்தும் மருந்துகளால் ஏற்படும் எலும்புப்புரை நோய் :
சில மருந்துகளாலும் இந்த எலும்புப்புரை நோய் உண்டாகும் அபாயம் அதிகமாக உள்ளது. ஸ்டீராய்டுகள் மற்றும் வலிப்பு நோயை அடக்க உதவும் மருந்துகள் போன்றவை மரபு சம்பந்தப்பட்ட தொடர்புகளாக இருக்கின்றன. எனவே நோய்களைத் தீர்க்க மருந்துகள் மட்டுமன்றி உணவே மருந்து என்பதனையும் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது உலகம். ஆகையால் உடற்பயிற்சியும் , சரியான நேரத்தில் சரியான உணவுமுறையும் கடைபிடித்தால் இக் கொடிய நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் . இவற்றின் பாதிப்பை இளவயது பெண்களிடம் இந்த நோய்பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் தற்காப்பு முறையை ஏற்படுத்தலாம் .தற்காப்பு முறைகளைப் பின்பற்றி எலும்புப் புரை நோயை வென்றுநோயில்லா உலகம் படைப்போம் என உறுதி ஏற்போம் .!
0 Comments