PG - TRB - தமிழ் - வினாத்தாள் - 2008 - 2009 வினாக்களும் விடைகளும் / PG - TRB - TAMIL 2008 - 2009 ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2008 - 2009

வினாக்களும் விடைகளும் - பகுதி - 1

01 முதல் 50 வரை - வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER - 2008 - 2009

QUESTION & ANSWER - PART - 1

****************    *************   ***********

1 . ரௌலட் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட போது வைசிராயாக இருந்தவர் யார்?

A) இர்வின் பிரபு

B) செம்ஸ்ஃபோர்டு பிரபு

C) வேவல் பிரபு

D) வெலிங்டன் பிரபு

2 . கீழ்க்கண்டவற்றுள் எது மிருதுவானது?

A) சோடியம்

B) அலுமினியம்

C) இரும்பு

D) லித்தியம்

3 . நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் அல்லாத யார் ஒருவர் சபை நடவடிக்கைகளில் பங்கு கொள்ள இயலும்?

A) துணை குடியரசுத் தலைர்

B) தலைமை நீதிபதி

C) அட்டர்னி ஜெனரல்

D) தலைமை தேர்தல் ஆணையர்

4 . எந்த ஆற்றின் குறுக்கே இந்திரா சாகர் அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது?

A) மகாநதி

B) கோதாவரி

C) கிருஷ்ணா

D) நர்மதா

5 . புவி தன் அச்சில் சுழல்கிறது என்பதை முதலில் தெரிவித்த வானியல் வல்லுநர் பெயரைக் குறிப்பிடுக.

A) பாஸ்கரா

B) ஆரியபட்டர்

C) வராஹிமித்திரர் 

D) கல்பனா சாவ்லா

6. கீழ்க்காணும் கோண அளவுகளில் அளவிடப்படாத அளவுகோல் மற்றும் காம்பசின் உதவியால் எந்த கோணத்தை வரைய இயலாது?

A) 75°

B) 90°

C) 50°

D) 22 1/2

7. ஓர் அலைவுப் பல்கோணத்தில் புள்ளிகள் எதற்கு எதிராகக் குறிக்கப்படுகிறது?

A) வகுப்பு இடைவெளியின் நடுப்புள்ளி VS அதிர்வெண்

B) வகுப்பு இடைவெளியின் கீழ்வரம்புப்புள்ளி VS அதிர்வெண்

C) வகுப்பு இடைவெளியின் மேல்வரம்புப்புள்ளி VS அதிர்வெண்

D) வகுப்பு இடைவெளியின் உண்மை வரம்புப்புள்ளி Vs அதிர்வெண்

8. AICTE நிறுவப்பட்ட ஆண்டு 

A) நவம்பர், 1945

B) நவம்பர், 1955

C) நவம்பர், 1985 

D) நவம்பர், 1975

9. ஜான்டூயின் வெளியீடுகளில் முக்கியமானது

A) குழந்தைப் பருவ ரகசியம்

B) இன்றையக் கல்வி

C) மனிதனின் கல்வி

D) சமுதாய ஒப்பந்தம்

10. டேவிட் ஆசுபெல்லின் கருத்துப்படி 'வாய்வழிக் கற்றல்' என்பது

A) புதியமொழி ஒன்றைக் கற்றுக் கொள்வது

B) வாய்மொழிப் பயிற்சி

C) வாய்வொழித் தகவல்களைப் புரிந்துகொள்வது

D) செயலற்ற கற்றல் அனுபவம்

11. பல்கலைக்கழக மானியக் குழு(UGC)வின் தெற்கு மண்டல
அலுவலகம் அமைந்துள்ள இடம்

A) ஹைதராபாத்

B) பெங்களூர்

C) சென்னை

D) மும்பை

12. தேசிய மக்கள்தொகைக் கொள்கை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

A) 1976

B) 1979

C) 1986

D) 1977

13. ஆப்ரகாம் மாஸ்லோ-வின் படிநிலைகளில் ‘தன்னிறைவு' என்பது

A) முதல் நிலை

B) இறுதி நிலை

C) மூன்றாம் நிலை 

D) நான்காம் நிலை


14. 'Emile' என்பதன் ஆசிரியர்

A) டூயி

B) பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

C) ஃப்ரோபெல்

D) ரூஸோ

15. கல்லூரிகள் இணைவு வகை பல்கலைக்கழகம் என்பதல்லாதது

A) சென்னை பல்கலைக்கழகம்

B) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

C) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

D) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

16. மனித உரிமைகள் தினம் என்பது

A) டிசம்பர் 10

B) டிசம்பர் 7

C) டிசம்பர் 26

D) டிசம்பர் 17

17. கீழ்க்கண்டவற்றுள் எது கல்வி ஏற்பாடு வளர்ச்சிக்கு தொடர்பில்லாதது?

A) டைலர் மாதிரி 

B) அசுபெல்லின் மாதிரி

C) டாபா மாதிரி

D) ஹன்கின்ஸின் மாதிரி

18. முன் ஆரம்பக்கல்வியின் முக்கிய நோக்கமானது

A) உடல் வளர்ச்சி அதிகரித்தல்

B) மனவளர்ச்சியை அதிகரித்தல்

C) சமுதாய வளர்ச்சியை அதிகரித்தல்

D) ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரித்தல்

19. ஒரு குழந்தையின் கற்றல் செயல்பாடுகளில் ஏதேனும் புதிதாக அல்லது சுயமானதாக ஓர் ஆசிரியர் கண்டறிந்தால் அந்தக் குழந்தையானது

A) புத்திசாலி

B) ஆக்கத்திறனுடையவர்

C) திறனாய்வுமிக்கவர் 

D) ஊக்குவிக்கப்பட்டவர்

20. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று கற்றல் பகுதி இல்லாதது?

A) அறிவுப் பகுதி 

B) உள-இயக்கப்பகுதி

C) உடலியல் பகுதி

D) உணர்ச்சிப் பகுதி

21. கட்டுரையாவது ‘சிதறுண்ட சிந்தனை' என்றவர்

A) அட்சன்

B) ஜான்சன்

C) பேக்கன்

D) கிராபே

22 கதைகளின் தோற்றம், பரவிய விதம், அதற்குரிய காரணங்கள் ஆகியவற்றை அறிய உதவும் கோட்பாடு எது?

A) வரலாற்றுப் புவியியல் கோட்பாடு

B) அமைப்பியல் கோட்பாடு

C) இலட்சியக் கோட்பாடு

D) சொல்திறன் கோட்பாடு


23. 'நிலம், நீர், வளி, விசும்பு' என்ற நான்கின் மறு பதிப்பு எனக்
குமட்டூர்க் கண்ணனார் யாரைப் பாடுகின்றார்?

A) பல்யானைச் செல்கெழு குட்டுவன்

B) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

C) நார் முடிச்சேரல்

D) கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

24. 'உவமைப் போலி' என்ற பெயருடைய அணி

A) ஒட்டணி

B) தன்மையணி

C) ஏது அணி

D) நிரனிறையணி

25. 'மாபெரும் மீட்பர் நீயோ?' என இயேசுபிரானை வினவியவன்
யார்?

A) இராயப்பர்

B) அன்னாஸ்

C) கைப்பாஸ்

D) யூதாஸ்

26. 'தமிழகம் முழுவதையும் காலால் அளந்தோம்
மக்கள் மனங்களை யாழால் அளந்தோம்'
- எனப் பாடியவர் யார்?

A) பரணர்

B) கபிலர்

C) ஔவையார்

D) நல்லந்துவனார்

27. தேசியக் கவிஞர் எனவும் காந்தியக் கவிஞர் எனவும் மதிக்கப்படுபவர் யார்?

A) நாமக்கல் கவிஞர் 

B) கவிமணி

C) பாரதியார்

D) பாரதிதாசன்

28. எந்த மொழியில் மாறுதல்கள் தடையின்றி நேர்ந்த வண்ணம் இருக்கும் என மு.வ. கூறுகிறார்?

A) செயல்மொழி

B) உணர்ச்சி மொழி

C) இலக்கியம் நிறைந்த மொழி

D) இலக்கியம் இல்லாத மொழி

29. திருவாசக அடைக்கலப்பத்து எத்தலத்தில் உறையும்இறைவனைப் பாடியது?

A) திருவிடைமருதூர் 

B) திருப்பெருந்துறை

C) திருவாஞ்சியம் 

D) திருப்பனையூர்

30. குகனின் தலைநகரம்

A) சிருங்கிபேரம் 

B) மதுராபுரி

C) மிதிலை

D) அயோத்தி

31 'கவிதை கற்பனை, உணர்ச்சி ஆகியவற்றின் மொழியாகும்' என்று கூறியவர்

A) ஆசிலிட்

B) கோல்ரிட்ஜ்

C) ஷெல்லி

D) கார்லைல்


32. நாட்டுப்புறத் தெய்வங்களுக்குக் கொண்டாடப்படும் விழாவைக் கொடை' என எம்மாவட்ட மக்கள் கூறுகிறார்கள்?

A) கோயம்புத்தூர் 

B) சேலம்

C) திருநெல்வேலி

D) தருமபுரி

33. கலித்தொகையில் 'நும்மொடு துன்பந் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எமக்கு?' எனக் கூறியது யார்?

A) தலைவி

B) தோழி

C) செவிலி

D) தலைவன்

34. மன்னுறு தொழில், தன்னுறு தொழில் எனத் தன்னுள் இரு கூறுகளையுடைய திணை எது?

A) நொச்சி

B) கரந்தை

C) உழிஞை

D) வெட்சி

35. பண்பாடு கெட்டவர்கள் பலபாடு படுவார்கள் எனக் கூறியது யார்?

A) யூதாஸ்

B) கைப்பாஸ்

C) இராயப்பர்

D) அன்னாஸ்

36. 'பொன்னகரம்' சிறுகதையை எழுதியவர் யார்?

A) மௌனி

B) கு. அழகிரிசாமி

C) ஜெயகாந்தன் 

D) புதுமைப்பித்தன்

37. தமிழ் இலக்கியத்தில் முதல் அந்தாதி நூல் எது?

A) வெண்பா அந்தாதி

B) நூற்றந்தாதி

C) அற்புதத் திருவந்தாதி

D) திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

38, இரு, மூ முதலான பெயரடைகள் எதை உணர்த்துகின்றன?

A) எண்ணப்படும் முறையை

B) எண்ணிக்கை அளவை

C) கற்கும் முறையை

D) சொல்லும் முறையை

39. 'ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக்கீழ் அடர்ந்திட்டு
அருள் செய்த அது கருதாய்' இதில் இடம்பெறும் அரக்கன் பெயர் என்ன?

A) பகாசுரன்

B) இரணிய கசிபு

C) இரணியாட்சன் 

D) இராவணன்

40. 'இம்மலை தனியே நீர் இங்கு இருப்பதே' என்று நைந்து கூறியவர் யார்?

A) திண்ணனார்

B) நாணன்

C) காடன்

D) நாகன்


41. உணர்வின் சிறப்பை ஒட்டிய சிறுகதையே சிறந்தது என்று
கூறியவர் யார்?

A) செட் ஜலிக்

B) எட்கர் ஆலன்போ

C) சோமர்செட் மாம் 

D) செகோ

42. 'சமுதாயத்தின் தனியுரிமைப் பத்திரம்' எனப் பேரறிஞர் மாலினோவஸ்கி கூறுவது

A) புராணக் கதைகள் 

B) நம்பிக்கைகள்

C) வழக்கங்கள்

D) ஆட்டங்கள்

43. மானம் வரின் உயிர் நீப்பர் எதனைப் போன்றவர்?

A) புலி

B) சிங்கம்

C) கவரிமான்

D) நரி

44. ஆசிரியப்பாவிற்குரிய ஓசை எது?

A) துள்ளலோசை 

B) அகவலோசை

C) செப்பலோசை 

D) தூங்கலோசை

45. பழங்கால இயற்கை செய்யும் புதுக்காட்சி பருகு தம்பி எனப்
பாடியது யார்?

A) பாரதியார்

B) கவிமணி

C) பாரதிதாசன்

D) கண்ணதாசன்

46. "எதிரிகளுக்கு மதம்பொழியும் யானை, எங்களுக்குக் குளம்படியும் யானை”

 என ஒளவையார் யாரைப் பாடினார்?

A) சேரன் செங்குட்டுவன்

B) அதியன் அஞ்சி

C) சோழன் நல்லுருத்திரன்

D) பாண்டியன் நெடுஞ்செழியன்

47. பொருநராற்றுப்படையில் ஆற்றுப் படுத்தும் பொருநன் எவ்வகையைச் சார்ந்தவன்?

A) ஏர்க்களம் பாடுவோன்

B) போர்க்களம் பாடுவோன்

C) பரணி பாடுவோன்

D) கலம்பகம் பாடுவோன்

48. ஒரு மெய்யின் முன் அம்மெய்யே வந்து மயங்கும் மயக்கம்

A) வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

B) உடம்படுமெய்

C) சந்தியக்கரம்

D) உடனிலை மெய்ம்மயக்கம்

49. சுந்தரருக்காகச் சிவபெருமான் யாரிடம் தூது சென்றார்?

A) சங்கிலி நாச்சியார் 

B) மங்கையர்க்கரசியார்

C) பரவை நாச்சியார் 

D) திலகவதியார்

50 ) காளத்தி மலை அருகில் ஓடும் நதி எது ? 

A ) பாலாறு 

B ) பொன்முகலியாறு

C )  வையை 

D ) காவிரி 


*****************   ****************   ********


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********





Post a Comment

0 Comments