ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2008 - 2009
வினாக்களும் விடைகளும் - பகுதி - 2
51 முதல் 100 வரை - வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2008 - 2009
QUESTION & ANSWER - PART - 2
**************** ************* ***********
51 சமுதாயத்தின் போக்கையே திருத்தவல்லதாகவும் மாற்றியமைக்கக் கூடியதாகவும் உள்ளது எவ்வகை இலக்கியம் என்று மு.வ. கூறுகிறார்?
A) கலம்பகம்
B) பரணி
C) நாவல்
D) காப்பியம்
52. பலரின் அறிவையும் ஒருவரின் உண்மைத் தன்மையையும் உணர்த்துவது எது?
A) தாலாட்டு
B) நம்பிக்கை
C) தொழில்பாடல்
D) பழமொழி
53. சேரமன்னர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக கொண்ட சங்க நூல் எது?
A) புறநானூறு
B) அகநானூறு
C) பரிபாடல்
D) பதிற்றுப்பத்து
54. பொருளோடு பொருள் இயைய வைத்து ஒப்புமை தோன்றக் கூறும் அணி எது?
A) உவமையணி
B) தன்மையணி
C) விபாவனை அணி
D), தீவக அணி
55. “என்னை முழுக்காட்டி - என்னையே கரைத்துக் கொண்டு அங்கிருந்து வருகிறது'
- எனச் சிற்பி கூறுவது என்ன?
A) நீரோடை
B) சிற்றோடை
C) ஒரு கிராமத்து நதி
D) வையை நதி
56. “சாபவிமோசனம் கண்டாலும் பாவ விமோசனம் கிடையாதா” எனத் தேம்பியது யார்?
A) அகலிகை
B) அருந்ததி
C) ரம்பை
D) மேனகை
57. 'நாவலந் தண்பொழில்' என்றழைக்கப்படும் நாடு
A) தாய்லாந்து
B) இந்தியா
C) பர்மா
D) மலேசியா
58. தமிழிலக்கண நூலார், ஓர் எழுத்துப் பிறந்து நின்று முடியும் கால அளவையை எவ்வாறு கூறுவர்?
A) மாத்திரை
B) நொடி
C) மணித்துளி
D) இமைப்பொழுது
59. 'அடியேன் உன் அடைக்கலமே' எனத் திருப்பெருந்துறையில் பாடியவர் யார்?
A) மாணிக்கவாசகர்
B) திருஞானசம்பந்தர்
C) திருநாவுக்கரசர்
D) சுந்தரர்
60. 'உம்மை திட்டியில் தெரியக் கண்டேன், திடுக்கமும் தீர்ந்தன்றே' என்று நபிகள் நாயகத்திடம் கூறியது யார்?
A) பெண்மான்
B) ஆண்மான்
C) ஆடு
D) பசு
61 கண்ணாலும் செவியாலும் நுகரத் தக்க கலை என்று இலக்கிய மரபு நூலில் கூறப்படும் கலை யாது?
A) சிற்பம்
B) இயல்
C) நாடகம்
D) ஓவியம்
62 ஆசை நிறைவேறுதற்குரிய கருவி' என்று சிக்மண்ட் பிராய்டு எதனைக் கூறுகிறார்?
A) தாலாட்டு
B) பழங்கதைகள்
C) பழமொழி
D) விடுகதை
63. 'பெரும! செல் இனி அகத்து' என்று புதல்வனிடம் கூறியது யார்?
A) தலைவன்
B) தலைவி
C) தோழி
D) பாங்கன்
64. நாடு காவலுக்கு உரியவராக நம்பியகப்பொருள்யாரைக் குறிப்பிடுகின்றது?
A) வேளாளர்
B) அரசர்
C) வணிகர்
D) அந்தணர்
65. வாழ்வு மாயமென்னும் உண்மை மனத்திற் கொள்ளாமல் நாளும் தைந்திடுதல் எதைத் தரும்?
A) சினம்
B) உவகை
C) அழுகை
D) நகைப்பு
66. அடிபுதை அரணம் என்பது எப்பொருளைக் குறிக்கின்றது?
A) காலணி
B) சிலம்பு
C) சதங்கை
D ) குழை
67. தமிழ் மூவாயிரம் என்றழைக்கப்படும் நூலின் பெயர்
A) திருமந்திரம்
B) திருவாசகம்
C) பெரியபுராணம்
D) கம்பராமாயணம்
68. ஒலி நூலார் கொள்கைப்படி யகரமும் வகரமும் எவ்வகையைச் சார்ந்தது?
A) மெய்
B) உயிர்மெய்
C) அரையுயிர்
D) உயிர்
69. "சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்” என வேண்டுபவர் யார்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சேந்தனார்
D) மாணிக்கவாசகர்
70. கண்ணப்பநாயனார் அவதரித்த திருநாட்டின் பெயர் என்ன?
A) திருப்பூந்துருத்தி
B) திருவீழிமிழலை
C) தொண்டை நாடு
D) பொத்தப்பி
71 . கலையின்பம் தவிர வேறொரு பயனும் கருதாமல் புலவர்
இயற்றியது எவ்வகை இலக்கியம்?
A) நேர் இலக்கியம்
B) சார்பு இலக்கியம்
C) வழி இலக்கியம்
D) இடை இலக்கியம்
72. பண்ணுடன் பாடப்படாத நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் சிறகில்லாப் பறவைகள்' என்று கூறியவர்
A) குரோகன்
B) அலன் டாண்டீஸ்
C ) மரியாலீச்
D) சத்தியார்த்தி
73. "கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல”
இடம்பெறும் நூல் எது?
A) நற்றிணை
B) அகநானூறு
C) குறுந்தொகை
D) ஐங்குறுநூறு
74. நெடில் தொடர் குற்றியலுகரச் சொல் எது?
A) போவது
B) சால்பு
C) பட்டாங்கு
D) காசு
75. "அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான்” - அவன் யார்?
A) கண்ணன் - என் தோழன்
B) கண்ணன் - என் குழந்தை
C) கண்ணன் - என் சேவகன்
D) கண்ணன் - என் சீடன்
76. அறிவியற் கலைகளின் அரசி எது?
A) இயற்பியல் துறை
B) கணிதத் துறை
C) விலங்கியல் துறை
D) தாவரவியல் துறை
77.ஒரு கல்லினை உதைக்கும்போது ஒருவருக்கு அடி.ஏற்படுவது எதனால்?
A) எதிர்வினை
B) நிறை
C) திசைவேகம்
D) உந்தம்
78. கீழ்க்காணும் துறைமுகங்களில் எத்துறைமுகம் இயற்கையான துறைமுகம் அல்ல?
A) கொச்சின்
B) சென்னை
C ) மும்பை
D) பாரதீப்
79. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் 10,000 ஓட்டங்களை டெஸ்ட் ஆட்டங்களில் எடுத்த ஆறாவது
மட்டை வீரரின் பெயர் என்ன?
A) சச்சின் டெண்டுல்கர்
B) வீரேந்திர சேவாக்
C) சௌரவ் கங்குலி
D) ராகுல் திராவிட்
80. வந்தவாசிப் போர் யார் யாருக்கு இடையில் நடைபெற்றது?
A) மராட்டியர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்கள்
B) ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
C) ஆங்கிலேயர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்கள்
D) மராட்டியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்
81. நேர்வழி திட்டத்தை உருவாக்கியவர்
A) பி.எப், ஸ்கின்னர்
B) இ.எல். தார்ண்டைக்
C) எல்.பி. பாவ்லவ்
D) கிளார்க். எல். ஹல்
82. கீழ்க்கண்ட குழுக்களுள் எது இடைநிலைக் கல்வியின் வலுவற்ற நிலையை முதன்முதலில் கண்டறிந்து, அதனை மேம்படுத்த வழிவகை கூறியது?
A) தாராசந்த் கமிட்டி (1948)
B) இடைநிலைக் கல்விக் குழு (1954)
C) பல்கலைக்கழக கல்விக் குழு (1949)
D) கல்விக் குழு (1966)
83. எந்த வயதிற்குப்பின் அளக்கப்படும் நுண்ணறிவுச் சோதனை மதிப்புகள் நிலையானது?
A) ஒன்று
B) இரண்டு
C ) ஐந்து
D) இருபது
84. வலுவூட்டுதலுடன் கூடிய தூண்டல்துலங்கள் இல்லாத
கொள்கை
A) E.L. தார்ண்டைக் கொள்கை
B) ஹல் கொள்கை
C) ஸ்கின்னர் கொள்கை
D) டோல்மனின் கற்றல் கொள்கை
85. முதியோர் கல்விக்கான தேசிய வாரியம் வலியுறுத்தும் கருத்தின்படி கலைத்திட்டம் அமைய வேண்டியது
A) தேவையின் அடிப்படையில்
B) செயல்பாட்டின் அடிப்படையில்
C) வேலைவாய்ப்பை நோக்கி
D) உற்பத்தியை நோக்கி
86. உலக முதலுதவி தினம் என்பது
A) செப்டம்பர் 11
B) செப்டம்பர் 12
C) செப்டம்பர் 10
D) செப்டம்பர் 9
87. கீழ்க்கண்ட மதிப்பெண்களுக்கு முகடு மதிப்பை கணக்கிடு
10, 11, 13, 10, 15, 17, 18, 15, 10
A) 10
B) 13
C) 15
D) 18
88. கல்வி நுட்பவியல் என்பது
A) கல்வியியல் நுட்பவியல்
B) கல்வியின் நுட்பவியல்
C) இரண்டுமே
D) இவற்றுள் எதுவுமில்லை
89. கீழ்க்கண்டவற்றுள் எது ஒன்று மறதிக்கான காரணமல்ல?
A) கற்றதைத் திரும்ப திரும்ப பயன்படுத்தாதது
B) தற்போது கற்றுக் கொண்டிருப்பதின் ஈடுபாடு
C) கற்றல் பொருட்களை மறு அமைப்பு செய்யாதது
D) குறுகிய கால நினைவின் அடிப்படையில் கற்பது
90. செயல்பாட்டிற்கான காரணம் செயல்படுத்தப்படும் பொழுது,
அதற்கான ஊக்கப்படுத்துதல்
A) வெளிப்புற ஊக்கப்படுத்துதல்
B) உள்ளார்ந்த ஊக்கப்படுத்துதல்
C) வெளிப்புற மற்றும் உள்ளார்ந்த ஊக்கப்படுத்துதல்
D) இவற்றுள் எதுவுமில்லை
91. தேசிய ஒருங்கிணைப்பு தினம் என்பது
A) நவம்பர் 19
B) டிசம்பர் 19
C) செப்டம்பர் 19
D) மே 19
92. ஆசிரியர் கல்வியின் முக்கியத்துவத்தை முதலில்
வலியுறுத்தியது
A) வுட்ஸ் டெஸ்பேட்ச்
B) ஹன்ட்டர் கமிஷன்
C) கல்கத்தா பல்கலைக்கழக கமிஷன்
D) வெள்ளைத் தாள்
93. கல்வி நோக்கங்களின் வகைப்பாட்டினை முதன் முதலில்
அமைத்தவர்
A) மேகர்
B) ஸ்கின்னர்
C) புளூம்
D) தார்ண்டைக்
94. SSA என்பது கீழ்க்கண்டவற்றுள் எதற்காக ஏற்படுத்தப்பட்டது?
A) தொடக்கக் கல்வி
B) இடைநிலைக் கல்வி
C) உயர்கல்வி
D) தொழிற்பயிற்சி கல்வி
95. அமைப்பில் இயற்கை கொள்கையையும், நோக்கத்தில்
கருத்துக் கொள்கையையும் முறை மற்றும் செயல்பாட்டுத் திட்டத்தில் பயனனவைக் கொள்கையையும் உள்ளடக்கிய தத்துவம் யாருடையது?
A) ஸ்ரீ அரவிந்தர்
B) காந்தி அடிகள்
C) ரூஸோ
D) தாகூர்
96. நுண்ணறிவை விளக்கும் பல காரணிக் கொள்கையை
தோற்றுவித்தவர்
A) சார்லஸ் ஸ்பியர்மன்
B) E.L. தார்ண்டைக்
C) L.L. தர்ஸ்டன்
D) Dr. J.P. கில்போர்டு
97. 'தமிழ் உரைநடைத் தந்தை' எனத் தமிழண்ணல் யாரைக்
குறிப்பிடுகின்றார்?
A) கணக்காயர்
B) திரு.வி. கல்யாண சுந்தரணார்
C) ரா.பி. சேதுப்பிள்ளை
D) வீரமாமுனிவர்
98. ஆண்பால், பெண்பால் மற்றும் அலிப்பால் என்ற முப்பால் பகுப்புள்ள மொழிகள் எவை?
A) திராவிட மொழிகள்
B) மங்கோலியன் துருக்கி மொழிகள்
C) இந்தோ ஐரோப்பிய மொழிகள்
D) வட இந்திய மொழிகள்
99. கண்ணன் குடையாக எடுத்த குன்றின் பெயர் என்ன?
A) கோவர்த்தன மலை
B) கோல மலை
C) நீலமலை
D) இமயமலை
100. 'பெறுகதி நின்னாற் பெற்றேன், பெறும் பாவங்களைத்தேன்' என்று சீறாப்புராணத்தில் இடம்பெறும் கூற்று யாருடையது?
A) ஆண் மான்
B) முகமது நபி
C) பெண் மான்
D) வேடன்
0 Comments