PG - TRB - தமிழ் - வினாத்தாள் 2006 - 2007 , வினாக்களும் விடைகளும் - பகுதி - 2 / PG - TRB - TAMIL - ORIGINAL QUESTION PAPER - 2006 - 2007 - QUESTION & ANSWER - PART - 2

 


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2006 - 2007

வினாக்களும் விடைகளும் - பகுதி - 2

51 முதல் 100 வரை - வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER - 2006 - 2007

QUESTION & ANSWER - PART - 2

****************    *************   ***********

51 பிள்ளைத் தமிழ் இலக்கணம் குறிப்பிடும் குழந்தைப் பருவங்கள்

A) 7

B) 9

C) 10

D) 12

52. குழந்தைப் பருவத்தின் செங்கீரைப் பருவம் என்பது 

A) ஒன்பதாம் மாதம் 

B) ஏழாம் மாதம்

C) ஐந்தாம் மாதம் 

D) மூன்றாம் மாதம்

53. குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத் தமிழ் நூல்

A) குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்

B) மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

C) சேக்கிழார் பிள்ளைத் தமிழ்

D) திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ்

54. கலம்பக நூல்களுள் காலத்தால் முற்பட்டது

A) தில்லைக் கலம்பகம்

B) மதுரைக் கலம்பகம்

C) நந்திக் கலம்பகம்

D) திருக்காவலூர்க் கலம்பகம்

55. உழத்திப் பாட்டு என்று வழங்கப்படுவது

A) பள்ளுப் பாடல்கள் 

B) மருதநிலப் பாடல்கள்

C) குறத்திப் பாட்டு 

D) முல்லைப் பாட்டு

56. 'அறநெறிச் சாரம்' எனும் அறநூலை இயற்றியவர்'

A) பொய்யாமொழிப் புலவர் 

B) முனைப்பாடியார் 

C) அதிவீரராம பாண்டியர் 

D) பரஞ்சோதி முனிவர்

57. 'ஏகாம்பரநாதர் உலா' வை இயற்றியவர்

A) அந்தகக் கவி வீரராகவ முதலியார்

B) இரட்டையர்

C) சிவப்பிரகாசர் 

D) தாயுமானவர்

58. வீரசைவ சமயத்தை விளக்கும் மொழிபெயர்ப்பு நூல்

A) பிரபுலிங்க லீலை 

B) வீரசோழியம்

C) நளவெண்பா

D) மனோன்மணீயம்

59. நாட்டுப்புறவியலைக் குறிக்கும் Folklore என்ற சொல்லை உருவாக்கியவர்

A) மாக்ஸ்முல்லர் 

B) வில்லியம் ஜான் தாமஸ்

C) சு. சக்திவேல்

D) வில்லியம் பாஸ்கல்

60. 'முத்துப்பாட்டன் கதைப்பாடல்' என்பது

A) கவிதை

B) புதுக்கவிதை

C) சிறுகதை.

D) நாட்டுப்புற இலக்கியம்

61. வில்லிப்புத்தூரார் பாரதத்தை மேலும் விரிவாகத் தம் பெயரால் நூலாகச் செய்தவர்

A) நல்லாப்பிள்ளை

B) வடமலையப்ப பிள்ளை

C) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

D) அருணாசலக் கவிராயர்

62 'பக்தியின் மொழி தமிழ்' என்று சிறப்பித்துக் கூறியவர்

A) மறைமலையடிகள் 

B) பரிதிமாற்கலைஞர்

C) தனிநாயகம் அடிகள் 

D) சேக்கிழார்

63. கால்டுவெல் ஐயர் இயற்றிய நூல்

A) இலக்கிய ஒப்பாய்வியல்

B) இலக்கியத் திறனாய்வு

C) மொழி வரலாறு

D) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

64. வீரமாமுனிவர் இயற்றிய நூல்

A) நற்கருணைத் தியான மாலை

B) தேம்பாவணி

C) தாமரைத் தடாகம்

D) மோட்சப் பிரயாணம்

65. தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்

A) அண்ணாமலை ரெட்டியார்

B) மறைமலையடிகள்

C) அண்ணாமலை செட்டியார்

D) வேதநாயக சாஸ்திரியார்

66. கருணாமிருத சாகரம் என்ற இசைத்தமிழ் நூலை இயற்றியவர்

A) வேதநாயகம் பிள்ளை 

B) இராமலிங்க அடிகள்

C) விபுலானந்த அடிகள் 

D) ஆபிரகாம் பண்டிதர்

67. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தவர்

A) ஆபிரகாம் பண்டிதர்

B) ஆதிசங்கரர்

C) இராமாநுஜர்

D) இராமலிங்க அடிகள்

68. தமிழில் முதல் புதினத்தை எழுதி வெளியிட்டவர்

A ) கல்கி 

B) அகிலன்

C) ஜெயகாந்தன்

D) வேதநாயகம் பிள்ளை

69. கல்கியின் 'அலையோசை' சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு

A) 1946

B) 1956

C) 1966

D) 1965

70. அசோகமித்திரனின் 'அப்பாவின் சிநேகிதர்' சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு

A) 1966

B) 1976

C) 1986

D) 1996

71 .  டாக்டர் மு.வ. அவர்களின் இறுதி நாவல்

A) கரித்துண்டு 

B) அகல் விளக்கு

C) வாடாமலர்

D) பாவை 

72 தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர்

A) பம்மல் சம்பந்த முதலியார்

B) சகஸ்ரநாமம்

C) டி.கே. சண்முகம்

D) அவ்வை துரைசாமிப் பிள்ளை

73. 'ஷெல்லிதாசன்' என்ற புனைப் பெயரை விரும்பி ஏற்றுக் கொண்டார்

A) பாரதி

B) பாரதிதாசன்

C) கண்ணதாசன் 

D) வண்ணதாசன்

74. 'ஊசிகள்' எனும் புதுக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

A) மு. மேத்தா

B) கவிஞர் வாலி

C) கவிஞர் மீரா

D) வைரமுத்து

75. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்' என்று போற்றப்படுபவர்

A) அகிலன்

B) அண்ணா

C ) சுஜாதா

D) கல்கி

76. 'குறிஞ்சி மலர்' எனும் புதினத்தை இயற்றியவர்

A) அகிலன்

B) கல்கி

C) நா. பார்த்தசாரதி 

D) ஜெயகாந்தன்

77. வி.எஸ். காண்டேகரின் படைப்புகளைச் சிறப்புற மொழி பெயர்த்தவர்

A) பாலகுமாரன்

B) கா.ஸ்ரீ.ஸ்ரீ

C) த.நா. குமாரசாமி 

D) சேனாதிபதி

78. 'தேசபக்தன்' என்ற நாளிதழின் ஆசிரியராக இருந்தவர்

A) சோமசுந்தர பாரதியார் 

B) பாரதியார்

C) திரு.வி.க.

D) பாரதிதாசன்

79. 'புதுமைப்பித்தன் வரலாறு' எனும் நூலை எழுதியவர்

A) ரகுநாதன்

B) ம.பொ.சிவஞானம்

C) கி. சந்திரசேகரன்

D) பத்மநாபன்

80. குழந்தை இலக்கியம் வளர்ப்பதையே வாழ்நாள் தொண்டாகக் கொண்டவர்

A) பாரதி

B) பாரதிதாசன்

C) கவிமணி

D) அழ. வள்ளியப்பா

81. பதிப்பீட்டுக் கல்வி என்பதன் பொருள்

A) சமயக் கல்வி (Religious Education)

B) அறமுறைக் கல்வி (Moral Education)

C) மதிப்புறு கல்வி (Cost Education)

D) கல்வியின் பொருளாதாரம் (Economics of Education)

82 தண்டனை ஒரு

A) உட்புகுத்தல் (Reinforcement)

B) எதிர்மறை உட்புகுத்தல் (Negative Reinforcement)

C) உடன்படு உட்புகுத்தல் (Positive Reinforcement)

D) ஊக்கமளித்தல் (Encouragement)

83. குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினைத் தீர்மானிக்கும் இரு காரணிகளாவன

A) மரபுநிலை மற்றும் பள்ளி

B) பள்ளி மற்றும் வீடு

C) வீடு மற்றும் சமுதாயம்

D) மரபுநிலை மற்றும் சூழ்நிலை

84. 'சுதந்திரமான சூழ்நிலையில் கற்றல்' (Learning in free atmosphere) என்பதை வலியுறுத்தியவர்

A) மாண்டிச்சோரி 

B) காக்னே

C) ஜே. கிருஷ்ணமூர்த்தி

D) காந்திஜி

85. கருத்து தெரிநிலை சோதனை (Thematic Appreception Test) ஒருவரின் .......... கண்டறிய நடத்தப்படுகிறது.

A) அறிவுத்திறனை

B) ஆளுமையை (Personality)

C) நினைவாற்றலை

D) சாதனையை

86. "நம்முடைய தவறுகளை வேறொருவரிடம் காணும் மனப்பாங்கு நம் அனைவரிடத்திலும் உள்ளது”

A) தன்னையறியாமலே பிறர் கருத்தைக் கையாளுதல் (Introjection)

B) அடக்கி வைத்தல் (Repression)

C) எடுத்துக் காட்டல் (Projection)

D) அறிவார்ந்த விளக்கம் (Rationalisation)

87. தனிப்பட்ட முறையில் கற்பித்தல் (Individualised Instruction) என்பதன் பின்னணியில் உள்ள கொள்கை
யாது?

A) உட்புகுத்தல் மற்றும் கற்றல் (Reinforcement and learning)

B) இசைவுபடுத்தல் (Accommodation)

C) பொருந்துதல் (Adaptation)

D) திட்டங்கள் (Schemes)

88. செய்முறை கற்றல் (Learning by doing) என்ற முறையை வலியுறுத்தியவர் யார்?

A) ஏ.எஸ்.நீல்

B) ஜான் டூவி

C) பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் 

D) கில்பேட்ரிக்

89. குழந்தையின் சமுதாய வளர்ச்சியில் (Social development) முக்கிய பங்கு வகிப்பது

A) பள்ளி

B) குடும்பம்

C) சமூகம்

D) அண்டை அயலார்

90. வகுப்பறையில் கவனம் (Attention) செலுத்துவதை தீர்மானிக்கும் ஸ்தூலமான காரணி (Objective factor)

A) ஈடுபாடு (Interest)

B) புதுமை (Novelty)

C) உணர்ச்சிபூர்வம் (Sentiment)

D) LOTUUITSTOOL (Attitude)

91. மெதுவாக கற்போருக்கு (Slow learners) பயன்படும் கற்பித்தல் - கற்றல் முறை

A) விரிவுரை (Lecture) 

B) தானே கற்றல்

C) நினைவிலிருத்தல் 

D) குழு கற்றல்

92. "சீ, சீ இந்த பழம் புளிக்கும்” எனும் நரியின் கதை எந்தவகையைச் சார்ந்தது?

A) அறிவுத்திறம் வாய்ந்த தன்மை (Intellectualization)

B) அறிவார்ந்த விளக்கம் (Rationalization)

C) எதிர்மறையான தன்மை (Negativism)

D) தன்னலம் (Egocentrism)

93. குறைபாடுள்ள (Defectives) மற்றும் நெறி பிறழ்ந்தவர்களை (Delinquents) பயனுள்ள மற்றும் திறமையுள்ள சமுதாய உறுப்பினர்களாக பயிற்றுவிக்க
முயல்வது

A) பரிகாரம் தரும் பயிற்சி (Remedial Instruction)

B) திட்டமிட்ட பயிற்சி (Programmed Instruction)

C) உடற்பயிற்சி (Physical Instruction)

D) சமயச் சார்புள்ள பயிற்சி (Religious Instruction)

94. ஓர் அறிவுத்திறன் சோதனையில் பத்து வயது சிறுவன் ஒருவனின் மனவளர்ச்சி வயது 11 எனக் கண்டறியப்-
படுகிறது. இந்த 1.Q. ஆனது கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.

A) 100

B) 120

C) 110

D ) 90

95. DIET எனப்படுவது

A) மாவட்ட ஆசிரியர் வேலைவாய்ப்பு நிலையம் (District Institute for Employment of Teachers)

B) மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிலையம் (District Institute of Education and Training)

C) மாவட்ட துவக்க ஆசிரியர் கல்வி நிலையம் (District Institute of Elementary Teacher Education)

D) மாவட்ட கல்வித் தொழில்நுட்ப நிலையம் (District Institute of Educational Technology)


96. தன் நிலையாக்கம் (Self actualisation) என்பது "தனியாள் திறனின் (Personal potential) முழு வளர்ச்சி ஆகும்

A) ராட்டர்

B) மாஸ்லோ

C) மெக்லீலாண்ட் (McCleland)

D) ஹல் (Hull)

97. கல்வியறிஞர் ஃப்ரோபெல் (Froebel) ஒரு

A) கருத்தியல் கொள்கைவாதி

B) இயற்கை கொள்கைவாதி

C) யதார்த்த கொள்கைவாதி

D) பயனளவு கொள்கைவாதி

98. மாண்டிசோரி அம்மையாரால் துவக்கப்பட்ட பள்ளி --------- 
என்றழைக்கப்பட்டது.

A) குழந்தைகள் இல்லம்

B) சிறுவர் பள்ளி

C) கோடை மலைப் (Summer Hill) பள்ளி

D) சிறுமியர் பள்ளி

99. MLL எனப்படுவது

A) இறுதிநிலைக் கற்றல் (Marginal level of Learning)

B) மீப்பெரு நிலைக் கற்றல் (Maximum Level of Learning)

C) மோட்டார் கற்றல் அளவு நிலை (Motor Learning Level)

D) மீச்சிறு நிலைக் கற்றல் (Minimum Level of Learning)

100. காந்தியடிகளின் கல்விக் கொள்கையின் பெயர்

A) சமூகக் கல்வி

B) ஆதாரக் கல்வி

C) தொழில்நுட்பக் கல்வி 

D) ஊரகக் கல்வி


*****************   ****************   ********


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********

Post a Comment

0 Comments