பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவலைக் கவிதை / Pattukkottai kalyanasundaram kavithai

 

        நிலைபெறும்  நினைவலைகள் 

    பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம்.

                   8  •  10  •  2021



புரட்சிக்கவி   வடித்த 

புதுமை  மிகு கலையரங்கம் 


தமிழன்னைசூட  வாய்த்த 

மேன்மை   தரும்   கவியரங்கம் 

பாமரரும்   பாட்டிசைக்க 

மெட்டுத்   தந்த   புது  ராகம் !

சமூக  அவலங்கலைச்   சலித்துக் 

களையும்   அனல்  தாகம் !

எளிய  சொற்களின்   எழில்  கொண்ட 

பொருள்  தந்த   முதல்   கானம் !

திரையிசைப்  பாட்டிசைத்து   திக்கெல்லாம்  விழிக்கச் செய்து

கரையில்லாப்   பெருமைதனை   பொதுவுடைமை  என்றாக்கி 

மாடுமேய்க்கும் விவசாயி  

உப்பளம் உழன்ற  உழைப்பாளி

நாடகமெனும்   மேடையேறி  பாட்டாலே  கோட்டைக் கட்டி

நாடும்  வீடும்   நலம்பெற   நல்வார்த்தை  சில  தூவி 

 தூய  மனமொடு   துன்பம்  நீக்கி   தாலாட்டி 

திருடாதே  பாப்பாவும்   தூங்காத   தம்பிகளும் 

சின்னப்   பயலும்   சிங்கார   வளம்பெற 

சீர்திருத்த  கருத்துதனை  சிந்தையில்  விதைத்து

பகுத்தறிவை   பாங்காய்  வளர்த்து 

 வகுத்தப்   பாதைகள் எல்லாம் வளம் கண்ட   சேவைகள் 

விந்தை மிகு  இளைஞருள்ளம்  வீறுகொண்டெழுந்து 

விதியை மாற்றிட   தந்த   நல்விதைகள்  பல நூறு !

பட்டுக் கோட்டையின்   பட்டு  வரிகளை  

தமிழினத்தின்  தனிப் பெரும்   கலையாக்கி 

தனிமொழி  யென   தடம்   பதித்திட  

நினைவுக் கொண்டு !   நிரந்தரமாக்கி 

நல்விளைவைக் காண  நாளும்  போற்றுவோம்.!

Post a Comment

0 Comments