புவியரசுகள் போற்றும் கவியரசு - கவிஞர்.கண்ணதாசனுக்கு கவிதாஞ்சலி - KAVIYARASU KANNADHASAN - KAVITHAI

 




          புவியரசுகள் போற்றும்

                கவியரசு - இவர்

செட்டி நாடு தந்த

கட்டித் தங்கம்-- இவர்

கண்ணன் பெயரைப்

பாராயணம் செய்த

நாராயணன் செட்டி

முத்து முத்தாய்க்

   கவி படைத்த

முத்தையா-- இவர்

தத்துவங்களை

    எளிமையாக்கி

சித்தம் தெளியக்

  கவி சொன்ன

வித்தகர்-- இவர்

பேசுவோர் பேசட்டும்

 ஏசுவோர் ஏசட்டும் என

ஏசு காவியம் படைத்த

பாசம் மிக்கவர்.

கோப்பையிலே 

   குடியிருந்தாலும்

கோட்டையில் சிலர்

   கொடியேற்றக்

கவிதைபடைத்தவர்

கன்னல் தமிழை

கன்னித் தமிழை

அழகு தமிழை

அறிஞர் தமிழை

பாமரத் தமிழாய்

பாட்டாளித் தமிழாய்

மாற்றிய கவியரசே

    உம்புகழ்

மண்ணும் கடல் 

 வானும் மறைந்து 

முடிந்தாலும்

  மறக்கமுடியாதது.


    கவிஞர்.தமிழ் மீனா காஞ்சி

Post a Comment

0 Comments