Dr.APJ. அப்துல் கலாம் அவர்களின்
அற்புதமான பொன்மொழிகள்
* ஒரு மனிதரின் பிறப்பு சம்பவமாக இருக்கலாம். வாழ்க்கை சாதனையாகவும், இறப்பு சரித்திரமாகவும் இருக்க வேண்டும்.
* நிறைந்த அறிவு, கடின உழைப்பு, பழகும்திறன் இவற்றைக் கைக்கொண்டால் நீங்கள்தான் எப்போதும் முதலிடத்தில் இருப்பீர்கள்.
* கஷ்டம் அரும்போது கண்ணை மூடாதே! அது உன்னைக் கொன்று விடும் கண்களைத் திறந்து பார். நீ அதை வென்று விடலாம்.
* தோல்விகளை எதிர்கொள்ளக் கற்று முழுமை பெறுங்கள் . அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை
* உங்கள் குறிக்கோளில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து அந்த சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
* வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி
காலம் பேசும்போது கலாம் பேசுகிறார்.
* நீண்ட நாள் முழுவதும் கணத்திற்குக் கணம்
நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அடிகிய கரங்கள்.
* ஒரு நல்ல நண்பன் நூறு உறினர்களுக்குச்
சமம். ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம்.
* கலாமின் 10 வயதில் பறவையின் பறக்கும்
விதம்பற்றி கற்பித்து வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்ரமண்ய ஐயர்தான் என் ரோல்மாடல்
* உலக அரங்கில் இந்தியா பல்வேறு சாதனைகள் படைக்க அறிவியலும் மதமும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
* தனது புள்ளியை அதவாது இலக்கைக் குறிவைத்துத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப் புள்ளியும்
பெரும்புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்துக் கொண்டிருங்கள்.
************* ************ ***********
கலாம் தான் என்னுடைய ரோல் மாடல்!
உங்களின் ரோல்மாடல் யார் என்பதை நீங்கள் முதலில் முடிவெடுங்கள்
தொகுப்பு -
செல்வி. முத்துலட்சுமி ,
11 ஆம் வகுப்பு , சிவகங்கை.
*************** *************** ************
0 Comments