டாக்டர். அப்துல் கலாம் பிறந்த நாள் ( 15 - 10 - 2021 )
சிறப்பு இயங்கலைத் தேர்வு
வினாக்களும் விடைகளும்
**************** ********** **************
1) கலாம் அவர்கள் மாணவர்களுக்குத் தந்தஉறுதிமொழிகளுள் ஒன்று - குறைந்தது -----மரங்களை நட்டு வளர்ப்பேன்.
அ ) 20
ஆ ) 10
இ ) 01
ஈ ) 05
விடை : ஆ ) 10
2) கலாம் அவர்களின் பிறந்த நாளை தமிழகம் கொண்டாடும் தினம் -----
அ ) இளைஞர் ஒற்றுமை நாள்
ஆ ) இளைஞர் மலர்ச்சி நாள்
இ ) இளைஞர் வளர்ச்சி நாள்
ஈ ) இளைஞர் எழுச்சி நாள்
விடை : ஈ ) இளைஞர் எழுச்சி நாள்
3) கலாம் அவர்கள் கடைசியாக
உரையாற்றிய நகரம்
அ ) ஷில்லாங்
ஆ ) சிம்லா
இ ) நைனிடால்
ஈ ) டில்லி
விடை : அ ) ஷில்லாங்
4) கலாம் அவர்களின் உடல் நல்லடக்கம்
செய்யப்பட்ட இடம் ----
அ ) இராமநாதபுரம்
ஆ ) தனுஷ்கோடி
இ ) பரமக்குடி
ஈ ) பேக்கரும்பு
விடை : ஈ ) பேக்கரும்பு
5) கலாம் அவர்கள் தொடக்கக் கல்வி பயின்ற ஊர் ------
அ ) தனுஷ்கோடி
ஆ ) பரமக்குடி
இ ) இராமேஸ்வரம்
ஈ ) திருச்சி
விடை : இ ) இராமேஸ்வரம்
6) பெற்றோர்க்கு உதவியாக
பள்ளிப்பருவத்தில் கலாம் அவர்கள் செய்த வேலை
அ ) மளிகைக் கடையில் வேலை
ஆ ) நாளிதழ் போடும் வேலை
இ ) தேனீர்க்கடையில் வேலை
ஈ ) துணிக்கடையில் வேலை
விடை : ஆ ) நாளிதழ் போடும் வேலை
7) கலாம் அவர்கள் பயின்ற திருச்சியில்
உள்ள கல்லூரியின் பெயர் -----
அ ) புனித பீட்டர் கல்லூரி
ஆ ) தூய இருதயக்கல்லூரி
இ ) புனித ஜோசப் கல்லூரி
ஈ ) வக்ப்போர்டு கல்லூரி
விடை : இ ) புனித ஜோசப் கல்லூரி
8) கலாம் அவர்கள் விண்வெளி பொறியியல் படிப்பு எங்கே பயின்றார்?
அ ) சென்னை ஐ.ஐ.டி.
ஆ ) சென்னை எம்.ஐ.டி.
இ ) டில்லி எம்.ஐ.டி
ஈ ) மும்பை எம்.ஐ.டி.
விடை : ஆ ) சென்னை எம்.ஐ.டி.
9) கலாம் அவர்களின் அறிவியல்
ஆலோசகராக இருந்தவர்
அ ) தன்ராஜ்
ஆ ) பொன்ராஜ்
இ ) சுப்புராஜ்
ஈ ) வரதராஜ்
விடை : ஆ ) பொன்ராஜ்
10 ) கலாம் அவர்கள் எழுதிய தன்வரலாற்று நூல்
அ ) அருமையான உறவுகள்
ஆ ) அழகான இரவுகள்
இ ) அக்னிச்சிறகுககள்
ஈ ) அணுவும் ஆற்றலும்
விடை : இ ) அக்னிச் சிறகுகள்
11) கலாம் அவர்கள் வகித்த பதவி -----
அ ) ஆளுநர்
ஆ ) பிரதமர்
இ ) குடியரசுத் தலைவர்
ஈ ) அமைச்சர்
விடை : இ ) குடியரசுத் தலைவர்
12) கலாம் அவர்கள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்கள் மொழிந்துள்ள நூலின் பெயர் -
அ ) இந்தியா 2025
ஆ ) இந்தியா 2020
இ ) இந்தியா 2030
ஈ ) இந்தியா 2040
விடை : ஆ ) இந்தியா 2020
13) கலாம் அவர்கள் தொடங்கிய இயக்கம் ---
அ ) நான் என்ன பெற முடியும் ?
ஆ ) நான் என்ன செய்ய முடியும்?
இ ) நான் என்ன தர முடியும்?
ஈ ) நான் எப்படி வாழ முடியும் ?
விடை : இ ) நான் என்ன தர முடியும்?
14) கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஆண்டு
அ ) 2000
ஆ ) 2002
இ ) 2004
ஈ ) 2001
விடை : ஆ ) 2002
15 ) கலாம் அவர்கள் மக்களால் எவ்வாறு
அழைக்கப் பட்டார்?
அ ) மக்களின் பிரதிநிதி
ஆ ) மக்களின் தொண்டன்
இ ) மக்களின் ஜனாதிபதி
ஈ ) மக்களின் நண்பன்
விடை : இ ) மக்களின் ஜனாதிபதி
16) கலாம் அவர்களுக்கு எந்த
இசைக்கருவியை வாசிப்பதில் ஆர்வம்
இருந்தது?
அ ) வயலின்
ஆ ) கிதார்
இ ) புல்லாங்குழல்
ஈ ) வீணை
விடை : ஈ ) வீணை
17) ஐ.நா.அவை கலாம் அவர்களின் 79 வது பிறந்த நாளை என்ன தினமாக அறிவித்தது?
அ ) உலக அறிவியல் அறிஞர்கள் தினம்
ஆ ) உலக மாணவர் தினம்
இ ) உலக அணுசக்தி தினம்
இ ) உலக மனவள தினம்
விடை : ஆ ) உலக மாணவர் தினம்
18) இளைஞர்கள் மனதில் கலாம் அவர்கள் விதைத்த வாசகம்
அ ) உண்மை பேசுங்கள்
ஆ ) கடமை ஆற்றுங்கள்
இ ) கனவு காணுங்கள்
ஈ ) கவிதை எழுதுங்கள்
விடை : இ ) கனவு காணுங்கள்
19) அப்துல்கலாம் அவர்கள் பிறந்த ஊர் -
அ ) புவனேஸ்வரம்
ஆ ) இராமேஸ்வரம்
இ ) இராமநாத புரம்
ஈ ) சோழபுரம்
விடை : ஆ ) இராமேஸ்வரம்
20 ) கலாம் அவர்கள் பிறந்த ஆண்டு
அ ) 1921
ஆ ) 1931
இ ) 1911
ஈ ) 1925
விடை : ஆ ) 1931
0 Comments