எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - 4 , மதிப்பீடு - வினாக்களும் விடைகளும் / 8th TAMIL VINADI VINA - 4 , QUESTION & ANWER

 


எட்டாம் வகுப்பு - தமிழ் -

வினாடி வினா - 4

- மதிப்பீடு - வினா & விடைகள்.

1 ) கீழ்க்காணும் பாடலில், இருவோறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லையும் அதன் பொருள்களையும் எழுதுக

' தொல்லை வினைதரு தொல்லை அகன்று

சுடர்க தமிழ்நாடே ! ' 

விடை - தொல்லை- பழமை, துன்பம்

2 ) கோடிட்ட இடங்களை நிரப்புக

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே !

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே ! " 

3 ) பின்வரும் பாடலடிகளில் பயின்றுவந்துள்ள எதுகை, மோனைச்சொற்களை எடுத்தெழுதுக.

எங்கள்தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழிஎன்றென்றும் வாழியவே !

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழிவாழ்க தமிழ்மொழியே

விடை: எதுகை - வாழ்க , வாழ்க - ழ்
மோனை - ங்கள் , ன்றென்றும் -
வாழ்க, வாழ்க - வா 

உரைப்பகுதியைப் படித்து விடையளிப்பதற்கேற்ற வினாக்கள் நான்கு அமைக்க . 

தமிழெழுத்துகளின் பழைய வரிவடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல்சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது. கல்வெட்டுகள் கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டுமுதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி. பி. (பொ.ஆ.பி.) ஏழாம் நூற்றாண்டுமுதல் கிடைக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில்
காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இரு வகையாகப் பிரிக்கலாம் .

வினா 1: தமிழ் எழுத்தகளின் பழைய வரிவடிவங்களைஎங்கு காணலாம் ?

வினா 2

கல்வெட்டுகள் எந்த நாற்றாண்டு முதல் கிடைக்கின்றன ?

வினா 3: 

செப்பேடுகள் எந்த நூற்றாண்டுமுதல் கிடைக்கின்றன ?

வினா 4 :

கல்வெட்டுகள், செப்பேடுகளில் கிடைத்த வரிவடிவங்கள்
எவை எவை ?

விடுபட்ட கட்டங்களை நிரப்புக.

வீரமாமுனிவரின் எழுத்துச்சீர்திருத்தம்

எ - ஏ  / ஒ - ஓ  / கெ - கே /கொ - கோ

6 ) சரியா ? தவறா என எழுதுக.

அ )  பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு. ஓலை போன்றவற்றில் எழுதினர் - ( சரி )

ஆ ) கடைச்சங்ககாலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் 'வட்டெழுத்துகள்
என்று அழைக்கப்பட்டன. ( தவறு  )


7 ) எழுத்துச்சீர்திருத்தத்தின் தேவை குறித்த கருத்துகளை உன் சொந்த நடையில் எழுதுக

விடை - மாணவர்கள் தங்கள் மனதில் படும் கருத்துக்களை எழுதலாம். மதிப்பெண் வழங்கப்படும்.

 

8 ) கோடிட்ட இடங்களை நிரப்புக .

அ) உயிரெழுத்துகள் ( கழுத்தை )  இடமாகக் கொண்டு பிறக்கின்றன

ஆ) வல்லின மெய்யெழுத்துகள் ஆறும் ( மார்பை )  இடமாகக்கொண்டு
பிறக்கின்றன

இ ) மெல்லின மெய்யெழுத்துகள் ஆறும் ( மூக்கை )  இடமாகக்கொண்டு
பிறக்கின்றன

ஈ ) இடையின மெய்யெழுத்துகள் ஆறும் 
 (  கழுத்தை )  இடமாகக்கொண்டு
பிறக்கின்றன.

உ ) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.

9 ) கீழ்க்காணும் சொற்களை உரக்க உச்சரித்து, மெய்யெழுத்துகளின் பிறப்பிடங்களை எழுதுக (குறிப்பேட்டில் எழுதுக)

சங்கு,பஞ்சு, தொண்டை, தந்தம், வாய், தாழ்ப்பாள், ஒளவையார், கற்றை. தென்றல்

10 ) உரைப்பகுதியில் விடுபட்டுள்ள சொற்களை எழுதிப் படிக்க

எழுத்துகளின் பிறப்பு

உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு-தலை---கழுத்து மூக்கு , ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி இதழ் , நாக்கு , பல் , மேல்வாய்ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் 
தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின்-பிறப்பு--- என்பர்

ஆக்கம் - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை. 97861 41410

 காட்சிப்பதிவாகக் காண Green Tamil You Tube சேனல் பார்த்து மகிழுங்கள். You Tube link 

https://youtu.be/avDIm2tzkW8

Post a Comment

0 Comments