ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2005 - 2006
வினாக்களும் விடைகளும் - பகுதி - 2
51 முதல் 100 வரை - வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2005 - 2006
QUESTION & ANSWER - PART - 2
**************** ************* ***********
51 தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் ஆசிரியர்
A) ஆறுமுக நாவலர்
B) பண்டிதமணி மு. கதிரேகச் செட்டியார்
C) மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
D) கா.சு. பிள்ளை
52 இசைப் பேரிலக்கணம் என்று போற்றப்படும் நூல்
A) கருணாமிர்த சாகரம்
B) சர்வசமய சமரசக், கீர்த்தனை
C) தேவாரம்
D) திருவாசகம்
53. பிள்ளைத் தமிழில் உள்ள பருவங்கள்
A) பத்து
B) எட்டு
C ) ஆறு
D) ஒன்பது
54. இராமச்சந்திரக் கவிராயரிடம் தமிழ் பயின்ற கிறிஸ்துவர்
A) இரேனியஸ்
B) ஜி.யூ. போப்
C) எல்லீஸ் துரை
D) கால்டுவெல்
55. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் தலைமை சான்ற நூல்
A) சிவப்பிரகாசம்
B) சிவஞான போதம்
C) சிவஞானசித்தியார்
D) இருபா இருபஃது
56. போர் பற்றிய நூல்
A) நற்றிணை
B) பரிபாடல்
C) குறிஞ்சிப்பாட்டு
D) கலிங்கத்துப் பரணி
57. பின்வருவனவற்றுள் ஒன்று இலக்கியங்களில் தூதாக
அனுப்பப்பட்டுள்ளது.
A) அன்னம்
B) புலி
C) கொக்கு
D ) கரடி
58. விருத்தப்பாவால் இயன்ற காப்பியம்
A) பெருங்கதை
B) வளையாபதி
C) சீவகசிந்தாமணி
D) குண்டலகேசி
59, திவாகரம் எனும் நூல் எவ்வகையைச் சார்ந்தது?
A) சிறுகதை
B) நிகண்டு
C) நாடகம்
D) காப்பியம்
60. மனம் எனும் கரணத்தை ஒரு பேயாகக் கருதிப் பாடும் சித்தர்
A) பாம்பாட்டிச் சித்தர்
B) குதம்பைச் சித்தர்
C) அகப்பேய்ச் சித்தர்
D) கடுவெளிச் சித்தர்
61 'ரப்பர்' எனும் நாவலின் ஆசிரியர்
A) ஜெகசிற்பியன்
B) பொன்னீலன்
C) கி. ராஜநாராயணன்
D) ஜெயமோகன்
62 தமிழில் முதல் சிறுகதையை எழுதியவர்
A) வ.வே.சு. ஐயர்
B) புதுமைப்பித்தன்
C) கு.ப. ராஜகோபாலன்
D) தி. ஜானகிராமன்
63. தமிழ்நாட்டின் மாப்பசான்
A) ஜெயகாந்தன்
B) அசோகமித்ரன்
C) புதுமைப்பித்தன்
D) பி.எஸ். இராமையா
64. தொழிலாளர் சங்கத்தைச் சென்னையில் தோற்றுவித்தவர்
A) அண்ணா
B) ஜீவானந்தம்
C) திரு.வி.க.
D) பெரியார்
65. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி இவர் தலைமையின் கீழ் உருவானது
A) எஸ். வையாபுரிப்பிள்ளை
B) மு. இராகவையங்கார்
C) இரா. இராகவையங்கார்
D) டாக்டர். கைலாசபதி
66. தஞ்சைவாணன் கோவையை இயற்றியவர்
A) அருணந்தி சிவாச்சாரியார்
B) பொய்யாமொழியார்
C) சிவஞான சித்தியார்
D) மெய்கண்டார்
67. கனவியல் எனும் நூலுக்கு இவர் எழுதிய உரையே மிகப் பழமையானது
A) நக்கீரர்
B) இறையனார்
C) நச்சினார்க்கினியர்
D) பேராசிரியர்
68. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் மிகவும் புகழ் பெற்றவர்
A) மணக்குடவர்
B) பரிமேலழகர்
C) மயிலைநாதர்
D) டாக்டர். மு.வ.
69. பட்டினத்தார் சார்ந்திருந்த சமயம்
A) எதுவுமில்லை
B) வைணவம்
C) பௌத்தம்
D) சைவம்
70. இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழ் எழுத்துகளில் அச்சிடும் முயற்சி மேற்கொண்ட ஆண்டு
A) 1517
B) 1527
C) 1577
D) 1587
71. வடமொழி மிருச்சகடிகத்தை - மண்ணியல் சிறுதேர் என்ற நாடகமாக மொழி பெயர்த்தவர்
A) மறைமலையடிகள்
B) மு. கதிரேசச் செட்டியார்
C) ஆறுமுக நாவலர்
D] மு. இராகவையங்கார்
72. மு. வரதராசனாரின் இறுதி நாவல்
A) கரித்துண்டு
B) அகல் விளக்கு
C) வாடாமலர்
D) கயமை
73. தமிழில் முதன்முதலில் ஞானபீடப் பரிசினைப் பெற்ற நாவலாசிரியர்
A) நா. பார்த்தசாரதி
B) டாக்டர். மு.வ.
C) கல்கி
D) அகிலன்
74. வரலாற்று நாவல் துறையின் தந்தை என்று போற்றப்படுபவர்
A) கல்கி
B) அகிலன்
C) சாண்டில்யன்
D) விக்கிரமன்
75. 'Novel' எனும் ஆங்கிலச் சொல் எம்மொழியிலிருந்து வந்தது?
A) கிரேக்கம்
B) இலத்தீன்
C) பிரெஞ்சு
D ) ஜெர்மன்
76. அடிநாவும் அண்ணமும் உறுதலால் பிறக்கும் எழுத்துக்கள்
A) க, ங
B ) ச , ஞ
C) ட, ண
D ) த , ந
77. நா உறாமலே இதழால் பிறப்பவை
A) வ
B) த, ந
C) ப, ம
D) ல,ள
78. மைசூர் மாநிலத்தை அடுத்து ஓடும் கல்யாணபுரி, சந்திரகிரிஎன்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ள பகுதியில்
வாழும் மக்கள் பேசும் மொழி
A) கன்னடம்
B) துளு
C) தெலுங்கு
D) கோலமி
79. தமிழிலக்கியத்தில் புதுக் கவிதையின் தந்தை என்று போற்றப்படுபவர்
A) பாரதிதாசன்
B ) சுரதா
C) வாலி
D) ந. பிச்சமூர்த்தி
80. இரங்கலுக்குரிய அகத்திணை எது?
A) குறிஞ்சி
B) மருதம்
C) நெய்தல்
D) பாலை
81 சீறாப்புராணம் இயற்றுவதற்குப் பொருளுதவி செய்த வள்ளல்
A) சடையப்ப வள்ளல்
B) சீதக்காதி வள்ளல்
C) பனு அகமது மரைக்காயர்
D) முகம்மது உசேன்
82. ' அகர வரிசையில் சொற்களை அமைத்துப் பொருள் தரும் முறையாகிய அகராதி முறையில் முதன்முதலில் தமிழில் நூல் தந்தவர்
A) கால்டுவெல்
B) தத்துவபோதகர்
C) வீரமாமுனிவர்
D) ஜி.யூ. போப்
83. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலை எழுதியவர்
A) தொல்காப்பியர்
B) ஜி.யூ. போப்
C) கால்டுவெல்
D) பவணந்தியார்
84. திறனாய்வினை இரண்டு வகைப்படுத்திக் கூறுபவர்
A) ஆபர் குரோம்பி
B) வின்செஸ்டர்
C) யெஸ்பர்ஸன்
D) விக்டர் ஹியுகோ
85. ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் தரத்தை ஆய்வது
A) இலக்கியக் கொள்கை
B) இலக்கியத் திறனாய்வு
C) இலக்கியக் கலை
D) இலக்கிய மரபு
86. தமிழர் திருநாள் எனும் பெயரால் கொண்டாடப்படுவது
A) தீபாவளி
B) தமிழ்ப் புத்தாண்டு
C) பொங்கல்
D) கிறிஸ்துமஸ்
87. மகளிர் தினம் கீழ்க்கண்ட நாளில் கொண்டாடப் படுகிறது
A) மார்ச் 8
B) மார்ச் 18
C) மார்ச் 28
D) மே 8
88. 'திருப்பாவை ஜீயர்' என்று புகழப்பட்டவர்
A) பெரியாழ்வார்
B) பெரியவாச்சான் பிள்ளை
C) இராமானுஜர்
D) ஆண்டாள்
89. 'சொத்து' என்ற சொல் பின்வரும் திராவிட மொழிகளில் ஒன்று
A) தமிழ்
B) தெலுங்கு
C) கன்னடம்
D) மலையாளம்
90. 'பீரோ' என்ற சொல் பின்வரும் அயல் மொழியிலிருந்து நாம் பெற்றது
A) ஆங்கிலம்
B) டச்சு
C) பிரெஞ்சு
D) போர்த்துக்கீசியம்
91 இலக்கியம் சிறந்ததா அல்லது குறையுடையதா என்பதைக் காண்பதே திறனாய்வு என்று கூறியவர்
A) வால்டர் பேட்டர்
B) ஸ்பிங்கான்
C) வின்செஸ்டர்
D) விக்டர் ஹியுகோ
92 ‘வேதாரண்யம்' எனும் ஊரின் வரலாற்றுப் பெயர்
A) திருமறைக்காடு
B) திருவாலங்காடு
C) திருபோரூர்
D) திருவள்ளூர்
93. கையிலுள்ள கம்பினை வீசி ஒலியெழுப்பி விளையாடும் விளையாட்டின் பெயர்
A) உறியடி
B) எருது கட்டு
C) சிலம்பாட்டம்
D) கிட்டிப்புள்
94. பிட்டுத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும் மாவட்டம்
A) திருச்சி
B) திருநெல்வேலி
C) தஞ்சாவூர்
D ) மதுரை
95. திருநெல்வேலி மாவட்டத்தில் நாட்டுப்புற தெய்வங்களுக்குக் கொண்டாடப்படும் விழா இவ்வாறு அழைக்கப்படுகிறது.
A) சாமி கும்பிடுதல்
B) கொடை
C) பொங்கல் வைத்தல்
D) காப்புக் கட்டுதல்
96. பிராகூய் மொழி பின்வரும் பகுதியில் பேசப்படுகிறது
A) இராஜஸ்தான்
B) நாகாலாந்து
C) பலுசிஸ்தானம்
D ) ஒடிசா
97. தமிழர்கள் சங்க இலக்கியத்தைப் பின்வருமாறு குறிப்பார்கள்
A) பதினெண்மேற்கணக்கு
B) பதினெண்கீழ்க்கணக்கு
C) அகப்புற நூல்கள்
D) அற நூல்கள்
98. சந்திரகுப்த மௌரியன் காலத்தில் கிரேக்க தூதராக வந்தவர்
A) பிளைனி
B) தாலமி
C) யுவான் சுவாங்
D) மெகஸ்தனீஸ்
99. விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர்
A) சங்கரர்
B) இராமானுஜர்
C) திருமூலர்
D) இராமலிங்க அடிகளார்
100. வடமொழியில் மத்தவிலாச பிரகசனம் என்ற நாடக நூலை இயற்றிய அரசன்
A) மகேந்திரவர்மன்
B) விஷ்ணுகுப்தன்
C) அதிவீரராம பாண்டியன்
D) நந்திவர்மன்
***************** **************** ********
தேர்வில் வெற்றி உங்களுக்கே !
வாழ்த்தும் ,
பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
***************** ************* **********
0 Comments