ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2002 -2003
வினாக்களும் விடைகளும் - பகுதி - 2
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2002 - 2003
QUESTION & ANSWER - PART - 2
51 "மற்ற கலைகளைவிட இலக்கியக் கலைக்கு வடிவம் இன்றியமையாததாகும்” என்றவர் யார்?
A) இரா. சீனிவாசன்
B) வரதராசனார்
C) சக்திவேல்,
D) அகத்தியலிங்கம்
52. கலையின்பம் தவிர வேறொரு பயனும் கருதாமல் புலவர் இயற்றிய இலக்கியம்
A) சார்பு இலக்கியம்
B) நேர் இலக்கியம்
C) அக இலக்கியம்
D) இன்ப இலக்கியம்
53. 'திறனாய்வில் ஓரளவு முடிவு கூறும் இயல்பும் அமைந்திருப்பினும் ஒன்றை நல்லது என்றோ கெட்டது என்றோ கூறினால்தான் அது திறனாய்வாகும் என்று கருதுவது தவறு” - யார் கூற்று?
A) அ.ச. ஞானசம்பந்தன்
B) தா.ஏ. ஞானமூர்த்தி
C) முத்துசண்முகம்
D) மணவாளன்'
54. மு. வரதராசனார் எழுதிய புதினம் எது?
A) யவன ராணி
B) செந்தாமரை
C) சிவகாமியின் சபதம்
D) பத்மாவதி சரித்திரம்
55. "குளத்தங்கரை அரச மரம்” சொன்ன கதையின் ஆசிரியர் யார்?
A) புதுமைப்பித்தன்
B) வ.வே.சு. ஐயர்
C) பி.எஸ். இராமையா
D) மௌனி
56. இசையுலகில் "லயம்” என்னும் தாளவகை நிறைந்த களஞ்சியமாகப் போற்றப்படும் இலக்கியம்
A) திருவாசிரியம்
B) திருப்புகழ்
C) திருவிருத்தம்
D) திருவாய்மொழி
57. உரையாசிரியர்களில் பழைமையானவர் யார்?
A) நக்கீரர்
B) இளம்பூரணர்
C) பேராசிரியர்
D) சேனாவரையர்
58. மணப்பிரவாள நடையில் உரையெழுதப்பட்ட இலக்கியம் எது?
A) தேவாரம்
B) திருவாசகம்
C) நாலாயிர திவ்ய பிரபந்தம்
D) திருமந்திரம்
59. "தொண்டர் சீர் பரவுவார்” எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?
A) சேக்கிழார்
B) சுந்தரர்
C) கண்டராதித்தர்
D) திருமாளிகைத்தேவர்
60. திருவண்ணாமலைத் தலபுராணம் யார் எழுதியது?
A ) உமாபதி சிவம்
B) வேம்பத்தூரார்
C) நிரம்ப அழகிய தேசிகர்
D) எல்லப்ப நாவலர்
61 . மணிமேகலை எப்பா வகையில் யாக்கப்பட்டுள்ளது?
A) விருத்தம்
B) கலிப்பா
C) அகவல்
D) வஞ்சிப்பா
62. “முத்தி நூல்” என்று போற்றப்படும் நூலெது?
A) மணிமேகலை
B) சிலப்பதிகாரம்
C) சீவகசிந்தாமணி
D) பெருங்கதை
63. சிந்தாமணியோடு ஒத்து இடம் பெறத் தகுதியான காப்பியம் என அறிஞர் கூறும் சிறுகாப்பியம் எது?
A) சூளாமணி
B) நீலகேசி
C) யசோதர காவியம்
D) நாககுமார காவியம்
64. பல நூற்றாண்டுகட்கு முன்பே பத்து உரைகள் கண்ட நூலெது?
A) திரிகடுகம்
B) திருக்குறள்
C) நாலடியார்
D) ஏலாதி
65. "கழுமலம்” என்ற இடத்தில் நடந்த போரைப்பற்றிப் பாடிய இலக்கியம் எது?
A) கார் நாற்பது
B) களவழி நாற்பது
C) இன்னா நாற்பது
D) இனியவை நாற்பது
66. ஆற்றுப்படை இடம் பெறும் படலம் எது?
A) வெட்சி
B) கரந்தை
C) உழிஞை
D) பாடாண்
67. பாக்களுக்குரிய ஓசை எத்தனை என்கிறார் காரிகை ஆசிரியர்?
A ) ஒன்று
B) நான்கு
C) மூன்று
D) ஐந்து
68. 'தறுகண்' - எம்மெய்ப்பாட்டிற்குரியது?
A) மருட்கை
B) இளிவரல்
C) பெருமிதம்
D) வெகுளி
69. இடையில் நிற்கும் மொழி, முதலிலும் ஈற்றிலும் சென்று பொருள்கூடும் பொருள்கோள்
A) நிரனிறை
B) பூட்டுவில்
C) தாப்பிசை
D) ஆற்று நீர்
70. ஓசைகளின் வருணனையால் பெயர் அமையப்பெற்ற சங்க இலக்கியம் எது?
A) குறிஞ்சிப்பாட்டு
B) பெரும்பாணாற்றுப் படை
C) மலைபடுகடாம்
D) பட்டினப்பாலை
71. முன்பு பலவற்றிற்கும் பொதுவாக இருந்த சொல் இப்போது அவற்றுள் ஒன்றையே உணர்த்தல்
A) பொது பொருட்பேறு
B) சிறப்புப் பொருட்பேறு
C) நுண்பொருட்பேறு
D) பருப்பொருட் பேறு
72. குறுத்தாட் பூதம் - எவ்விகாரத்துள் அடங்கும்?
A) நீட்டல்
B) குறுக்கல்
C) வலித்தல்
D) மெலித்தல்
73. கடி மணச் சாலை - எக்குணந் தழுவிய உரிச்சொல்?
A) காப்பு
B) கூர்மை
C) நாற்றம்
D) புதுமை
74. எப்பாவினுள் நாலசைச்சீர் வராது?
A) வெண்பா
B) அகவற்பா
C) கலிப்பா
D) வஞ்சிப்பா
75. ஒழுக்கிய வண்ணங்களின் எண்ணிக்கை எத்தனை?
A) நூறு
B) தொண்ணூற்றாறு
C) நூற்றியெட்டு
D) தொண்ணூற்றைந்து
76. தர்க்கரீதியான சிந்தனை என்பது
A) குவி சிந்தனை
B) விரி சிந்தனை
C) ஆராய்தல்
D) ஆக்கபூர்வமான சிந்தனை
77. குழப்பமான கோட்பாடுடைய புத்திகூர்மை என்பதைத் தெரிவித்தவர்
A) கில்போர்டு
B) தார்ண்டைக்
C) தர்ஸ்டன்
D) ஸ்பியர்மேன்
78. ரோஸ்சாக் என்பவரின் மைத்தடம் சோதனையில் கீழ்க்காணும் எந்த ஒன்று அடங்காது?
A) உள்ளடக்கம்
B) தனித்தன்மை
C) அமைவிடம்
D) ஓங்கு தன்மை
79. பயிற்சி மாற்றத்தில் இணையான மூலகங்கள் எனும் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்
A) வுட்வொர்த்
B) ஜட்
C) தார்ண்டைக்
D) பாக்லே
80. இந்திய அரசியலமைப்பில் சட்டப்பகுதி 45-ன் கல்வியின் முக்கியத்துவம் யாது?
A) நல்ல வாழ்க்கைத் தர அமைப்பை உறுதிப்படுத்தும் பணிமுறை
B) வேலை செய்வதற்கான உரிமையை பெறுவதற்கான சட்ட நிபந்தனை
C) இலவச கல்விக்கான சட்ட நிபந்தனை
D) உலக ஆரம்பக் கல்விக்கான முக்கியத்துவம்
81 தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி அமைந்துள்ள இடம்
A) காவேரி நகர்
B) அமராவதி நகர்
C) கொங்கு நகர்
D) அசோக் நகர்
82. "தேர்வுகள் எதற்காக?” என்ற எண்ணம் கொண்டவர்
A) ஸ்கின்னர்
B) ஏ.எஸ்.நீல்
C) ஸ்ரீ அரவிந்தர்
D) இவான் இல்லிச்
83. எளிதில் கோபப்படும் குணமுடையவர்களின் மனநிலை
இயல்பானது
A) உணர்ச்சி வசப்படுபவர்
B) உணர்ச்சி வசப்படாதவர்
C) உடல் ரீதியாக பலஹீனமானவர்கள்
D) ஆன்மிக ரீதியில் உறுதியுள்ளவர்கள்
84. "மனித உரிமைகள்" எனும் உலக பிரகடனத்தில்அனைவருக்கும் வாழும் உரிமை, சுதந்திரம் மற்றும் மனித
பாதுகாப்பு என்பது எந்த சட்ட பகுதியில் கூறப்பட்டுள்ளது?
A)1
B) 2
C) 3
D) 4
85. ஸ்ரீ அரவிந்தரின் கூற்றுப்படி உண்மையான கற்றுவித்தலின் முதல் கொள்கையானது
A) செய்முறை கற்றல்
B) தானே கற்றல்
C) வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு கற்றல்
D) வாழ்க்கை சம்பந்தமான கல்வி
86. "வெற்றியைப்போல் பின்தொடர்வது வேறொன்றுமில்லை” என்ற கருத்துரையை விளக்கும் சட்டம்
A) தயார் நிலையில் இருத்தல்
B) பலன்
C) உபயோகம்
D) உபயோகமின்மை
87. தூண்டுதல் இல்லாமல் புலன்களால் உணர்வது என்பது அறியப்படுவது
A ) கற்பனை
B) மனமயக்கம்
C) உணரும் ஆற்றல்
D) கருத்தியல் எண்ணம்
88. உன்மனதிலிருந்து வேண்டுமென்றே கட்டாயமாக துன்பம் தரக்கூடிய மனப்பாங்கை தவிர்ப்பது
A) தேர்ந்தெடுத்து மறத்தல்
B) ஒடுக்குதல்
C) அடக்குதல்
D) ஒதுங்குதல்
89. பருப்பொருட்களின் இயக்கத்தை எடுத்துக்காட்டும் மூன்று தத்துவங்கள்
A) நஷ்ட ஈடு, தன்னலம் மற்றும் பிடிவாதம்
B) நஷ்ட ஈடு, மாற்றி அமைத்தல் மற்றும் ஒத்திருத்தல்
C) தன்னலம், உயிருள்ள உயிரற்ற அனைத்துக்கும் ஆத்மா உண்டு என்னும் கொள்கை மற்றும் யதார்ரத்தவியல்
D) உயிருள்ள உயிரற்ற அனைத்துக்கும் ஆத்மா உண்டு என்னும் கொள்கை மாற்றி அமைத்தல் மற்றும் பிடிவாதம்
90. ரோஸ்சாக் என்பவரின் மைத்தடச் சோதனை மிகவும் இதற்கு பிரசித்தமானது
A) நுண்ணறிவு
B) ஆர்வம்
C) ஊக்கி
D) ஆளுமை
91. பிற சங்க நூல்களினின்றும் மொழி நிலையில் மாறுபட்டு நிற்கின்ற எட்டுத் தொகை நூலெது?
A) பரிபாடல்
B) அகநானூறு
C) குறுந்தொகை
D) புறநானூறு
92. தென் திராவிட மொழியல்லாத மொழியைக் கண்டறிக.
A ) குடகு
B) கோண்டி
C) துளு
D) தோடா
93. பிறவியிலேயே கண் பார்வையற்றிருந்த தமிழ்ப் புலவர் யார்?
A) வீரராகவ முதலியார்
B) அதிமதுரகவி
C) குமரகுருபரர்
D) சிவப்பிரகாசர்
94. மதங்க சூளாமணி என்ற நாடக நாட்டிய நூலின் ஆசிரியர் யார்?
A) சி.வை. தாமோதரம் பிள்ளை
B) ஆறுமுக நாவலர்
C) விபுலாநந்தர்
D) கனகசபை புலவர்
95. ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காத நூலெது?
A) நாலடியார்
B) திருக்குறள்
C) திருவாசகம்
D) ஆசாரக்கோவை
96. மொழி அமைப்பின் ஆய்வில் அடங்கியுள்ள மூன்று அடிப்படைகளிலிருந்து வேறுபடும் ஒன்றைத் தருக.
A) மரபியல்
B) ஒலியனியல்
C) உருபனியல்
D) தொடரியல்
97. மொழியில் அமைந்துள்ள மூவகைச் சொல்லமைப்போடு பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக.
A) தனிநிலை
B) ஒட்டுநிலை
C) உட்பிணைப்பு நிலை
D) புதை நிலை
98. கோபாலகிருஷ்ண பாரதி பாடிய கீர்த்தனை வடிவிலான இசைப் பாக்களோடு பொருந்தாதது எது?
A) திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை
B) மெய்ப்பொருள் நாயனார் கீர்த்தனை
C) இயற்பகை நாயனார் கீர்த்தனை
D) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
99. தாலாட்டுகளின் ஒருங்கமைவு நடத்தையில் அடங்காத கூறு எது?
A) தூண்டல் உணர்வு
B) புலனுணர்வுக் காட்சி
C) அலைவுகள்
D) கற்றல்
100 . மயிலை சீனி வேங்கடசாமி எழுதாத நூல் எது ?
A ) சமணமும் தமிழும்
B ) சிலம்பும் மேகலையும்
C ) கிறித்தவமும் தமிழும்
D ) பௌத்தமும் தமிழும்
************** *************** *************
தேர்வில் வெற்றி உங்களுக்கே !
வாழ்த்தும் ,
பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை .
***************** ************* ***********
0 Comments