ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
வினாடி வினா - 3
வினாக்களும் விடைகளும்
************** ************* ************
1) ஒருவரின் உள்ளக்கருத்தை வெளியிடும் வாயில்கள் பேச்சும் ------ஆகும்.
அ) எழுத்தும்
ஆ) பாட்டும்
இ) நடிப்பும்
ஈ) ஓவியமும்
விடை : அ ) எழுத்தும்
2) கண்களால் பார்க்கப்பட்டு மனத்தால் உணரப்பட்டு நினைவால் சேமிக்கப்படுவது -----
அ) பேசுதல்
ஆ) பாடுதல்
இ ) எழுதுதல்
ஈ) வரைதல்
விடை : இ ) எழுதுதல்
3) கட்டுரை - பிரித்து எழுதுக.
அ) கட் + உரை
ஆ) கட்டு + உரை
இ) கட்டும் + உரை
ஈ) க + உரை
விடை : ஆ ) கட்டு + உரை
4) கட்டுரையின் நடுப்பகுதியாக
அமைவது -----
அ) முன்னுரை
ஆ) குறிப்புச்சட்டம்
இ) முடிவுரை
ஈ) பொருளுரை
விடை : ஈ ) பொருளுரை
5) கட்டுரையில் எழுதப்போகும்
கருத்தினைப்பற்றிய சிறு அறிமுகம் -----ல்
எழுத வேண்டும்.
அ) முன்னுரை
ஆ) பொருளுரை
இ ) முடிவுரை
ஈ) மேற்கோள்
விடை : அ ) முன்னுரை
6) கட்டுரையில் விளக்கப்பட்ட
கருத்துகளின் தொகுப்பாக ----- அமைதல் வேண்டும்.
அ) பொருளுரை
ஆ) முன்னுரை
இ) முடிவுரை
ஈ) சிறப்புரை
விடை : இ ) முடிவுரை
7) பேச்சின் முக்கூறுகள் எடுத்தல், தொடுத்தல் மற்றும் -------- ஆகும்.
அ ) முடித்தல்
ஆ) தொகுத்தல்
இ) வளர்த்தல்
ஈ) விடுத்தல்
விடை : அ ) முடித்தல்
8) கேட்போரை வயப்படுத்தும்
முறையில் பேச்சின் ------- அமைய
வேண்டும்.
அ ) முடிவு
ஆ) இடைப்பகுதி
இ) தொடக்கம்
ஈ) உச்சரிப்பு
விடை : இ ) தொடக்கம்
9) பேச்சின் எப்பகுதி கொடுக்கப்பட்ட தலைப்பை ஒட்டி அமைய வேண்டும்?
அ ) தொடக்கம்
ஆ) இடைப்பகுதி
இ) முடிவு
ஈ) மேற்கோள்
விடை : ஆ ) இடைப்பகுதி
10) ஒன்றைப்பற்றி பலருக்கு அறிமுகம் செய்வது எதுவோ அதுவே ------- ஆகும்.
அ) திரைப்படம்
ஆ) நாடகம்
இ) கூத்து
ஈ) விளம்பரம்
விடை : ஈ ) விளம்பரம்
11) இலக்கணம் -------- வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
விடை : ஈ ) ஐந்து
12) அணி என்ற சொல்லின் பொருள் -------
அ) அணிதல்
ஆ) அழகு
இ) அலங்காரம்
ஈ) ஒப்பனை
விடை : ஆ ) அழகு
13 ) அணி இலக்கணம் பற்றிக் கூறும் தொன்மையான நூல் -------
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தண்டியலங்காரம்
ஈ) மாறனலங்காரம்
விடை : இ ) தண்டியலங்காரம்
14) அணிகளில் முதன்மையான அணி -----
அ) உவமையணி
ஆ) உருவக அணி
இ) இல்பொருள் உவமையணி
ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
விடை : அ ) உவமையணி
15 ) உவம உருபு மறைந்து
வருவது -------
அ) உவமைத்தொகை
ஆ) உம்மைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ ) வினைத்தொகை
விடை : அ ) உவமைத்தொகை
16 ) தண்டியலங்காரத்தில்
சொல்லப்பட்டுள்ள அணிகளின்
எண்ணிக்கை ------
அ) 15
ஆ) 20
இ) 25
ஈ) 35
விடை : ஈ ) 35
17) இல்லாத ஒன்றை இருப்பது போல் கற்பனை செய்து அதனை
உவமையாக்கிக் காட்டும் அணி ------
அ) எடுத்துக்காட்டு உவமையணி
ஆ) இல்பொருள் உவமையணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) உவமையணி
விடை : ஆ ) இல்பொருள் உவமையணி
18 ) மலர் போன்ற முகம் - இத்தொடரில் உவமை ------
அ ) மலர்
ஆ) போன்ற
இ) முகம்
ஈ) மலர்முகம்
விடை : அ ) மலர்
19 ) " சுவை புதிது பொருள் புதிது
வளம்புதிது " என்று பாடிய கவிஞர் ------
அ ) கவிமணி
ஆ) நாமக்கல்கவிஞர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
விடை : இ ) பாரதியார்
20) பாடலின் பொருள் , சொல் , தொடை , ஒலி நயங்களை உணர்ந்து பொருளோடு
இணைத்துப் பொருள் கொள்ளுதல் ----- எனப்படும்.
அ) இலக்கண நயம் பாராட்டல்
ஆ) உரைநயம் பாராட்டல்
இ) பேச்சு நயம் பாராட்டல்
ஈ) செய்யுள் நயம் பாராட்டல்
விடை : ஈ ) செய்யுள் நயம் பாராட்டல்
***************** ******** ***************
வாழ்த்துகள்
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
**************** *********** ***************
0 Comments