முதுகலை - தமிழாசிரியர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரிய வினாத்தாள் 2002 - 2003 - வினாக்களும் விடைகளும் / TRB - PG - TAMIL - 2002 - 2003 - ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER

 

ஆசிரியர் தேர்வு வாரியம் 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2002 -2003 

வினாக்களும் விடைகளும்  - பகுதி - 1

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER  - 2002 - 2003

QUESTION & ANSWER - PART - 1


*****************     **********    *************

1. "அக்னிச் சிறகுகள்” என்ற நூலின் ஆசிரியர்

A) அன்னி பெசன்ட்

B) ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

C) ஜவஹர்லால் நேரு

D) மௌலானா அபுல் கலாம் ஆசாத்

2 . கணிப்பொறியின் நினைவாற்றல் பொதுவாக கிலோ பைட்ஸ் அல்லது மெகாபைட்ஸ் என்னும் பதத்தில் அழைக்கப்படுகிறது. பைட்டில் அடங்கியுள்ளது.

A) எட்டு இரும இலக்கங்கள்

B) எட்டு பதின்ம இலக்கங்கள்

C) இரண்டு இரும இலக்கங்கள்

D) இரண்டு பதின்ம இலக்கங்கள்

3 . உலகக் கால்பந்து கோப்பை 2002-இல் வெற்றி பெற்ற நாடு

A) தென்கொரியா 

B) ஜெர்மனி

C) பிரான்ஸ்

D) பிரேசில்

4. உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகர்

A) ராய்ப்பூர்

B) டேராடூன்

C) ராஞ்சி

D) திஸ்பூர்

5 . தமிழக அரசு சின்னத்தில் இடம் பெற்றிருக்கும் கோபுரம்

A ) மதுரை

B) ஸ்ரீவில்லிபுத்தூர்

C) தஞ்சாவூர்

D) இராமேஸ்வரம்

6 . ஜீன், ஜாக்குயஸ் ரூஸோ என்ற சிறந்த கல்வியாளர் வாழ்ந்த காலம்

A) 16-ஆம் நூற்றாண்டு 

B) 17-ஆம் நூற்றாண்டு

C) 18-ஆம் நூற்றாண்டு 

D) 19-ஆம் நூற்றாண்டு

7 . வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது?

A) தொடர்ச்சி

B) நேர்கோட்டு முறை

C) ஒருமைப்பாடு

D) வளைவான மேம்பாடு

8. நேற்றைய படிப்பை நினைவுகூர்ந்து பார்க்கும்போது இன்றைக்கு படித்த அறிவு அதனுடன் குறுக்கிடுகிறது என்பதை குறிப்பிடுவது

A) தீவிரமான எதிர்ப்பு

B) தீவிரமற்ற எதிர்ப்பு

C) தீவிர எதிர்ப்பிற்கு ஆதரவு

D) மறைவான எதிர்ப்பு

9 .தெளிவான கவனம் என்பது

A) பலன் தரும் உள்ளுணர்வு

B) மீண்டும் மீண்டும் துணிவான செயல்
 மூலம் பெறப்படுவது

C) பலன் தரக்கூடிய உணர்வுகள்

D) ஒரு துணிவான செயல் மூலம் பெறப்படுவது

10 ."உலக உயிரினங்களுக்கு உணவும், இனப் பெருக்கமும் எவ்விதம் இன்றியமையாத ஒன்றோ அதுபோன்றுதான் சமுதாயத்திற்குக் கல்வியும்” என்று கூறியவர்

A) ஜான் டூயி

B) ஏ.எஸ். நீல்

C) ப்ரோபெல்

D) ரூஸோ

11 . முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தைஅறிமுகப்படுத்தியவர்

A) மெக்லிலாண்டு 

B) டெம்போ

C) மாஸ்லோ

D) பினே

12 . இரைச்சலிடும் குழந்தை மற்றும் அமைதியான மனம் என்பவைகளை எழுதியவர்

A) ஜே. கிருஷ்ணமூர்த்தி 

B) ஜான் டூயி

C) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் 

D) ஸ்ரீ அரவிந்தர்

13. ஆக்கநிலையுறுத்தலை ஆராய்ந்த மனோதத்துவ ஞானி யார்?

A) கில்ஃபோர்டு

B) பாவ்லாவ்

C) மாஸ்லோ

D) ஷெல்டன்

14. கல்வி நுட்பத்தின் முக்கியமான நோக்கம்

A) தனித்தனியான குறிப்பு

B) நேரடித் தொடர்பு

C) தொழில் நுட்பங்களை
 மேம்படுத்துவதற்கான நுட்பம்

D) மாற்று தகவல் தொடர்பு முறையை தேர்ந்தெடுத்தல்

15. ஆக்கத்திறன் முறையுடன் தொடர்பு இல்லாத ஒன்று எது?

A) அடைகாத்தல் 

B) தயாரித்தல்

C) ஊக்குவித்தல் 

D) முடிவெடுத்தல்

16. சமயப் போராட்டங் கடந்து சமரச ஒளி கண்டவர் யார்?

A) தத்துவராயர் 

B) தாண்டவராயர்

C) சிதம்பர சுவாமிகள் 

D) இராமலிங்கர்

17. போர் பற்றிப் பாடாத நூலைக் கண்டறிக :

A) தகடூர் யாத்திரை 

B) கைந்நிலை

C) களவழி நாற்பது 

D) கலிங்கத்துப்பரணி

18. சமண சமயக் காப்பியம் அல்லாததைக் குறிப்பிடுக.

A) வளையாபதி

B) குண்டலகேசி

C) நீலகேசி

D) சூளாமணி

19. குரங்கின் ஏற்றினை எப்பெயரிட்டழைத்தனர்?

A) கோட்டான்

B) கடுவன்

C ) பூசை

D) ஏனம்

20. பி.எஸ். இராமையா எழுதாத நாடகம் எது?

A) மல்லியம் மங்களம் 

B) தேரோட்டி மகன்

C) போலீஸ்காரன் மகள் 

D) மேனகா

21 நிகண்டுகள் வரிசையில் அடங்காத நூல் எது?

A) திவாகரம்

B) யாப்பருங்கலம்

C) பிங்கலந்தை

D) சதுரகராதி

22 சட்டத்துறையோடு தொடர்பில்லாத தமிழறிஞர் யார்?

A) பா.வே. மாணிக்க நாயக்கர்

B) கே.எஸ். சீனிவாச பிள்ளை

C) சி.கே. சுப்பிரமணிய முதலியார்

D) சோமசுந்தர பாரதியார்

23. புதுக்கவிதை பாடாத தமிழ்க் கவிஞர்

A) சி.சு. செல்லப்பா 

B) கோபாலகிருஷ்ண பாரதி

C) ந. பிச்சமூர்த்தி 

D) வல்லிக்கண்ணன்

24. வரலாற்று நாவல்களோடு தொடர்பில்லாத எழுத்தாளர்

A) விக்ரமன்

B) ஜெகசிற்பியன்

C) அரு.இராமநாதன் 

D) மு.வரதராசனார்

25. அகிலன் எழுதாத நூல் எது?

A) சித்திரப்பாவை 

B) கயல்விழி

C) அக்கினிக்கோபம் 

D) வெற்றித் திருநகர்

26. "ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்” - இவ்வடியிலுள்ளதொடை எது?

A) அந்தாதி

B) இரட்டை

C) செந்தொடை

D) எதுகை

27. திரிசொற்களால் ஓசை இனிதாகப் புணர்க்கப்படும் செய்யுள் எவ்வனப்பினுள் அடங்கும்?

A) இயைபு

B) இழைபு

C) அழகு

D) அம்மை

28. "கூடார் மண் கொளல்”- எப்புறத் திணையைச் சார்ந்தது?

A) வெட்சி

B) வஞ்சி

C) உழிஞை

D) தும்பை

29. காப்பியப் பண்பை உணர்த்துகின்ற அணி எது?

A) சங்கீரணம்

B) பரிவர்த்தனை

C) பாவிகம்

D) நிதரிசனம்

30. மருதத்திற்குரிய சிறுபொழுது எது?

A) மாலை

B) எற்பாடு

C) நண்பகல்

D) காலை

31 “சரசுவதி” என்ற சொல் எக்கீரை வகையைக் குறிப்பதாக சித்தர் பாடல் குறிக்கின்றது?

A) முளைக்கீரை

B) சிறுகீரை

C) பொன்னாங்கண்ணிக் கீரை

D) வல்லாரைக் கீரை

32 அன்பே சிவம்” என்று கூறியவர் யார்?

A) திருமூலர்

B) திருவெண்காடர்

C) பரஞ்சோதியார் 

D) வில்லிபுத்தூரார்

33. கம்பராமாயணத்தை உரைநடையில் எழுதியவர் யார்?

A) சோமசுந்தர நாயகர்

B) தண்டபாணி சுவாமிகள்

C) திருச்சிற்றம்பல தேசிகர் 

D) விசாகப் பெருமாள் ஐயர்

34. நெஞ்சுவிடு தூதின் ஆசிரியர் யார்?

A) அருள்நந்தி சிவாச்சாரியார்

B) மெய்கண்டார்

C) திருவியலூர் உய்யவந்த நாயனார்

D) உமாபதி சிவாச்சாரியார்

35. இந்திய மக்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தும் உரிமை பெற்ற நூற்றாண்டு

B) பதினேழு

C) பதினெட்டு

D) பத்தொன்பது

36. கர-மு.ஷெரீப் இயற்றிய நூலெது?

A) இலக்கியப் பூங்கா

B) மோகிதின் புராணம்

C) நபியே எங்கள் நாயகமே 

D) கவிப் பூஞ்சோலை

37. சத்திய வேதக் கீர்த்தனை என்ற இசைப் பாக்களடங்கிய நூலின் ஆசிரியர் யார்?

A) வேதநாயகம் பிள்ளை

B) இரேனியல்

C) கிருஷ்ணப்பிள்ளை

D) சேவியர்

38. கால்டுவெல் எழுதிய உரைநடை நூலெது?

A ) ஞானக்கோயில்

B) இரட்சணிய யாத்ரிகம்

C) இரட்சணிய மனோகரம் 

D) ஆத்ம நிர்ணயம்

39. “உரைநடைக் கோவை” எனும் நூலை எழுதியவர் யார்?

A) பூரணலிங்கம் பிள்ளை

B) சோமசுந்தர பாரதியார்

C) கதிரேசச் செட்டியார்

D) மாணிக்க நாயக்கர்

40. குழந்தை இலக்கியம் வளர்ப்பதையே தன் வாழ்நாள் தொண்டாகக் கொண்டவர்

A) பெ. தூரன்

B) அழ. வள்ளியப்பா

C) தமிழ் ஒளி

D) கா. நமச்சிவாயம்


41 . ஐ , ஔ இவற்றை இலக்கண
நூலார் எவ்வாறழைக்கின்றனர்?

A) உயிர்

B) உயிர்மெய்

C) முதல்

D) சந்தியக்கரம்

42 நாட்டுப்புறப் பாக்கட்கு முதன் முதலில் இலக்கிய வடிவம் தந்தவர் யார்?

A) இளங்கோ

B) சீத்தலைச்சாத்தனார்

C) திருத்தக்கதேவர் 

D) கம்பர்

43. சிலப்பதிகாரம் காட்டும் கொடியவன் யார்?

A) கோசிகாமணி 

B) மாசாத்துவான்

C) மாநாய்க்கன் 

D) பொற்கொல்லன்

44. பாக்களேதும் கிடைக்கப் பெறாமல் பெயர் மட்டுமே அறியப்படுகின்ற சிறு காப்பியம் எது?

A) நாக்குமார காவியம் 

B) நீலகேசி

C) உதயணகுமார காவியம் 

D) யசோதர காவியம்

45. முருகனின் அவதாரம் எனக் கருதப்பட்டவர் எவர்?

A) திருநாவுக்கரசர் 

B) திருஞானசம்பந்தர்

C) பரஞ்சோதியார்

D) கருவூர்த்தேவர்

46. பாம்பு வணக்கம், நிறைந்த அளவில் காணப்படும் மாநிலம் எது?

A) மலையாளம்

B) கர்நாடகம்

C) ஆந்திரம்

D) வங்காளம்

47. காமராசர் தாலாட்டுப் பாடிய கவிஞர் யார்?

A) பாரதிதாசன்

B) பொன்னடியான்

C) மீரா

D) கண்ணதாசன்

48. மணம் முடிந்தபின் மணமக்களை நாவிதர்கள் வாழ்த்தும் வழக்கம் காணப்படும் மாவட்டம்

A ) திருச்சி 

B) மதுரை

C) சேலம்

D) தஞ்சை

49. பேய்விரட்டும் வினையில் சிறந்தவர்கள் என்று யாரை நாட்டுப்புறப் பாக்களில் குறிப்பிடுகின்றனர்?

A) கோடாங்கி

B) குடுகுடுப்பை

C ) குறி 

D) இராப்பாடி

50 ) கும்மியைக் ' கொம்மை ' எனக் குறிப்பிட்ட  இலக்கியம் எது ? 

A ) வளையாபதி 

B ) குண்டலகேசி 

C ) சீவகசிந்தாமணி 

D ) சூளாமணி 

***************    **************    ************

தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை .

*****************   *************   ************

Post a Comment

0 Comments