பத்தாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
வினாடி வினா - 2
இயங்கலைத் தேர்வு - பகுதி - 2
வினாக்களும் விடைகளும்
*************** ************ ***********
1) பொருள் முடிவு பெற்று வரும் வினைச்சொல் ----- எனப்படும்.
அ) வினையெச்சம்
ஆ) வினைத்தொகை
இ) வினைமுற்று
ஈ) வியங்கோள் வினைமுற்று
விடை : இ) வினைமுற்று
2) முற்றுப்பெறாத வினைச்சொல் ----எனப்படும்.
அ) எச்சம்
ஆ) முற்றெச்சம்
இ) வினைமுற்று
ஈ) வினையெச்சம்
விடை : அ) எச்சம்
3) பெயரைக் கொண்டு முடியும் எச்சம் -----
அ) வினையெச்சம்
ஆ) பெயரெச்சம்
இ) எச்சவினை
ஈ) வினைத்தொகை
விடை : ஆ) பெயரெச்சம்
4) பெயரெச்சம் ---- காலம் காட்டும்
அ) இறந்த
ஆ) நிகழ்
இ) எதிர்
ஈ) மூன்று
விடை : ஈ) மூன்று
5) ஆஃப்லைன் - இதன் தமிழ்ச்சொல்
அ) இயங்கலை
ஆ) முடக்கலை
இ) நிகழ்நிலை
ஈ) நுண்கலை
விடை : ஆ) முடக்கலை
6)வைரஸ் - இதன் தமிழ்ச்சொல்
அ) தீ நுண்மி
ஆ) நுண்கிருமி
இ) உயிர்க்கொல்லி
ஈ) ஆட்கொல்லி
விடை : அ) தீ நுண்மி
7) சாவி - இதன் தமிழ்ச்சொல்
அ) அளவுகோல்
ஆ) துலாக்கோல்
இ) திறவுகோல்
ஈ) கரிக்கோல்
விடை : இ) திறவுகோல்
8) அதிபர் - இதன் தமிழ்ச்சொல்
அ) தலைவர்
ஆ) குரு
இ) ஆசான்
ஈ) சர்வாதிகாரி
விடை : அ) தலைவர்
9) சோஷியல் டிஸ்டன்சிங் - இதன்
தமிழாக்கம்
அ) உணவு இடைவேளை
ஆ) பாட இடைவேளை
இ) தேநீர் இடைவேளை
ஈ ) சமூக இடைவேளை
விடை :ஈ ) சமூக இடைவேளை
10) வானமளந்தது அனைத்தும் அளந்திடு ------ மொழி வாழியவே!
அ) நம்மொழி
ஆ) செம்மொழி
இ) தென்மொழி
ஈ) வண்மொழி
விடை : ஈ) வண்மொழி
11) இசை கொண்டு வாழியவே! - இதில்
இசை என்பதன் பொருள் -----
அ) ஒலி
ஆ) இசை
இ) மேற்கத்திய ஒலி
ஈ) திசை
விடை : ஆ) இசை
12) சூழ்கலி என்பதன் பொருள்
அ ) சூழ்ந்துள்ள கடல்
ஆ) கத்தும் ஒலி
இ) சூழ்ந்துள்ள அறியாமை இருள்
ஈ) நண்பனின் பொருள்
விடை : இ) சூழ்ந்துள்ள அறியாமை இருள்
13) மஞ்சள் பூசி வந்தாள் என்பது ---- ஆகு
பெயர்.
அ) இடவாகுபெயர்
ஆ) சினையாகுபெயர்
இ ) பண்பாகு பெயர்
ஈ) கருத்தாவாகு பெயர்
விடை : இ ) பண்பாகு பெயர்
14 ) ஒன்றின் இயற்பெயர் அதனோடு
தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது ----- எனப்படும்.
அ) ஆகுபெயர்
ஆ) பண்புப்பெயர்
இ) தொழிற்பெயர்
ஈ) கருவியாகு பெயர்
விடை : அ) ஆகுபெயர்
15) ஊர் சிரித்தது' - இது ------ ஆகு பெயர்
அ) பொருளாகு பெயர்
ஆ) கருத்தாவாகு பெயர்
இ) இடவாகுபெயர்
ஈ) காலவாகுபெயர்
விடை : இ) இடவாகுபெயர்
16) ' ஐந்து கிலோ கொடு' - இதில் வந்துள்ள ஆகுபெயர் -----
அ) பொருளாகுபெயர்
ஆ) சினையாகுபெயர்
இ) எடுத்தலளவையாகுபெயர்
ஈ) கருவியாகுபெயர்
விடை : இ) எடுத்தலளவையாகுபெயர்
17) நுண்ணிய நூல் பல கற்றவருக்கே
அமையத்தக்க அரிய கலை
அ) பேச்சுக்கலை
ஆ) ஓவியக்கலை
இ) சிற்பக்கலை
ஈ) நடனக்கலை
விடை : அ) பேச்சுக்கலை
18) நோயற்ற வாழ்வே ----- செல்வம்
அ) விலையற்ற
ஆ) நம்வீட்டு
இ) நிலையற்ற
ஈ) குறைவற்ற
விடை : ஈ) குறைவற்ற
19 ) எழுத்து வடிவிலான தகவல்
பரிமாற்றத்தைக் குறிப்பது
அ) கடிதம்
ஆ) மின்னஞ்சல்
உ ) உரைவீச்சு
ஈ) தொலைநகல்
விடை : அ) கடிதம்
20 ) கடிதம் ------ வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஏழு
விடை : அ) இரண்டு
0 Comments