எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - 5 , கவிதைப்பேழை - 5 , வினா & விடை / 8th TAMIL - QUIZ - 5 , QUESTION & ANSWER

  

எட்டாம் வகுப்பு - தமிழ் -

வினாடி வினா - 5

 கவிதைப்பேழை - ஓடை


1. கீழ்வருவனவற்றுள் வாணிதாசனின் சிறப்புப்பெயர்களில் பொருந்தாததை எழுதுக.

(அ) சிந்துக்குத்தந்தை

இ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்

ஆ) பாவலர்மணி

ஈ) கவிஞரேறு

விடை: சிந்துக்குத் தந்தை

2. கீழ்வருவனவற்றுள் எதுகை இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க.

(அ) கொஞ்சி - குலவி

இ) நெஞ்சில் -செஞ்சொல்

ஆ) நன்செய் - புன்செய்

ஈ) ஏடு -ஈடு

விடை: கொஞ்சி - குலவி

3. சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க

அ) வாணிதாசன் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் கவிஞர் என்று புகழப்படுபவர்.

ஆ) தமிழகத்தின் கவிஞர் வாணிதாசன் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்.

இ) கவிஞர் வாணிதாசன் என்று புகழப்படுபவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்.

ஈ ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.

விடை! ஈ ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.

4. சேர்த்தெழுதுக.

அ) செம்மை +சொல்-  செஞ்சொல்

ஆ ) நீளுழைப்பு-  நீள் + உழைப்பு

5. சொல்லையும் அதற்கான பொருளையும் பொருத்துக.

விடை

அ) மாதர்   -பெண
ஆ) கவி   --அழகு 
இ) ஈடு  - இணை
ஈ ) ஏடு  - நூல் 

6. கீழ்க்காணும் பாடலடிகளின் பொருளை உன் சொந்த நடையில் எழுதுக.

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
நீளுழைப்பைக் கொடையைக் காட்டி'

விடை:

நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர்வெட்கப்படுமாறு
இடையறாது ஓடி தன் உழைப்பைக் கொடையாகத்தருகிறது.

7. உனக்குத் தெரிந்த நீர்நிலைகளின் பெயர்களை எழுதுக.

விடை:

அருவி, ஓடை, ஏரி, ஆறு, குளம், குட்டை, ஊருணி,கேணி, கிணறு, சுனை, கடல், தடாகம், பொய்கை.

8. பாடலைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

"ஓடை ஆட உள்ளம் தூண்டுதே-கல்லில்
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் (ஓடை ஆட)
நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி
நாட்டு மக்கள் வறுமை ஓட்டி"
(ஓடை ஆட)

வினாக்கள்:

அ) பாடலடிகள் எதனைப் பற்றி எழுதப்பட்டுள்ளன?

விடை: 

பாடலடிகள் நீரோடையில் உள்ள நீர்வளத்தைப் பற்றி
எழுதப்பட்டுள்ளன.

ஆ) பாடலில் இடம்பெறும் நிலங்களின் வகைகள் யாவை?

விடை:

நன்செய், புன்செய்

இ) எது நாட்டு மக்களின் வறுமையைப் போக்குகிறது?

விடை:     நீரோடை


'ஈ )  நன்செய்' - என்னும் சொற்றொடரில் 'செய்' என்பதன் பொருள் என்ன?

விடை:

செய் - நிலம், வயல்

9. கட்டத்தில் விடுபட்டுள்ள பாடல் வகை, பாடும் சூழலை நிரப்புக.
பாடல்வகை /       பாடும் சூழல்

வள்ளைப்பாட்டு/ நெல்குத்தும்போது பாடுவது.

தாலாட்டு

குழந்தையைத் தூங்க வைக்கப் பாடுவது.

ஒப்பாரிப்பாட்டு -  மனிதன் இறந்த பிறகு பாடுவது


ஏற்றப்பாட்டு

நீர் இறைக்கும்போது பாடுவது.

நடவுப்பாட்டு -  நாற்று நடும்போது பாடுவது

10. கீழ்க்காணும் படத்தைப் பார்த்து 'இயற்கை' என்னும் தலைப்பில் நான்கு வரி கவிதை
எழுதுக. விடையைக் குறிப்பேட்டில் எழுதுக.

மாணவர்கள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை கவிதையாக எழுதலாம். மதிப்பெண் வழங்கப்படும். 

******** ******* ******* ******* ****** ******

 


ஆக்கம் - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

நேரடிக் காட்சிப்பதிவாகவும் மேல உள்ள வினாக்களை Green Tamil என்ற You Tube சேனலில் பார்க்கலாம்.

இதோ அதற்கான இணைப்பு

https://youtu.be/GI4HGAie-wA

பார்த்து மகிழுங்கள் , பகிர்ந்து மகிழுங்கள்.


Post a Comment

0 Comments