எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - 16 , கவிதைப்பேழை - திருக்கேதாரம் - வினா & விடை / 8th TAMIL - QUIZ - 16 , QUESTION & ANSWER

 

 

எட்டாம் வகுப்பு - தமிழ்  

    வினாடி வினா  - 16       

கவிதைப்பேழை - திருக்கேதாரம்



1. பொருத்துக.

                                       விடை

அ ) பண்          -   இசை

ஆ ) சுனை      -   நீர்நிலை

இ) முரலும்      -   முழங்கும்

ஈ ) வேழம்         -  யானை


2. திருக்கேதாரம் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

அ) திரு+ கேதாரம்

ஆ) திருக் + கேதாரம்

இ) திருவை + கேதாரம்

ஈ ) திருக்கை + தாரம்


விடை :   ஆ) திருக் + கேதாரம்


3. சரியான விடையைத் தேர்க.

தேவாரம் பாடிய மூவர் -

அ) திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்

ஆ) சுந்தரர், பட்டினத்தார், நாவுக்கரசர்

இ) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

ஈ) திருஞானசம்பந்தர், நம்பியாண்டார் நம்பி, திருநாவுக்கரசர்


விடை : இ) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்


4. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

பதிகம் என்பது  ---------------

பாடல்களைக் கொண்டது.

அ) எட்டு

ஆ) பத்து

இ) ஐந்து

ஈ) ஏழு

விடை :  ஆ) பத்து


5. திருக்கேதாரப் பாடலில் அமைந்துள்ள இசைக்கருவிகளின் பெயர்களை எழுதுக.

1 ) புல்லாங்குழல்  2  ) முழவு


6. கீழ்க்காணும் திருக்கேதாரப் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து  எழுதுக.

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்

கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய

மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்

கிண் என்று இசைமுரலும் திருக்கேதாரம் என்னீரே

விடை :  எதுகைச் சொற்கள்  - ண் 

1 ) பண்ணின் 

2 ) கண்ணின் 

3 ) மண்நின்றன

4 ) கிண்என்று


7. தொடர் அமைத்து எழுதுக. அ) பழவெய்

ஆ) சொரிய

விடை :  

அ ) பழவெய் கொண்டு குழல் செய்தான்

ஆ ) தேவாரப்பாடல்கள் தேன் சொரிய அமைந்துள்ளன.

8. திருக்கேதார நகரின் சிறப்புகளைத் தொகுத்து எழுதுக.

விடை :

1 ) தமிழ்ப்பாடல்களைப் பாடும்போது புல்லாங்குழலும் , முழவும் இணைந்து ஓலிக்கும்.

2 ) நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்

3 ) மதயானைகள் மணிகளை வாரிவாரி வீசும்.

4 ) இதனால் ' கிண் ' எனும் ஒலியானது இசையாக முழங்கும்.



*****************   ***********************

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.




Post a Comment

0 Comments