PG - TRB - தமிழ் - வினாத்தாள் 2012 - 2013 வினாத்தாள் - பகுதி - 1 , வினாக்களும் , விடைகளும் / PG TRB - TAMIL - 2012 - 2013 - ORIGINAL QUESTION PAPER - QUESSTION & ANSWER - PART - 1

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2012 - 2013

வினாக்களும் விடைகளும் - பகுதி - 1

01  முதல் 50 வரை - வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER - 2012  - 2013

QUESTION & ANSWER - PART - 1

****************    *************   ***********

1 . Baby என்னும் ஆங்கிலப் பாடலைக் குழந்தை என்ற தலைப்பில் மொழி பெயர்த்தவர்

A) அழ வள்ளியப்பா

B) மு. கதிரேசன்

C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

D) புலவர் குழந்தை

2. பாரதியின் தனிமை இரக்கம் என்ற பாடல் அச்சேறிய இதழ்

A) விவேகபாநு

B) இந்தியா

C) சுதேசமித்திரன்

D) நவசக்தி

3 . பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய முதல் நாடகம்

A) மாக்பெத்

B) புஷ்பவல்லி

C) சதிலீலாவதி. 

D) வள்ளி திருமணம்

4 . சம்பாமி யுகே யுகே என்ற நாடகத்தைப் படைத்தவர்

A) சோ. ராமசாமி

B) ஆர்.எஸ். மனோகர்

C) ஹெரான் ராமசாமி 

D) வி.எஸ். ராகவன்

5 . வாயடியும் கையடியும் மறைவது எந்நாள்? என்று உள்ளம் குமுறிய கவிஞர்

A) பாரதியார்

B ) சுரதா

C) பாரதிதாசன் 

D) நாமக்கல் கவிஞர்

6 . குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையைப் படைத்தவர்

A) புதுமைப்பித்தன்

B) கு.ப.ரா

C) ஜெயகாந்தன்

D) வ.வே.சு. ஐயர்

7 . சொர்க்கத்தில் அண்ணா என்னும் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர்

A) புதுமைப்பித்தன் 

B) அப்துல் ரகுமான்

C) கண்ணதாசன் 

D) நாவலர் நெடுஞ்செழியன்

8 . அஞ்சலகம் (Post Office) என்ற நாடகத்தைப் படைத்தவர்

A) சரோஜினி நாயுடு

B) கண்ணதாசன்

C) இரவீந்திரநாத் தாகூர் 

D) ஆர்.கே. நாராயண்

9 . ஜுலியஸ் சீசர்' - நாடகத்தைத் தெலுங்கில் மொழி பெயர்த்தவர்

A) வாசுதேவ சாஸ்திரி 

B) ஆனந்த கஜபதி

C) வீரேசலிங்கம்

D) இராமச்சந்திர கவி

10. பட்டுப்புடவை என்னும் கவிதையின் ஆசிரியர்

A) ஆர். சூடாமணி 

B) அநுத்தமா

C) லக்ஷ்மி

D) சிவசங்கரி

11.இஸ்லாமியத் தாயுமானவர் இவர்களுள் யார்?

A) செய்குதம்பிப் பாவலர் 
B) உமறுப்புலவர்
C) குணங்குடி மஸ்தான் 
D) ஜவ்வாதுப் புலவர்

12. தஞ்சைவாணன் கோவை நூலின் ஆசிரியர்

A) பொய்யாமொழிப் புலவர் 
B) ஒட்டக்கூத்தர்
C) மாணிக்கவாசகர் 
D) மீனாட்சி சுந்தரம்பிள்ளை

13. 'குழவி மருங்கினும் கிளவதாகும்' எந்தச் சிற்றிலக்கியத்தின்
அடிப்படையாய் அமைந்தது?

A) பிள்ளைத்தமிழ்
B) குழந்தைப் பாடல்கள்
C) மாலை
D) கோவை

14. செய்யுளின் ஓரிடத்தில் நிற்கும் சொல், செய்யுளின் முதல், இடை, கடை எனப் பிற இடங்களிலும் சென்று பொருள் தரும் அணி

A) நிரனிறை
B) சமாகிதம்
C) தீவகம்
D) சங்கீரணம்

15. பட்டில்-1ஐ பட்டியல்-2உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் -1            பட்டியல் - 2

a) வெட்சி               1. முல்லை

b) வஞ்சி                2. குறிஞ்சி

c) உழிஞை           3. பாலை

d) வாகை              4. மருதம்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 2 1 4 3

B) 3 4 1 2

C) 4 3

D) 2 1


Post a Comment

0 Comments