உலக உணவு தினம் - அக்டோபர் - 16 - WORLD FOOD DAY

 

       உலக   உணவு   தினம்

      (  WORLD  FOOD  DAY ) 

               16 • 10 • 2021 


" இனியொரு  விதி   செய்வோம்

அதை   எந்த   நாளும்   காப்போம்

தனியொருவனுக்கு   உணவில்லை    யெனில்

இந்த   ஜெகத்தினை   அழித்திடுவோம். "

                               --     மகாகவி   --

          உணவின்  முக்கியத்துவம் போற்றவும், நல்ல  ஆரோக்கிய உணவு     கிடைக்க     வேண்டியும்  ,   உலகின்    அனைத்து மக்களும்    பசியால்  வாடக்கூடாது  என்பதற்காக   ஆண்டு தோறும்  அக்டோபர்  16   ஆம்   நாள்   உலக   உணவு  தினமாக   அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய  நாடுகள்  சபையின்  துணை அமைப்பான   உணவு     மற்றும்   வேளாண்மை     நிறுவனம்(  Food  and  Agriculture   Organisation -- FAO )  ஆனது 1945  --ஆம் ஆண்டு   அக்டோபர்   16 -- ஆம்  நாள்  தொடங்கப் பட்டது.

   AFO --  அமைப்பு  தொடங்கப்பட   தினத்தை  உலக உணவு தினமாக   1979 -- ல்  இருந்து  கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஹங்கேரியின்    முன்னாள்  வெளிநாட்டமைச்சர்" பால்   ரொமானி    என்பவரின்   முன்முயற்சியினால்  இத்தீர்மானம்  முழுமையாக  ஏற்கப்பட்டது. தற்போது இத்தினத்தை 150- க்கும்  மேற்பட்ட  நாடுகள்  கொண்டாடி வருகின்றன.

       பசி  மற்றும்  பட்டினியைப்    போக்குவதும்  ஊட்டச்சத்து நிறைந்த    உணவை  உறுதி செய்யவும் ,  நடவடிக்கை எடுப்பதே  இந்நாளின்   நோக்கமாகும்.  இந்த   விழிப்புணர்வு   நாளனது   உணவுகளை  சரியான எளிய  விலை   மற்றும்   அனைவருக்கும்   கிடைக்கக்  கூடியதாக   மாற்றுவதற்கான  வழிகளைப்  பல  துறைகளில்  நடவடிக்கை   எடுக்க   வேண்டி   வலியுறுத்துகின்றன. உண்ணும்   உணவு   சத்துக்கள்   நிறைந்ததாக   இருக்க  வேண்டுமெனவும்   ஊட்டச்சத்துக்  குறைபாட்டால்  பாதிக்கப்பட்ட கூடாது  எனவும்   ஐ.நா வின்  உணவு வேளாண்மைஅமைப்பு  தெரிவிக்கின்றது.  ஆரோக்கியமற்ற  உணவுப்பழக்கங்களை   விடுத்து   உடல்  ஆரோக்கியத்திற்கு  ஏற்பச் சரியான   சத்துள்ள   உணவுகளை   உண்ண வேண்டும்.ஆரோக்கிய மற்ற  உணவால்   பல  நோய்கள்   ஏற்படுகின்றன.  இவற்றைப்  போக்க ,  உடல்நலம்  காக்கும்  பழங்கள் காய்கள் ,  சிறுதானியங்கள்,   பருப்பு வகைகள்  ஆகியவற்றைச்   சேர்த்துக்   கொள்ள   வேண்டும்.

        உலகில்  80 -- கோடி  மக்கள்  பட்டினியால்  பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்ல  ஊட்டச்சத்துக்  குறைவால்  ஆண்டுதோறும்  30 -   இலட்சம்     குழந்தைகள் ஐந்து    வயதுக்குள் உயிரிழக்கும்  அபாயம்  உள்ளதாக  அறியப்படுகிறது. எனவே உணவை   நாகரீகம்   கருதி  வீணாக்காமலும், துரித உணவுகளைப்  பயன்படுத்தாமலும்   இருத்தல்   நலம்காணும்  வழியாகும்.

           .இன்றைய   இயந்திர  வாழ்க்கையில்   உணவு ,  சுகாதாரம் விளம்பர  மோகம்  ஆகியவற்றில்  சிக்கி   மனித இனமே உணவு மற்றும்  கலாச்சாரத்தில்   சீரழிந்து   கொண்டிருக்கும்  நிலை காணப்படுகிறது.     இவை தொடரும் பட்சத்தில் மாறிவரும்   வாழ்க்கைமுறையின்   காரணமாக   எதிர்காலத்தில்   பணம்  இருக்கலாம்,   ஆனால்   நல்ல  ஆரோக்கிய உணவு   கிடைக்க    வேண்டிய  நிலை  அரிதாகவே   இருக்கப்போவதாக   ஆராய்ச்சிகள்   எச்சரிக்கின்றன . எனவே   உணவு உற்பத்திக்கான   வழியை   செம்மைப் படுத்தினால்  மட்டுமே மக்கள்  அனைவருக்கும்  உணவு  கிடைக்கும்  என  புரிந்து கொள்ள வேண்டும். 

      ஐ.நா வின்   கணக்குப்படி  10 - நொடிக்கு  ஒரு  குழந்தை  பசியால்   இறக்கிறது .எனவே  ஒவ்வொருவரும்  தங்களால் முடிந்த   அளவு   அனாதை   விடுதிகளுக்கும்,  முதியோர் இல்லங்களுக்கும்   உதவ  முன்வரவேண்டும் . மேலும்  உடல் ஊனமுற்றவர்கள்  ,   இயற்கைச்  சீரழிவுகளால்   பாதிக்கப்பட்ட   மக்கள்   உயிர்வாழ   உணவுக்  கொடுப்பது  ஒவ்வொரு அரசின்     அவசியம்    என    ஐக்கிய  நாடுகளின் சபை தெரிவிக்கிறது. நல்ல   உணவுப்  பழக்கம்  நோய்கள்  மற்றும் அவற்றைத்  தடுக்கும்   விதமாக   அமைதல்  நலம்பயக்கும். மேலும்  வளரும்  பருவத்திலேயே  குழந்தைகளுக்கு   நல்ல உணவு  மற்றும் அவற்றை வீணாக்காமல்      பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்   . துரித     உணவுகளைத் தவிர்த்து சத்தான   உணவுகளின்   மேன்மையை   உணர்த்த  வேண்டும். இதன்  மூலமே   ஆரோக்கியமான  அடுத்த  தலைமுறையை உருவாக்க  முடியும். எனவே   சத்து    நிறைந்த  ஆரோக்கிய உணவைப்  பயன்படுத்தியும்,  எளிய  மக்களுக்கு  உதவியும் , உணவை  வீணாக்காமல்   உடல்நலம்   காப்போம் .!உலகில்   உயிர்கள்  நிலை பெறக்  காரணமான  உணவைப்போற்றி ,  உலக   உணவு  தினத்தைக்  கொண்டாடுவோம்.!

****************    **************   *************

Post a Comment

0 Comments