பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 15
மதிப்பீடு
1 உலக வெப்பமயமாதலுக்கான காரணங்களைப் பட்டியலிடவும்
* புவி மேற்பரப்பில் ஏற்படும் சீரான வெப்பநிலை உயர்வே உலக வெப்பமயமாதல்
* வெப்பமயமாதலுக்கான காரணங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று இயற்கையால் ஏற்படுவது , மற்றொன்று மனிதனால் உருவாக்கப்படுவது.
* எரிமலை வெடிப்பு புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைகின்றது.
* கார்பன்டை ஆக்சைடு வெளியேறுதலும் , மீத்தேன் வாயு அதிகரித்தலும் புவி வெப்பமயமாதலுக்குக் காரணங்களாகும்.
* மனிதனால் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் சுரங்க வேலைகளும் வெப்பமயமாதலுக்கு் காரணங்கள் ஆகும்.
* பெருங்கடல்களின் கூடுதல் வெப்பக் கொள்ளளவு மற்றும் அமிலமயமாதலும் காரணமாகின்றன.
* காடழிப்பு உலக வெப்பமயமாதலுக்குக் முக்கிய காரணமாக அமைகிறது.
2 கோவிட்-19 2வது அலையின் காலத்தில் நோய் பரவலினால் மக்கள் சந்தித்த பிரச்சினை என்ன? அதற்கான காரணங்கள் யாவை?
மக்கள் சந்தித்த பிரச்சனைகள்
பொருளாதார மந்தம் , கல்விக்கூடங்கள் திறக்க இயலாச்சூழல் , விளையாட்டு , சுற்றுலா , வேலைவாய்ப்பு ,பொழுது போக்கு , போக்குவரத்து , சுகாதாரத்துறை போன்ற பல துறைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. மிக அதிக அளவில் மக்கள் பாதிப்பிற்கு உள்ளானதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் நோய்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டது.
காரணங்கள்
அரசாங்கம் அறிவுறுத்திய சமூக இடைவெளி தொடர்பான பல அறிவிப்புகளைப் பின்பற்றாததுவும் , முறையாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததும் முக்கிய காரணங்களாகும்.
* அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதும் முக்கிய காரணமாகும்.
3 காடுகளுக்கும், வளிமண்டலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தெழுதவும்.
* காற்று இல்லாத வளிமண்டலத்தை நாம் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது.நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சுவாசிக்கும் காற்றுக்கு நாம் மரங்களைச் சார்ந்துள்ளோம்.
* நம் வாழ்வில் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
* காற்றில்உள்ள கார்பனை மரங்கள் எடுத்துக்கொள்வதால் கார்பனின் அளவு குறைகிறது.
* காடுகள் எரிக்கப்படும் பொழுது கார்பன் வளிமண்டலத்தில் அதிகமாகிறது. இதனால் புவி வெப்பமயமாதல் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
4 மரங்கள் நமக்குத் தேவையான பிராண வாயுவை வழங்கும் நிகழ்வு
அ) சுவாசித்தல்
ஆ) ஆக்ஸிஜனேற்றம்
இ) ஒளிச்சேர்க்கை
ஈ) கார்பனேற்றம்
விடை : ஆ ) ஆக்ஸிஜனேற்றம்
5 உலகச் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஒத்த நாடுகளின் உச்சி மாநாடு -----
நாட்டில் நடைபெற்றது.
அ) பெரு
ஆ) பிரேசில்
இ) பிரான்ஸ்
ஈ) ஏதேன்ஸ்
விடை : ஆ ) பிரேசில்
6 . ------ முறைப்படுத்துவதன் மூலம் காடுகளைப் பாதுகாக்க முடியும்
அ) விவசாய நிலங்களை
ஆ) கிராமங்களை
இ)மரம் வெட்டுதலை
ஈ) விலங்குகள் இடப் பெயர்ச்சியை
விடை : இ ) மரம் வெட்டுதலை
7 இயற்கை மனிதர்களுக்கு ------- பலதரப்பட்ட வழங்குகிறது.
அ) விலங்குகளை
ஆ) உணவுப் பொருட்களை
இ) பறவைகளை
ஈ) வளங்களை
விடை : ஈ ) வளங்களை
8 தமிழகம் ------- சதவீதம் காடுகளைக் கொண்டுள்ளது.
அ) 10
ஆ ) 15
இ) 17
ஈ) 20
விடை : ஆ ) 15
9 காடுகளைப் பாதுகாக்க நீ பின்பற்ற நினைக்கும் காரியங்களை வரிசைப்படுத்தவும் . காடுகள் இல்லையெனில் என்ன நிகழும்? சிந்தித்து விடையளி.
* மரம் வெட்டுதலை முறைப்படுத்த வேண்டும்.
* காட்டுத்தீ ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
* மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் புதிய மரக்கன்றுகளை நடுதல் மூலம் பாதுகாக்கலாம்.
* தரிசு நிலங்களில் விதைகளை விதைத்து காடுகளை உருவாக்கலாம்.
* நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான காற்று முதல் பயன்படுத்தும் மரக்கட்டைகள் வரை அனைத்திற்கும் நாம் காட்டையே சார்ந்து இருப்பதால் காடுகள் இல்லையெனில் மனித வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.
*************** ************* **************
0 Comments