12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
இயங்கலைத் தேர்வு - 5
வினாக்களும் விடைகளும்
***************** ************** **********
1) ' ஓங்கு' எனும் பெயரடை கொண்ட எட்டுத்தொகை நூல்-----
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பரிபாடல்
ஈ) அகநானூறு
விடை : இ ) பரிபாடல்
2) பதிற்றுப்பத்து ----- மன்னர்கள் பற்றிப் பாடும் பாடல்களின் தொகுப்பாகும்.
ஆ) சோழ
ஆ) சேர
இ ) பல்லவ
ஈ ) சாளுக்கிய
விடை : ஆ ) சேர
3) பரிபாடல் ------ நூலாகும்.
அ) அகநூல்
ஆ) புறநூல்
இ) அகமும் புறமும் கலந்த நூல்
ஈ) இவையனைத்தும்
விடை : இ ) அகமும் புறமும் கலந்த நூல்
4) அகப்பாட்டு , நெடுந்தொகை,
பெருந்தொகை நானூறு என்று
பலபெயர்களால் அழைக்கப்பெறுவது -----
அ) அகநானூறு
ஆ) நற்றிணை
இ) புறநானூறு
ஈ) பரிபாடல்
விடை : அ ) அகநானூறு
5) நித்திலக்கோவையில் உள்ள பாடல்களின்
எண்ணிக்கை
அ) 1001
ஆ) 100
இ) 10
ஈ) 34
விடை : ஆ ) 100
6) அகநானூற்றில் 10 , 20 , 30 என்ற வரிசை
உடைய பாடல்கள்
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்
விடை : ஈ ) நெய்தல்
7) திருக்குறள் ----- நூல்களுள் ஒன்று .
அ) பதினெண்மேற்கணக்கு
ஆ) பதினெண்கீழ்க்கணக்கு
இ) சிற்றிலக்கியம்
ஈ) பக்தி இலக்கியம்
விடை : ஆ ) பதினெண்கீழ்க்கணக்கு
8) " நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
அ) பழமொழி நானூறு
ஆ) திருக்குறள்
இ) திருவாசகம்
ஈ) நாலடியார்
விடை : ஈ ) நாலடியார்
9) பொருட்பால் ------அதிகாரங்களைக் கொண்டது.
அ) 10
ஆ) 25
இ) 70
ஈ) 133
விடை : இ ) 70
10) " வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே
புகழ் வையகமே " எனப்பாடியவர் ----
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) ஔவையார்
ஈ) கபிலர்
விடை : ஆ ) பாரதிதாசன்
11) திருவள்ளுவர் தினம் தைத்திங்கள் ------
நாளில் கொண்டாடப்படுகிறது.
அ) 5
ஆ)2
இ) 25
ஈ) 10
விடை : ஆ ) 2
12 ) சீவக சிந்தாமணி ------ இலம்பகங்களைக் கொண்டது.
அ) 13
ஆ) 23
இ) 33
ஈ ) 43
விடை : அ ) 13
13) குண்டலகேசிக்கு எதிர்ப்பாக எழுந்த
இலக்கியம் ------
அ) நீலகேசி
ஆ) மணிமேகலை
இ) யசோதர காவியம்
ஈ) சூளாமணி
விடை : அ ) நீலகேசி
14) கம்பராமணத்திற்கு ' இராமாவதாரம்'
எனப்பெயரிட்டவர்-----
அ) கபிலர்
ஆ)ஔவையார்
இ ) கம்பர்
ஈ) சேக்கிழார்
விடை : இ ) கம்பர்
15) புதினம் புளியமரம் என்றால் சிறுகதை
தென்னை மரம் எனக்கூறியவர் -----
அ) புதுமைப்பித்தன்
ஆ ) பாரதியார்
இ) இராஜாஜி
ஈ) வ.வே.சு.ஐயர்
விடை : இ ) இராஜாஜி
16 ) தமிழ்ச்சிறுகதையின் தந்தை எனும்
புகழுக்குரியவர்-----
அ) பாரதியார்
ஆ) சாண்டில்யன்
இ) புலமமைப்பித்தன்
ஈ) வ.வே.சு.ஐயர்
விடை : ஈ ) வ.வே.சு.ஐயர்.
17) சிறுகதை உலகின் தந்தை -----
அ) காரல்மார்க்ஸ்
ஆ) டென்னி
இ ) செகாவ்
ஈ) சார்லஸ் டேவிட்சன்
விடை : இ ) செகாவ்
18 ) ஒரு கட்டுரையில் ------ , ------ படித்தால் அதன் சிறப்புத்தன்மை புலப்படும்.
அ ) முன்னுரை , முடிவுரை
ஆ ) பொருளுரை , முன்னுரை
இ ) முடிவுரை மட்டும்
ஈ ) முடிவுரை , பொருளுரை
விடை : அ ) முன்னுரை , முடிவுரை
19 ) ------- இல்லாமல் நேர்காணல் செய்ய இயலாது.
அ ) பின்னுரை
ஆ ) முன்தயாரிப்பு
இ ) பின்தயாரிப்பு
ஈ ) விபரங்கள்
விடை : ஆ ) முன்தயாரிப்பு
20 ) கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ------
அ ) நேர்காணல்
ஆ ) ஒளியும் ஒலியும்
இ ) செய்திகள்
ஈ ) சொற்பொழிவு
விடை : அ ) நேர்காணல்
**************** ************* **********
வினா உருவாக்கம்
திருமதி.இரா.மனோன்மணி ,
முதுகலைத் தமிழாசிரியை ,
செக்காபட்டி , திண்டுக்கல்.
************* *********** ***************
0 Comments