12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
இயங்கலைத் தேர்வு - பகுதி - 4
வினாக்களும் விடைகளும்
1) 'தாமரை என்ற சொல்லைப் பிரிக்கும் போது கிடைக்கும் உயிரினம் -----
அ) மான்
ஆ) குரங்கு
இ ) ஆடு
ஈ) புலி
விடை : அ) மான்
2) கா அலர் சேர்த்து எழுதி, வரும் பதவிக்கு உரியவர் -------
அ) நெசவாளர்
ஆ) உழவாளர்
இ ) காவலர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : இ ) காவலர்
3) யார்? எது? ஏன்? எங்கே? என்பன ------
சொற்கள்.
அ) விடை
ஆ) வினா
இ) வியப்பு
ஈ) வினை
விடை : ஆ) வினா
4) ' அஞ்சல் தூதுவன்' என்று அன்பாக
அழைக்கப்படும் பறவை -----
அ) கழுகு
ஆ) ஆந்தை
இ) கிளி
ஈ) புறா
விடை : ஈ) புறா
5) Carrom - என்பதன் தமிழாக்கம் -----
அ) நாலாங்குழி ஆட்டம்
ஆ) மட்டைப் பந்து
இ) சதுரங்கம்
ஈ) இறகுப்பந்து
விடை : அ) நாலாங்குழி ஆட்டம்
6) ' ஜெர்னலிஸ்ட்' என்பது ------
அ) வரைவாளர்
ஆ) பத்திரிகையாளர்
இ) நிருபர்
ஈ) செய்தியாளர்
விடை : ஆ) பத்திரிகையாளர்
7) இலக்கண வரம்புக்குள் அடங்குவது -
கவிதை -----
அ) ஹைக்கூ
ஆ) புதுக்கவிதை
இ) மரபு
ஈ) சென்ரியு
விடை : இ) மரபு
8) பா ------- வகைப்படும்
அ) 8
ஆ) 7
இ )4
ஈ) 4
விடை : ஈ) 4
9 ) ஆசிரியப்பாவின் ஓசை ------
அ) அகவல்
ஆ) துள்ளல்
இ) தூங்கல்
ஈ) இம்மூன்றும்
விடை : அ) அகவல்
10) செப்பலோசை பெற்று வருவது -------
ஆகும்.
அ) கலிப்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) ஆசிரியப்பா
விடை : ஆ) வெண்பா
11) இலக்கணங்கள் ----- க்கு இல்லை.
அ) மரபுக்கவிதை
ஆ) புதுக்கவிதை
இ ) உரைநடை
ஈ) நாடகம்
விடை : ஆ) புதுக்கவிதை
12) தென்றலும் புயலுமாய்
மனம் தொடும்காற்று
' நினைவுகள்' - இது எவ்வகைக்
கவிதை?
அ) மரபுக்கவிதை
ஆ) ஹைக்கூ
இ) தொடர்நிலை
ஈ) வசனகவிதை
விடை : ஆ) ஹைக்கூ
13) அச்சடித்து இருக்கும் சொல்லையோ
எழுத்தையோ நீக்குதல் - -----குறி மூலம்
குறிக்கப்படும்.
அ) ^
ஆ) v
இ ) Bt
ஈ) Dt
விடை : ஈ) Dt
14) # - என்பதன் பொருள் ------
அ) இடைவெளி விடுதல்
ஆ) முற்றுப்புள்ளி இடவும்
இ) ஒற்றை மேற்கோள் குறி
ஈ) எழுத்துருவைச் சிறியதாக ஆக்குக.
விடை : அ) இடைவெளி விடுதல்
15 ) எழுவாய் வேற்றுமைக்கு உருபு -----
அ )ஐ
ஆ)கு
இ) இல்லை
ஈ) இன்
விடை : இ) இல்லை
16) ஆக்கல் , அழித்தல் , நீத்தல் , ஒத்தல் ,
உடைமை , அடைதல் ஆகிய அறுவகைப்
பெயர்களில் வருவது ----- வேற்றுமை
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) நான்காம்
ஈ) எட்டாம்
விடை : அ) இரண்டாம்
17) கண்ணா வா! என்பது -------
வேற்றுமை
அ) எழுவாய்
ஆ) ஐந்தாம்
இ) விளி
ஈ) மூன்றாம்
விடை : இ) விளி
18 ) வேற்றுமை ---- வகைப்படும்
அ) 6
ஆ) 8
இ) 7
ஈ) 4
விடை : ஆ) 8
19 ) கீழ் உள்ளனவற்றுள் எது மூன்றாம்
வேற்றுமை உருபு இல்லை?
அ) ஆல்
ஆ) ஆன்
இ) ஒடு
ஈ) இன்
விடை : ஈ) இன்
20 ) ஏழாம் வேற்றுமை உருபு
அ) ஆல்
ஆ) இ
இ) அது
ஈ) கண்
விடை : ஈ) கண்
*************** *********** **************
வினா & விடைத் தயாரிப்பு
திருமதி.இரா.மனோன்மணி ,
முதுகலைத் தமிழாசிரியை ,
அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி , திண்டுக்கல்.
*************** *************** ***********
0 Comments