11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - இயங்கலைத் தேர்வு - 5 , வினா & விடை / 11th TAMIL - ONLINE TEST - 5 , QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

இயங்கலைச் சான்றிதழ்த் தேர்வு - 5

வினாக்களும் விடைகளும் 

****************    **************   ***********

1) " சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற்புதிது சோதிமிக்க நவகவிதை " என்று பாரதியார் ------- கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கிறார்.

அ) மரபுக்கவிதை

ஆ) வசனகவிதை

இ) புதுக்கவிதை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : இ) புதுக்கவிதை

2) ஈற்றுச்சீர் நாள் , மலர், காசு , பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைப் பெற்று முடிவது

அ) வெண்பா

ஆ) ஆசிரியப்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

விடை : அ) வெண்பா


3) இலக்கண மரபை மீறாமல் இயற்றப்படுவது

அ) புதுக்கவிதை

ஆ) வசனகவிதை

இ) மரபுக்கவிதை

ஈ) ஹைக்கூ கவிதை

விடை : இ) மரபுக்கவிதை

4) சென்ரியு , ஹைக்கூ, கஸல் , நஜ்ம் என்பன ----- கவிதையின் காலமாற்றத்தின்படி மலர்ந்தவை

அ ) மரபுக்கவிதை

ஆ) புதுக்கவிதை

இ) சங்கம் மருவிய கவிதை

ஈ) வசன கவிதை

விடை : ஆ) புதுக்கவிதை

5) Insulin என்ற சொல்லின்
மருத்துவத்துறை கலைச்சொல்

அ ) மரபணு

ஆ) கணையச்சுரப்பு நீர்

இ) முதுகுத்தண்டு

ஈ) இதயச்சிறை

விடை : ஆ) கணையச்சுரப்பு நீர்

6) மொழி பெயர்ப்பின் உயிர்த்துடிப்பு

அ ) தமிழாக்கம்

ஆ) கலைச்சொல்லாக்கம்

இ) அகராதி

ஈ) என்சைக்ளோபீடியா

விடை :ஆ) கலைச்சொல்லாக்கம்

7) திருக்குறள் ------- வெண்பாவால் ஆன நூல்

அ ) குறள்

ஆ) சிந்தியல்

இ) பஃறொடை

ஈ) நேரிசை

விடை : அ ) குறள்

8) அறத்துப்பால் ----- அதிகாரங்களைக் கொண்டது

அ) 70

ஆ) 38

இ) 25

ஈ ) 28

விடை : ஆ) 38

9) திருக்குறள் -----  இயல்களைக் கொண்டது.

அ) 9

ஆ) 10

இ ) 3

ஈ) 4

விடை : அ) 9

10) திருவள்ளுவமாலை -----  சிறப்பை எடுத்துக்கூறும் நூல்.

அ) நாலடியாரின்

ஆ) நான்மணிக்கடிகையின்

இ) திருக்குறளின்

ஈ) ஆசாரக்கோவையின்

விடை : இ) திருக்குறளின்

11) " செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே " - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் -----

அ ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) பரிபாடல்

ஈ) கலித்தொகை

விடை : ஆ) குறுந்தொகை

12 ) எட்டுத்தொகை நூல்களுள்
புறம் சார்ந்த நூல்கள் ----- , -----

அ) பதிற்றுப்பத்து , புறநானூறு

ஆ) கலித்தொகை , அகநானூறு

இ) நற்றிணை , குறுந்தொகை

ஈ) ஐங்குறுநூறு , கலித்தொகை

விடை : அ) பதிற்றுப்பத்து , புறநானூறு

13) பத்துப்பாட்டு நூல்களுள் அகமும், புறமும் கலந்த நூல்

அ) முல்லைப்பாட்டு

ஆ) மலைபடுகடாம்

இ) நெடுநல்வாடை

ஈ) பொருநராற்றுப்படை

விடை : இ) நெடுநல்வாடை

14) ' கணக்கு' என்பதன் பொருள் -----

அ) நூல்

ஆ) அறிவைத்தருவது

இ ) ஆன்மீகம்

ஈ ) சாந்தம்

விடை : அ) நூல்

15) அறம், பொருள், இன்பம் , வீடு பேறு என்ற நான்கு உறுதிப்பொருள் பற்றிப் பேசுவது ------

அ ) சிற்றிலக்கியம்

ஆ) காப்பியம்

இ) சங்க இலக்கியம்

ஈ) மரபுக்கவிதை

விடை : ஆ) காப்பியம்

16 ) சிற்றிலக்கியங்கள் -------  வகைப்படும்.

 அ ) 26

ஆ) 46

இ) 86

ஈ) 96

விடை : ஈ) 96

17) " குழவி மருங்கினும் கிழவதாகும் " என்று தொல்காப்பியர் சுட்டுவது

அ) உலா

ஆ) தூது

இ) குறவஞ்சி

ஈ) பிள்ளைத்தமிழ்

விடை : ஈ) பிள்ளைத்தமிழ்

18) தொல்காப்பியர் கூறும் 'புலன்' வகையைச்சார்ந்தது

அ) பள்ளு

ஆ) உலா

இ) குறவஞ்சி

 ஈ) பிள்ளைத்தமிழ்

விடை : அ) பள்ளு

19 ) தமிழில் தோன்றிய முதல்
சுயசரிதம் இவருடையது

அ) காந்தியடிகள்

ஆ) பாரதியார்

இ) வ.வே.சு.ஐயர்

ஈ) பாரதிதாசன்

விடை : ஆ) பாரதியார்

20) பாரதியின் ஞான குரு ------ 

அ) நிவேதிதா தேவி

ஆ) திலகர்

இ)ஷெல்லி

ஈ) காளிதாசன்

விடை : அ) நிவேதிதா தேவி



***************    ***************   **********

வினா உருவாக்கம் 

திருமதி.இரா.மனோன்மணி , 

முதுகலைத் தமிழாசிரியை ,

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,

திண்டுக்கல் 

***************    ***************   *********





Post a Comment

0 Comments