முதுகலை - தமிழாசிரியர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரிய வினாத்தாள் 2003 - 2004 - வினாக்களும் விடைகளும் - பகுதி - 3 / TRB - PG - TAMIL - 2003 - 2004 - ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER - PART - 3

 

ஆசிரியர் தேர்வு வாரியம் 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2003 - 2004

வினாக்களும் விடைகளும்  - பகுதி - 3

101 முதல் 150 வரை - வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER  - 2003 - 2004

QUESTION & ANSWER - PART - 2


****************     **************  **********

101. கல்விக்கான தேசியக் கொள்கை சிபாரிசு செய்யப்பட்ட ஆண்டு 

A) 1966

B) 1985

C) 1986

D) 1956

102. முறைசாராக் கல்வி (Non formal education) இவ்வாறு அழைக்கப்படுகிறது

A) தொடக்கக் கல்வி (Primary Education)

B) சமூகக் கல்வி (Social Education)

C) வயது வந்தோர் கல்வி (Adult Education)

D) சிறப்புக் கல்வி (Special Education)

103. காந்திய முறையிலான கல்வி அழைக்கப்படுவது

A) முறையற்ற கல்வி (Informal Education)

B) முறைசாராக் கல்வி (Non-formal Education)

C) அடிப்படைக் கல்வி (Basic Education)

D) தொலைதூரக் கல்வி (Distance Education)

104. சமூகத்திற்கு உதவும் பலன் தரக் கூடிய வேலையை கல்விப் பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்தபரிந்துரை செய்த குழு

A) தாராசந்த் குழு

B)' ஏ.எஸ்.முதலியார் குழு

C) கோதாரி குழு

D) ஈஸ்வர்பாய் படேல் கல்வி மறு ஆய்வுக்குழு

105. ஆஷ்ரம் பள்ளியை அறிமுகப்படுத்தியவர்

A) இரவீந்திரநாத் தாகூர் 

B) காந்திஜி

C) அரவிந்தர்

D) ஜே.கிருஷ்ணமூர்த்தி

106. நவோதயா பள்ளிகளின் முக்கிய குறிக்கோள்

A) மெதுவாக கற்போருக்கு (Slow learners) கல்வி

கற்பித்தல்

B) குற்றவாளிகளுக்கு (Delinquents) கல்வி கற்பித்தல்

C) மீத்திறன் பெற்ற சிறுவர்களுக்கு (Gifted Children) கல்வி கற்பித்தல்

D) உடல் ஊனமுற்ற சிறுவர்களுக்கு கல்வி கற்பித்தல்

107. நுண்ணறிவு (Intelligence) என்ற பதத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர்

A) மெலின் (Malin) 

B) Qe Bruser (Wechsler)

C) பீனே (Binet) 

D) ரேவன் (Raven)

108. கரும்பலகை செயல் திட்டம் (Operation Blackboard) இதனை மேம்படுத்த கொண்டு வரப்பட்டது.

A) நடமாடும் பள்ளிகள் (Mobile Schools)

B) தொடக்கநிலைப் பள்ளிகள் (Primary Schools)

C) அங்கன்வாடி பள்ளிகள் (Anganwadi Schools)

D) சைனிக் பள்ளிகள் (Sainik Schools)

109. இந்தியக் கல்வியின் முக்கிய குறிக்கோள்

A) சகோதரத்தன்மை (Fraternity)

B) உரிமை (Liberty)

C) சமத்துவம் (Equality)

D) சமூகத்தன்மை (Sociality)

110. பரிசோதனையற்ற (Non-test Technique) தொழில் நுட்பம் குறிப்பது

A) இயல்பூக்கம் (Aptitude)

B) GJORT ST164 (Intelligence)

C) நேர்காணல் (Interview)

D) ஈடுபாடு (Interest)

111. தமிழ் இலக்கிய வரலாற்றைத் தமிழில் முதலில் எழுதியவர் யார்?

A) அனவரதம் பிள்ளை

B  ) கா.சு. பிள்ளை

C) ரா.பி. சேதுப்பிள்ளை

D) கே.கே. பிள்ளை

112. பாரத சக்தி மகா காவியம் பெற்ற விருது எது?

A) ஞானபீட விருது

B) சாகித்ய அகாதமி விருது

C) இராசராசன் விருது 

D) தமிழன்னை விருது

113. அப்துல் கலாம் எழுதிய நூல் எது?

A) அக்னிச் சிறகுகள் 

B) ஞானரதம்

C) கண்ணீர்ப் பூக்கள் 

D) கறுப்பு மலர்கள்

114. சரசுவதி மகால் நூலகம் உள்ள இடம் எது?

A) மதுரை

B) தஞ்சை

C) திருச்சி

D) தூத்துக்குடி

115. அண்ணா எழுதிய சிறுகதைகளில் ஒன்றைக் குறிப்பிடுக.

A) செவ்வாழை 

B) பார்வதி பி.ஏ.

C) வெள்ளிக்கிழமை 

D) சந்திரமோகன்

116. 'குடியரசு' இதழின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க.

B) பெரியார்

C) பாரதியார்

D) கல்கி

17. 'நாஞ்சில் நாட்டு மக்கள் வழி மான்மியம்' நூலை எழுதியவர் யார்?

A) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

B) மாயூரம் வேதநாயகம் பிள்ளை

C) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

D) மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

118. மனோகர் நடித்த நாடகங்களில் ஒன்று எது?

A) விடிவெள்ளி

B ) சாணக்கிய சபதம்

C) முகமது பின் துக்ளக்

D ) தங்கப் பதக்கம்

119. கதகளி நடனம் நடைபெறும் மாநிலம் யாது?

A) கேரளா

B ) ஒரிசா

C) தமிழ்நாடு

D ) ஆந்திரா

120, வந்தே மாதரம் என்னும் பாடலின் ஆசிரியர் யார்?

A) இரவீந்திரநாத் தாகூர் 

B) பாரதியார்

C) பங்கிம் சந்திர சட்டர்ஜி 

D) சரோஜினி நாயுடு

121 தமிழ்க் காதல் நூலாசிரியர் யார்?

A) தொ.பொ.மீ.

B) மூ. வரதராசன்

C) வ.சுப. மாணிக்கம்

D) சோ.ந. கந்தசாமி

122. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

A) 24

B) 37

C) 38

D) 41

123. பண் வகுக்கப்பட்ட தொகை நூல் எது?

A) பரிபாடல்

B ) புறநானூறு

C) அகநானூறு

D) குறுந்தொகை

124. தமிழில் தோன்றிய முதல் உரை நூல் யாது?

A) தொல்காப்பிய உரை

B) இறையனார் அகப்பொருள் உரை

C) நன்னூல் உரை

D) புறப்பொருள் வெண்பாமாலை உரை

125. முதன்முதலில் தமிழ்ப் பல்கலைக்கழக இராசராசன் விருது பெற்றவர் யார்?

A) கோ.வி. மணிசேகரன் 

B) அகிலன்

C) சுத்தானந்த பாரதியார் 

D) ஜெயகாந்தன்

126. கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முக்கியப்பங்கேற்கும் நிறுவனம்

A) F. A.0.

B) U.N.0.

C) U.N.E.S.C.O. 

D) U.N.I.C.E.F.

127. கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை (Instrumental condition) அறிமுகப்படுத்தியவர்

A) பாவ்லாவ்

B) டோல்மன் (Tolman)

C) ஸ்கின்னர்

D) ஹல் (Hull)

128. சிறுவர்களிடமுள்ள ஆக்கத்திறனை இவ்வாறு ஊக்குவிக்கலாம்

A) குவி சிந்தனை (Convergent thinking)

B) விவேகமுள்ள (Reasoning)

C) விரி சிந்தனை (Divergent thinking)

D) கற்பனைத்திறன் (Imagination)

129. வளமளிக்கும் திட்டம் (Enrichment Programmes) இவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது

A) சராசரி சிறுவர்கள்

B) சராசரிக்கும் குறைந்த சிறுவர்கள் (Below average children)

C) மீத்திறன் பெற்ற சிறுவர்கள் (Gifted children)

D) உடல் ஊனமுள்ள சிறுவர்கள்

130. ப்ரோஜெக்ட் மூலமான தொழில்நுட்பங்களில் இது ஒன்று

A) DAT

B) WISC

C) TAT'

D) MMPL


131. 'ஊரும் பேரும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) கா.சு. பிள்ளை

B) கே.கே. பிள்ளை

C) ரா.பி. சேதுப்பிள்ளை 

D) கதிரேசன்

132. ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்ற நூலின் ஆசிரியரைக் குறிப்பிடுக.

A) அன்னகாமு

B) வானமாலை

C) சண்முகசுந்தரம் 

D) சாம்பமூர்த்தி

133. வரலாற்றுக் கதைப் பாடல்களில் ஒன்று எது?

A) அண்ணன்மார் சுவாமிக் கதை

B) புலந்திரன் கதை

C) நல்லதங்காள் கதை

D) காத்தவராயன் கதை

134. 'ஏலேலோ ஐலசா' என்ற சொற்கள் இடம் பெற்ற பாட்டு எது?

A) வழிபாட்டுப் பாடல் 

B) கொண்டாடப் பாடல்

C) வேளாண்மைப் பாடல் 

D) ஓடப் பாடல்

135. 'உலகம் சுற்றிய தமிழர்” என்று போற்றப்படுபவர் யார்?

A) ஏ.கே. செட்டியார் 

B) கதிரேசன் செட்டியார்

C) திரு.வி.க.

D) சோமலெ

136. ‘திவாகரம்' என்பது என்ன நூல்?

A) நிகண்டு நூல் 

B) இசை நூல்

C) நாடக நூல்

D) இலக்கண நூல்

137. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் என்று அழைக்கப்படுபவர்

A) அண்ணா

B) ஜெகசிற்பியன்

C) கோவி. மணிசேகரன் 

D) கல்கி

138. 'தீபம்' என்ற இதழை நடத்தியவர் பெயரைக் குறிப்பிடுக.

A) பாரதியார்

B) நா. பார்த்தசாரதி

C) கி.வா. ஜெகந்நாதன் 

D) திரு.வி.க.

139. இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் குறிஞ்சித்தேன் காட்டும் வாழ்கை எது?

A) செம்படவர் வாழ்வு 

B) படகர் வாழ்வு

C) செட்டிமார் வாழ்வு 

D) பிள்ளைமார் வாழ்வு

140. 'என் கதை' என்னும் பெயரில் தமது வரலாற்றை எழுதியவர் யார்?

A) நாமக்கல் கவிஞர் 

B) உ.வே.சா.

C) திரு.வி.க.

D) டி.எஸ். ராஜன்

141. பெரியபுராணத்தின் முதல் நூல் எது?

A) திருத்தொண்டர்த் தொகை

B) தேவாரம்

C) திருவாசகம்

D) திருவிளையாடற் புராணம்

142. காந்திப் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்?

A) ராய.சொக்கலிங்கம் 

B) சுத்தானந்த பாரதியார்

C) சோமசுந்தர பாரதியார் 

D) நாமக்கல் கவிஞர்

143. அகிலன் எழுதிய புதினம் எது?

A) பார்த்திபன் கனவு 

B) நெஞ்சில் ஓர் முள்

C) யவன ராணி

D) சித்திரப்பாவை

144. 'ஓர் இரவு' என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) பாரதியார்

B ) மு.வ

C) பாரதிதாசன்

D) அண்ணா

145. 'கண்ணீர்பூக்கள்' என்ற கவிதை நூலின் ஆசிரியரைக் கூறுக.

A) மேத்தா

B) தமிழன்பன்

C) வைரமுத்து

D) அப்துல் ரகுமான்

146. புலவர் குழந்தை இயற்றிய நூலின் பெயர் யாது?

A) இராவண காவியம் 

B) கொடி முல்லை

C) பாண்டியன் பரிசு 

D) தேன்மழை

147. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எது?

A) மணிமேகலை

B) சுந்தபுராணம்

C) சிலப்பதிகாரம்

D) பெருங்கதை

148. மாதவி ஆடிய ஆடல்களின் வகைகள் எத்தனை?

A) எண்வகை ஆடல்

B) பதினோராடல்

C) அறுபத்து நான்கு ஆடல் 

D) நூற்றெட்டு ஆடல்

149. சீவகசிந்தாமணியின் வேறு பெயரைக் குறிப்பிடுக.

A) துறவு நூல்

B) மண நூல்

c) மறை நூல்

D) அறநூல்

150. அகநானூற்றுப் பாடல் ஒன்றினைப் பற்றிய மு.வ.வின் திறனாய்வு நூல் எது?

A) கொங்குதேர் வாழ்க்கை 

B) கள்ளோ? காவியமோ?

C) ஓவச் செய்தி

D) கரித்துண்டு**************   **********    *****************


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********


Post a Comment

0 Comments