பத்தாம் வகுப்பு - தமிழ்
முன்னுரிமைப் பாடம்
அன்னை மொழியே
வினாடி வினா - இயங்கலைத் தேர்வு
வினாக்களும் விடைகளும்
வினா உருவாக்கம் :
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
**************** ********* ****************
1) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
அ) துரை மாணிக்கம்
ஆ) இராச மாணிக்கம்
இ) சுப மாணிக்கம்
ஈ) வேதமாணிக்கம்
விடை : அ ) துரை மாணிக்கம்
2) பெருஞ்சித்திரனார் இவ்வாறு சிறப்பிக்கப் படுகிறார்
அ) மகாகவி பெருச்சித்திரனார்
ஆ) கவிஞர் பெருஞ்சித்திரனார்
இ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஈ) புரட்சிக்கவி பெருஞ்சித்திரனார்
விடை : இ ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
3) ' அன்னை மொழியே ' என ஆசிரியர் உரைப்பது ------ தொடர்
அ) விளித்தொடர்
ஆ) வேற்றுமைத்தொடர்
இ) உரிச்சொல் தொடர்
ஈ) பண்புத்தொகை
விடை : அ ) விளித்தொடர்
4) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் வருவது
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
விடை : இ ) எம் + தமிழ் + நா
5)' தென்னன் மகளே' - இதில்
தென்னன் என்ற சொல் யாரைக்
குறிக்கும்?
அ ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
விடை : இ ) பாண்டியன்
6) பெருஞ்சித்திரனார் ------ மற்றும் தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பினார்.
அ) செம்மொழி
ஆ) நம்மொழி
இ) வண்மொழி
ஈ) தென்மொழி
விடை : ஈ ) தென்மொழி
7) பெருஞ்சித்திரனாரின் ------
மெய்ப்பொருளுரை தமிழுக்குக்
கருவூலமாக அமைந்துள்ளது.
அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) நாலடியார்
ஈ) அகநானூறு
விடை : ஆ ) திருக்குறள்
8)' அன்னை மொழியே' எனத்தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் ------
அ) பாவியக்கொத்து
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
ஈ) பள்ளிப்பறவைகள்
விடை : ஆ ) கனிச்சாறு
9) கீழ்வருவனவற்றுள்
பெருஞ்சித்திரனார் எழுதாத நூல்
அ) பாவியக்கொத்து
ஆ) உலகியல் நூறு
இ) பாஞ்சாலி சபதம்
ஈ) மகபுகுவஞ்சி
விடை : இ ) பாஞ்சாலி சபதம்
10 ) ' சாகும்போதும் தமிழ்படித்துச்
சாக வேண்டும் ' என்று பாடிய
கவிஞர்
அ) முத்தானந்தன்
ஆ) முத்துலிங்கம்
இ) சச்சிதானந்தன்
ஈ) சுரதா
விடை : இ ) சச்சிதானந்தன்
11) செந்தமிழ் - இலக்கணக் குறிப்புத் தருக.
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை : அ ) பண்புத்தொகை
12) தும்பி ' என்பதன் பொருள் -----
அ) தம்பி
ஆ) வண்டு
இ) நண்டு
ஈ) சிட்டு
விடை : ஆ ) வண்டு
13) ' சிலம்பு ' - என்ற சொல்லின் பொருள்
அ) சிதறுவது
ஆ) சிலப்பதிகாரம்
இ) சீவகசிந்தாமணி
ஈ) ஒருவகைக் கம்பு
விடை : ஆ ) சிலப்பதிகாரம்
14) வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக்
கொண்டவள்
அ ) பூமித்தாய்
ஆ) தமிழன்னை
இ) நதி
ஈ) மலையன்னை
விடை : ஆ) தமிழன்னை
15) ' இன்னறும் பாப்பத்து' - இதில் பாப்பத்து என்ற சொல் குறிப்பது
அ) பத்துப்பாட்டு
ஆ) எட்டுத்தொகை
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு
விடை : அ ) பத்துப்பாட்டு
16) தென்னன் மகள் -----
அ) மீனாட்சி
ஆ) தமிழன்னை
இ) மங்கையர்க்கரசி
ஈ) பார்வதி
விடை : ஆ ) தமிழன்னை
17) ' எண்தொகையே' - இதில்
குறிப்பிடப்படும் நூல்களின் எண்ணிக்கை
அ) இரண்டு
ஆ) நான்கு
இ ) ஆறு
ஈ) எட்டு
விடை : ஈ ) எட்டு
18) செந்தாமரை - இலக்கணக்
குறிப்புத்தருக
அ) உவமைத்தொகை
ஆ) உம்மைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
விடை : இ ) பண்புத்தொகை
19 ) மண்ணுலகம் - இலக்கணக்
குறிப்புத் தருக.
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) உருவகம்
விடை : ஈ ) உருவகம்
20) முன்னைக்கும் முன்னை - பொருள் தருக.
அ) புதுமைக்குப் புதுமை
ஆ) பழமைக்குப் பழமை
ஈ) அன்னைக்கு அன்னை
ஈ) பழங்காலம்
விடை : ஆ) பழமைக்குப் பழமை
************ ************** ***************
5 Comments
pandu
ReplyDeleteK.Tasleem
ReplyDeleteVinnarasi
ReplyDeleteSundaravairamuthu
ReplyDeleteS.Sathish
ReplyDelete