பத்தாம் வகுப்பு - தமிழ் - மாதிரி வினாத்தாள் - 1 , 100 மதிப்பெண்கள் / 10 TAMIL - MODEL QUESTION - 100 MARKS

 

                                தமிழ்

                      பத்தாம் வகுப்பு

                      மாதிரித்தேர்வு - 01 

நேரம் : 3.00                  மதிப்பெண்கள் : 100

1.

சரியான விடையைத் தேர்ந்தெடு

                                                              15 x 1 = 15

1. எந்தமிழ்நா - பிரித்து எழுது

அ) எந்+ தமிழ் + நா 

ஆ) எந்த + தமிழ் + நா 

இ) எம் + தமிழ் + நா

2. வேர்க்கடலை, மிளகாய்விதை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

அ) குலைவகை

ஆ) மணிவகை

இ) இலைவகை

3. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் யார்?

அ) பாரதியார் 

ஆ) பாரதிதாசன் 

இ) கவிமணி

4. பெரிய மீசை சிரித்தர் - எவ்வகைத் தொகை?

அ) பண்புத்தொகை 

ஆ) உம்மைத்தொகை 

இ) அன்மொழித்தொகை

5. தொகாநிலைத் தொடர் எத்ததனை வகைப்படும்?

அ) 8

ஆ) 7

இ ) 9 

6. திருக்குறளைப் புகழ்ந்து பாராட்டி எழுதிய நூல்

அ) திருவள்ளுவமாலை 

ஆ) பட்டினபாலை 

இ) வள்ளுவமாலை

7. உனதருளே பார்ப்பன் அடியனே - யாரிடம் யார் கூறியது?

அ) குலசேகரயாழ்வாரிடம் இறைவன்

ஆ) இறைவனிடம் குலசேகர யாழ்வார்

இ) மருத்துவரிடம் நோயாளி

8. வழு எத்தனை வகைப்படும்?

அ) 8

ஆ) 7

இ ) 6

9. சதம் என்றால் -------  என்று பொருள்

அ) 100

ஆ) 10

இ) 1000

10, கலை + கூடம் சேர்த்து எழுதி எவ்வகை புணர்ச்சி கூறு

அ) விகாரப் புணர்ச்சி 

ஆ) இயல்பு புணர்ச்சி 

இ) பண்புத்தொகை

11. அகத்தின் அழகு ---- தெரியும்.

அ) முகத்தில்

ஆ) எதிரில்

இ) அருகில்

12. பொருள் முடிவு பெற்று வரும் வினைச்சொல்

அ) தெரிநிலை வினைமுற்று

ஆ) குறிப்பு வினைமுற்று

இ) வினைமுற்று

13. வையகம் - பொருள் தருக.

அ) உலகம்

ஆ) அரங்கம்

இ) பாடசாலை

14. குறிப்பு வினையெச்சம் உதாரணம் தருக.

அ) சிறிய கடிதம் 

ஆ) மெல்ல வந்தான் 

இ) எழுதி முடித்தான்

15. சதாவதானி என்று புகழப்பட்டவர் யார்?

அ) கவிமணி 

ஆ) செய்குதம்பி பாவலர் 

இ) நாமக்கல் கவிஞர்

II, எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி                                4 X 2= 8

21 வது வினாவிற்கு கட்டாயம் விடையளி:

16. மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே - இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள
ஐம்பெரும்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுது

17. வசன கவிதை குறிப்பு எழுது.

18. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பங்கினை எழுது.

19. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

20. சதாவதானம் - குறிப்பு வரைக.

21. 'விடும்' என முடியும் திருக்குறளை எழுது.

III, எவையேனும் ஐந்திற்கு விடையளி.

                                                             5 X2=10

22. "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்.

இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டுக.

23. Conversation , Emblem - கலைச்சொல் தருக.

24. கூட்டப்பெயாகளை எழுது. கல், ஆடு

25. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

இயற்கை, செயற்கை

26. விடுபட்ட எழுத்துக்களை நிரப்புக.
1. ப ட --- ( நீரில் செல்வது)

2. கு --- தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)

27. இலக்கணகுறிப்பு தருக.

அ) கீரி பாம்பு
ஆ) இன்சொல்

28. தனிச் சொற்சொடாகளாக மாற்றுக.

அ) அழைப்புமணி ஒலித்ததும், கயல்வழி கதவைத் திறந்தாள்

ஆ) ஓடிக்கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்களின் பேச்சுத் தடைப்பட்டது.

IV எவையேனும் இரண்டிற்கு விடையளி.

                                                                ( 2X3=6)
29. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது, இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத்
தொடர்களில் அமைக்க.

30. மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் தொடரை விளக்குக.

31. உரைப்பதியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

         சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத்திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியென்னும் கனி கொடுத்துக் கவலையைப்
போக்குகின்றன.

அ) சிற்றூர் மக்களின் வாழ்வியல் கூறுகளாக கூறுபவை எவை?

ஆ) நிகழ்கலைகள் மக்களுக்கு எதைக் கொடுக்கின்றது?

இ) உரைப்பத்தி எக்கலையைப் பற்றி கூறுகின்றது?

V. எவையேனும் இரண்டிற்கு விடையளி.

                                                            2 X 3 = 6
34 -  வது வினாவிற்கு கட்டாயம் விடையளி

32. தமிழன் வாழ்த்துவதற்கான காரணங்கள் யாவை ?

3.3. சோலைக்காற்றும் மின்விசிறிசு காற்றும் பேசிக்கொள்வது போல ஒரு உரையாடல் அமைக்க.

34. வாளால் அறுத்துச் ........ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடலை அடிபிறழாமல் எழுது.

VI. எவையேனும் இரண்டிற்கு விடையளி.

                                                           2 X 3 = 6

35. அரிய வற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.

இக்குறட்பாவிற்கு அலகிட்டு வாய்ப்பாடு தருக

16. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு டு நின்றான் இரவு. 

குறளில் பயின்று வரும் அணியை விளக்கு.

37. முவகை மொழிகள் யாவை ?  விளக்கு

VII அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

                                                      5 X 5 = 25

38. அ.மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தையும், ஒப்பீட்டு மேடைப் பேச்சு ஒன்று உருவாக்குக.

                      ( அல்லது)

 விடை வரைகளை கூறி விளக்கு

39 . அ. மாநில அளவில் நடைபெற்ற மரம்' இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை பாழத்தி மடல் எழுது.

                             (அல்லது)

ஆ ) தங்கைக்கு திறன்பேசி பயன்பாட்டினால் ஏற்படும் நன்மை தீமைகளைக் குறிப்பிட்டுஅறிவுரைக் கடிதம் எழுது

40. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

( காடு, புதுமை, விண்மீன், காற்று, மறுமணம்)

1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும், நீக்காவிட்டாலும் வாசனை தரும்

2. பழமைக்கு எதிரானது - எழுதுகோலில் பயன்படும்.

3. இருக்கும் போது உருவமில்லை - இல்லாமல் உயிரினம் இல்லை.

4. நாலெழுத்தில் கண் சிமிட்டும் - கடையிரண்டில் நீந்திச்செல்லும்

5. ஓரெழுத்தில் சோலை - இரண்டெழுத்தில் வனம்.

41. படிவத்தை நிரப்புக.

47. பழமொழிகளை நிறைவு செய்க

1. உப்பில்லாப் பண்டம் ----------

2. ஒரு பானை ------------

3. உப்பிட்டவரை ----------

4. விருந்தும் -------------

5. அளவுக்கு ------------

VII. எவையேனும் மூன்றிற்கு விடையளி.

                                                        3 X 8 = 24

43. தமிழின் சொல் வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும்
தமிழ்மன்றத்தில்  பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுது.

44. அன்மைய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை எழுது.

45. நயம் பாராட்டுக.

“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி வரும்.

                                        காளமேகப் புலவர்

46. கடிதம் எழுது.

உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுது.

47 குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுது

நூலின் தலைப்பு - நூலின் மையப் பொருள் - மொழி நடை - வெளிப்படுத்தும்
கருத்து நூவின் நயம் - சிறப்புக் கூறு - நூல் ஆசிரியர்.


Post a Comment

0 Comments