உலக காது கேளாதோர் தினம் - கேட்டல் குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது ? / WORLD DEAF DAY - 20 - 09 - 2021

 


உலக  காது கேளாதோர்  தினம்

  ( WORLD  DEAF  DAY )

      20 • 9 • 2021

"  செல்வத்துள்   செல்வம்   செவிச்செல்வம்  அச்செல்வம் 

   செல்வத்துள்   எல்லாம்   தலை."

                   --  திருக்குறள் -- 411

        செவியால்   கேட்டறியும்    செல்வம் ,  செல்வங்களுள்  ஒன்றாகப்   போற்றப்படும்    செல்வமாகும்.  அச்செல்வம்  எல்லாவற்றிலும்  தலையானதாகும். 

"  அரிது  அரிது   மானிடராதல்   அரிது

     மானிடராயினும்   கூன்    குருடு 

     செவிடு   பேடு   நீங்கிப்    பிறத்தல்   அரிது 

      கூன்  குருடு ,  செவிடு,   பேடு

       நீங்கி     பிறந்தகாலையும் 

        ஞானமும்    கல்வியும்    நயத்தலரிது. " --  என   செவித்திறன்    மேன்மையை  ஒளவையாரும்   இவ்வாறு போற்றியுள்ளார்.   மனித வாழ்வு  மேம்பட  கேட்டல்   செயல்  மிக  இன்றியமையாததாகும். 

1858 -- ஆம்  ஆண்டு  செப்டம்பர்  20 - ம்  நாள்  காது  கேளாதோர்  தினமாக  தொடங்ககப் பட்டது . பின்னர்  இவை  காதுகேளாதோர்  வாரமாக   அனுசரிக்கப்படுகிறது.

உடல், செயல் குறைப்பாட்டால்  மனிதன்   பல  இன்னல்களைச்  சந்திக்க  நேரிடுகிறது. எனவே  செவிக்  குறைப்பாடு   உள்ளவர்களுக்கு ,  உரிய  உதவிகள்  செய்ய வேண்டிய  வலியுறுத்தி  ஆண்டுதோ றும்  செப்டம்பர்   கடைசி  ஞாயிறன்று "  காதுகேளாதோற்  தினமாக   கடைபிடிக்கப் படுகிறது.

     நம்மைச் சுற்றி  உணரப்படும்   இன்னிசையும் , இடியோசையும்,  இயந்திர  பேரோசையும் , அழுகையும்,  ஆரவாரமும், சிரிப்பொலியும் ... பலவிதமான  ஓசைகளை  கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இவற்றைக் கேட்க  இயலாத   நிலைக்குத்  தள்ளப்படும் போது என்ன  நிகழும்.?

உலக  நிலையிலிருந்து  தனிப்பட்ட  சூழலாக  உணரும்  நேரம் ... துயரத்தின்  பாரம்  இன்று   உலகில்  45 -  கோடி  மக்களின்  நிலையே  இதுதான். இயற்கையிலேயே சிலருக்கு  இக்குறைபாடு  இருக்கலாம். அல்லது  ஏதாவது  ஒரு  குறைபாட்டால்  தங்களின்  கேட்கும்  திறனை  இழந்து   மாற்றுத் திறனாளிகளாக  மாறி,  மனம்  குமுறும்  மனிதர்கள்  பலராக   இன்னலுடன்  இணைந்து  வாழ்கின்றனர். 

செவித்திறன்  குறையை  நிவர்த்தி செய்ய  பல  எளிய  மருத்துவ முறைகளும், உபகரணங்களும்  உதவியாக  உருவாக்கப் பட்டுள்ளன. செவித்திறன்  பாதிப்பு  இனி வரும்  காலங்களில்   இரண்டு  மடங்கு  அதிகரிக்க  வாய்ப்புள்ளதாக  உலக   சுகாதார  அமைப்பு  எச்சரிக்கை  விடுக்கிறது. அதாவது  உலக  அளவில்  செவித்திறன்  குறைப்பாட்டால்  44• 6 - கோடிப்பேர்  பாதிக்கப் பட்டுள்ளதாக  செய்திகள் கிடைக்கின்றன. இவற்றில்  3 • 4 - கோடிப்பேர்   குழந்தைகள்  என  அறியப்படுகிறது.


இந்திய நாட்டின்  இன்றைய  நிலையில்  பெரும்பாலும்  பிறவிக்  குறைபாடு காரணமாகத்தான் அதிக  செவித்திறன்  பாதிப்பு  ஏற்படுகிறது  என  ஆய்வுகள்  விளக்கம்  தருகின்றன. 

காதின்  பயன்கள்

    காது எனப்படும்  செவி என்பது  ஒரு  புலன் உறுப்பாகும்.  இது  இருவேறுபட்ட  முக்கிய  புலன்களைத்  தரவல்லது.  கேட்டல் , சமநிலைப் படுத்தல்  எனும்  இரு  இன்றியமையாத  பயன்களை  நமக்களிக்கிறது.  நாம்  தொடர்பு கொள்ள இவை  உதவுகிறது. நடப்பதற்கும்  , கீழே விழாமல்  நிமிர்ந்த நிலையில் நிற்பதற்கு  தேவைப்படும்   சமநிலையை  செவிகள்   தருகின்றன. 

செவித்திறன்  பாதிப்பின்  அறிகுறிகள் 

   காதில்  சத்தம்  கேட்பது,  அடிக்கடி   மயக்கம் ஏற்படுவது  போன்றவை   நரம்புத் தேய்மானத்தின்  அறிகுறிகள்  ஆகும். நரம்பு  தேய்மானத்தின்   காரணமாகவும்   செவித்திறன்    பாதிப்பு   ஏற்பட  வாய்ப்புள்ளது. அதிக  இரைச்சல்  ஏற்படுத்தும்  தொழிற்சாலைகளில்  வேலைக்காக  செய் வோர்,   காவல் துறையினர்,  ஓட்டுநர்கள் , ஹெட் போனை   அதீத   சத்தமாக  வைத்துக்  கேட்பவர்களுக்கு ( Noise -- induced  hearing  loss )  என்னும்   செவித்திறன்   பாதிப்பு   ஏற்பட   வாய்ப்புள்ளது .

செவித்திறன்  குறைபாடு  ஏற்படக்  காரணங்கள் :

    நெருங்கிய  உறவில்   திருமண‌ம்   செய்வது   காதுகேளாமைக்கு  முதல்  காரணமாகும். பிறந்த  குழந்தைக்கு  வைரஸ்   பாதிப்பு  , மூச்சுத் திணறல்  பாதிப்புகள்  போன்றவையும்,  கர்ப்பகாலத்தில்  தாய்க்கு  வைரஸ்  பாதிப்பு  போன்ற  காரணங்களால்  இக்  குறைப்பாடுகள்  உண்டாக்குகின்றன. இவ்வாறு  பாதிப்புடன்    பிறந்த   குழந்தைகளுக்கு " ஓடோகோஸ்டிக்   எமிஷன்   டெஸ்ட் " ( Otoacoustic  Emissions  Test) செய்ய  வேண்டியது   அவசியமாகிறது. இந்தப் பரிசோதனையில்  குழந்தைகளுக்கு  கேட்கும்  திறனில்  பாதிப்பு  இருப்பதாக  கண்டறியப் பட்டால் , மூன்று  மாதத்திற்குப்  பின்  " பேரா "  டெஸ்ட்  ( Bera  test -- Brainstem  evoked  response   auidiometry ) செய்து , பின்  அறுவைச்  சிகிச்சை  செய்து   பாதிப்பை சரிசெய்யப் படுகிறது.


இவ்வாறு  உடல் நலக் குறைவுடன்  பிறக்கும்  குழந்தைகளுக்கு  மருத்துவமனை களிலேயே  பரிசோதனைகள்  செய்யப்படுகிறது  எனினும்  பெற்றோர்களும்  கவனத்துடன்  கண்காணிப்பது  அவசியமாகிறது. இத்தகைய  காது கேளாமை  பாதிப்பை  குழந்தைப்   பருவத்திலேயே  கண்டறிந்து  சிகிச்சை   மேற்கொண்டால்  60 % பாதிப்பைச்  சரிசெய்துவிட  முடியுமென  உலக   அமைப்பு  விளக்குகிறது.

குழந்தைகளைக்  கண்காணித்தல் 

        ஒரு  வயதிற்கு  மேலும்   குழந்தை பேசவில்லையென்றாலும்,  ஏதாவது  சத்தம்  கேட்டுத்   திரும்பாமல்  இருந்தாலும்   செவிகுறைபாடுடைய   பிரச்சனையாக  இருக்க   வாய்ப்புள்ளது. இவ்வாறான  குழந்தைகளைக்   கண்டறிந்து  அவர்களுக்கு  உரிய   சிகிச்சையை  அளிப்பது அவசியமாகின்றன. பள்ளிக்குச்  செல்லும்   வயதில்  உள்ளக் குழந்தை களுக்கு அடிக்கடி  காது  அடைத்துக்  கொள்வது, காதில்  சீழ் வடிதல்,  உதட்டுப்பிளவு  போன்ற பாதிப்புகள்  இருந்தாலும்  செவித்திறன்  குறைவு  ஏற்பட  வாய்ப்பு  அதிகம்.   எனவே  இவற்றைக்   கண்காணித்து  மருத்துவம்  செய்ய  வேண்டும். பெண்களைப்  பாதிக்கும்  Osteosclerosis -- என்ற  காது  எலும்பு பாதிப்பு  நோயாலும்   செவித்திறன்  பாதிப்பு   ஏற்பட  வாய்ப்பு  உள்ளது. இந்நோய்  பாதிக்கும்  பெண்களின,   குழந்தைக்கும்   வரும்  வாய்ப்பு   அதிகம்   உள்ளது. எனவே  ஆரம்பத்திலேயே  கண்டறிந்து  எளிய   அறுவை  சிகிச்சை மூலம்   சரிசெய்துக்  கொள்ள  வேண்டும். 

செவித்திறன்  குறைப்பாட்டை  சரிசெய்யும்  முறை :

        செவித்திறன்  குறைவைச்   சரிசெய்ய  காது கேட்கும்    உபகரணங்களைக்  கொண்டு  நிவர்த்தி செய்யலாம் , காது, மூக்கு , தொண்டை  ஆகியவை  ஒன்றுக் கொன்று தொடர்புடையது.  இவற்றில்  ஏதேனும்  மாற்றம்   தென்பட்டால்  மருத்துவரை   நாடுவது  சிறப்பு.

காது  கேட்கும்  சரியான  ஒலியின்  அளவு:

     நமது  காது  சாதாரணமாக  20 - ஹெர்ட்ஸிலிருந்து  20 - கிலோ  ஹெர்ட்ஸ் வரையிலான  கேட்கும்  திறன் கொண்ட து.ஒரு  கிலோ  ஹெர்ட்ஸ்  என்பது = 1000  கிலோ  ஹெர்ட்ஸ்  அளவு  கொண்டதாகும். 

செவித்திறனை  சரிசெய்யும்   கருவிகள்:

              அறிவியல்   வளர்ச்சியின்    முன்னேற்றத்தால்   டிஜிட்டல்  முறையில்    பல   பாடம்   ( புரோகிராம்)  செய்யப்பட்ட   காது  கேட்கும்   கருவிகள்   கிடைக்கின்றன. இவற்றை  ஹெட்போஃன்   போல   பயன்படுத்தலாம். காது ,  மூக்கு  ,  தொண்டை   மருத்துவரின்  அறிவுரையின்படி பயன்படுத்தலாம்.  கேட்கும் திறனைப் பொறுத்து  , ஒலி  அளவு   நிர்ணயிக்கப்படுகிறது.  இது  காது  கேட்பதற்கு  உதவுகின்றது.  ஆனால்  இது  நிரந்தரமான   தீர்வு  அல்ல. மனித   வாழ்வில்   மிக  முக்கியமான   உறுப்புகளில் ஒன்றாக  விளங்கும்   செவிகளை   மிகுந்த   கவனத்துடன்   பாதுகாக்க வேண்டும்.   செவியின்   இன்றியமையாமையை   குழந்தைகளுக்கு விளக்கி  கூறி   பாதுகாப்பு  வழிமுறைகளை   தொடர்ந்து  பின்பற்றச் செய்யவேண்டும். உலகம்  நல்லொழுக்கத் துடன்   இன்னிசையில்   நிறைந்து மகிழ   செவிகளைப்   பாதுகாப்போம்.!

செவிக்  குறைப்பாடுகள்  அற்ற  உலகைப்   படைக்க இன்றைய  நாளில்   உறுதிக்கொள்வோம். !

Post a Comment

0 Comments