TNPSC , TRB , VAO - தமிழ் - பக்தி இலக்கியம் - வைணவமும் தமிழும் - இயங்கலைத் தேர்வு விடைப்பகுதி / TNPSC , TRB , VAO - TAMIL - PAKTHI ILAKKIYAM - VAINAVAMUM TAMILUM - ANSWER

 

TNPSC , TRB , VAO - தமிழ் 

 போட்டித் தேர்வில் வெற்றி

பக்தி இலக்கியம் - வைணவமும் தமிழும் 

இயங்கலைத் தேர்வு வினாக்களுக்கான விடைப்பகுதி.

               திருமாலையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு உண்ணும் சோறும், தின்னும் வெற்றிலையும் பருகும் நீரும் கண்ணனுக்கே எனத் திருமாலையே நினைத்து மறந்தும் வேறு கடவுளரை வணங்கியறியாதவர்கள் வைணவர்கள், இவ்வைணவத்தில் சிறப்புடன் விளங்கியவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.

ஆழ்வார்கள் பன்னிருவர் (12 பேர்)

1. பொய்கையாழ்வார்

2. பூதத் தாழ்வார்

3. பேயாழ்வார் -  இம் மூவரும் முதலாழ்வார் எனப்படுவர். 

4. திருமழிசையாழ்வார்

5. பெரியாழ்வார்

6. ஆண்டாள் 

7. நம்மாழ்வார்

8. மதுரகவியாழ்வார்

9 . திருமங்கையாழ்வார்

10. தொண்டரடிப் பொடியாழ்வார்

11. திருப்பாணாழ்வார்

12. குலசேகர ஆழ்வார்

             எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் திருமால் வழிபாடாகிய வைணவ வழிபாடு
பன்னிரு ஆழ்வார்களின் பக்திப் பாடல்களால் மறுமலர்ச்சி பெற்றது. இவ்வாழ்வார்கள் 108
வைணவத்தலங்களைப் பாடியுள்ளனர்.

இவர்களுடைய அருட்பாக்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனப்பெயரிட்டுள்ளனர். இதனைத் தொகுத்தவர் நாதமுனி, இதற்குத் திராவிட சாகரம், ஆன்ற தமிழ்மறை என்ற வேறு பெயர்களும் உண்டு.

நாலாயிரத் திவ்வியபிரபந்தம் 4 பிரிவுகளை உடையது. 1. முதலாயிரம் 2. இரண்டாமாயிரம்
அல்லது பெரிய திருமொழி 3. மூன்றாமாயிரம் அல்லது இயற்பா 4. நாலாமாயிரம் அல்லது
திருவாய்மொழி.

1) முதலாயிரம்

1. திருப்பல்லாண்டு  - பெரியாழ்வார்
2. பெரியாழ்வார் திருமொழி - பெரியாழ்வார்
3. திருப்பாவை  - ஆண்டாள்
4. நாச்சியார் திருமொழி - ஆண்டாள்
5. பெருமாள் திருமொழி - குலசேகர ஆழ்வார்
6. திருச்சந்த விருத்தம் -  திருமழிசையாழ்வார்
7. திருமாலை  -  தொண்டரடிப் பொடியாழ்வார்
8. திருப்பள்ளி யெழுச்சி - தொண்டரடிப் பொடியாழ்வார்
9. அமலனாதிபிரான் - திருப்பாணாழ்வார்
10. கண்ணிநுன் சிறுத்தாம்பு - மதுரகவியாழ்வார்

2) இரண்டாமாயிரம் அல்லது பெரிய திருமொழி

1. பெரிய திருமொழி -  திருமங்கையாழ்வார்
2. திருக்குறுந்தாண்டகம் - திருமங்கை ஆழ்வார்
3. திருநெடுந் தாண்டகம்-  திருமங்கை ஆழ்வார்

3) மூன்றாமாயிரம் அல்லது இயற்பா

1. முதல் திருவந்தாதி - பொய்கையாழ்வார்
2. இரண்டாம் திருவந்தாதி-  பூதத்தாழ்வார்
3. மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார்

நான்காம் திருவந்தாதி என்ற நான்முகன் திருவந்தாதி திருமழிசையாழ்வார்

1. திருவிருத்தம் -நம்மாழ்வார்
2. திருவாசிரியம் - நம்மாழ்வார்
3. பெரிய திருவந்தாதி - நம்மாழ்வார்
4. திருவெழு கூற்றிருக்கை - திருமங்கையாழ்வார்
5. சிறிய திருமடல் - திருமங்கையாழ்வார்
6. பெரிய திருமடல் - திருமங்கையாழ்வார்

4) நாலாமாயிரம் அல்லது திருவாய்மொழி

திருவாய்மொழி - நம்மாழ்வார்

நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் உள்ள மொத்த நூல்கள் - 24

மொத்தப் பாடல்கள் - 3776

நாலாயிரத் திவ்விய பிரபந்தப் பாடல்களுக்கும் இசைவகுக்கப்பட்டிருப்பதால் இந்நூல் இசைத்தமிழ் இலக்கியமாகும்.

பொய்கையாழ்வார்

பிறந்த ஊர் - காஞ்சிபுரம்
பாடியது - முதலாம் திருவந்தாதி
யாப்பு வகை - வெண்பா

100 வெண்பாக்கள் உள்ளன.

முதன் முதலாகத் திருமாலின் 10 அவதாரங்களைப் பாடியவர். பொய்கையாழ்வார் . தம் பாடலைச் 'சொல்மாலை' என்று கூறுகிறார்.

மேற்கோள்

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று”

பூதத்தாழ்வார்

பிறந்த ஊர் - மாமல்லபுரம்
பாடியது - இரண்டாம் திருவந்தாதி
யாப்பு வகை - வெண்பா

100 வெண்பாக்கள் உள்ளன.

இவர் தம் பாடலை ஞானத்தமிழ் என்று குறிப்பிடுகிறார்

மேற்கோள்

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்து நான்”

* பெரியாழ்வார் பிறந்த ஊர் திருவில்லிப்த்தூர்.

* பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தவர் பெரியாழ்வார்.

* பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப் பட்ட தெய்வக்குழந்தை ஆண்டாள்.

* ஆண்டாள் வாழ்ந்த காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு.

* சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.

* கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ 
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ ?
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே ! 

       -   என்று சங்கிடம் பாடியவர் ஆண்டாள்.

* ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள் மார்கழித்திங்களில் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

* நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர். இவரது காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு.

* வழிப்பறி செய்து இறைவனுக்குத் தொண்டாற்றியவர் திருமங்கையாழ்வார். சோழ மண்டலத்தில் திருவாலி நாட்டில் உள்ள திருக்குறையலூரில் பிறந்தவர்.

* நம்மாழ்வாரைத் தெய்வமாக வணங்கிய ஆழ்வார் மதுரகவியாழ்வார்.

* திருமாலுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியவர் தொண்டரடிப் பொடியாழ்வார்.

* திருப்பாணாழ்வார் பிறந்த ஊர் உறையூர்.

* குலசேகர ஆழ்வார் சேரமன்னர் மரபைச் சேர்ந்தவர். இவர் இயற்றியது பெருமாள் திருமொழி.

******************     ********   *************

வாழ்த்துகள் நண்பர்களே ! 

பைந்தமிழ். மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

*****************   ***********   *************



Post a Comment

1 Comments