TNPSC , TRB , VAO - தமிழ் - போட்டித் தேர்வில் வெற்றி !
சமய ( பக்தி ) இலக்கியங்கள்
நிகழ்நிலைத் தேர்விற்கான விடைகள் அடங்கிய தொகுப்பு
சங்க காலத்தையும். நீதிநூல் காலத்தையும் அடுத்துத் தெளிவாகத் காணப்படுவது பக்தி இலக்கியக் காலமாகும். கி.பி.7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சைவசமயப் பெரியோர்களான நாயன்மார்களும், வைணவ சமயப் பெரியோர்களான ஆழ்வார்களும் தோன்றிப் பக்திப் பாடல்களைப் பாடித் தத்தம் சமயங்களைப் பரப்பிவந்தார்கள். அக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த புத்த. சமண சமயங்களை எதிர்த்து மக்களைத் திரட்டுவதற்குப் பக்திப் பாடல்கள் பயன்பட்டன. பன்னிரு திருமுறைகளும். நாலாயிர திவ்விய பிரபந்தமும் மக்களைப் பக்தி வெள்ளத்தில் ஆழ்த்தின.
7,8,9 ஆம் நூற்றாண்டுகளாகிய பல்லவர் காலத்தில்தான் பக்தி இலக்கியங்கள் செழித்தோங்கி வளர்ந்தன தமிழைப் பக்தியின் (இரக்கத்தின்) மொழி என்று கூறுகிறார் தனிநாயக அடிகள்.
சைவமும் தமிழும்
சைவ சமயப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
> முதல் மூன்று திருமுறைகள் - திருஞான சம்பந்தர் பாடிய தேவாரம்
> நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் பாடிய தேவாரம்
> ஏழாம் திருமுறை - சுந்தர் பாடிய தேவாரம்
> (இவை ஏழும் அடங்கன் முறை எனப்படும்)
> எட்டாம் திருமுறை - மாணிக்க வாசகரின் திருவாசகம், திருக்கோவையார்.
> ஒன்பதாம் திருமுறை - திருமாளிகைத் தேவர் முதலிய 9 பேர்
> பத்தாம் திருமுறை - திருமூலரின் திருமந்திரம்
> பதினோராம் திருமுறை - திரு ஆலவாய் உடையார் முதலிய பன்னிருவர்
> பன்னிரண்டாம் திருமுறை - சேக்கிழாரின் பெரிய புராணம்
திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியண்டார் நம்பி .இவர் தொகுத்தவை 11
திருமுறைகள் மட்டுமே. பிற்காலத்தில் பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டது பெரிய புராணம்.
திருமறைகளைத் தொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன் என்று சதாசிவப்
பண்டாரத்தார். ஔவை துரைசாமிப் பிள்ளை போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.
முதலாம் இராசஇராச சோழன் தொகுப்பித்தான் என்ற சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
இராசராச சோழன் 'திருமுறை கண்ட சோழன்' எனப் புகழப்படுகிறான். முதல் ஏழு
திருமுறைகள் தேவாரம் எனப்படும்.
தே+வாரம் - தேவாரம் எனப்பட்டது தெய்வத்தின் மீது பாடப்பட்ட இசைப்பாட்டு, வாரம் என்றால் இசைப்பாட்டு என்று சிலப்பதிகாரம் கூறும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய மூவரும் தேவார மூவர் எனப்பட்டனர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும்
சைவசமயக் குரவர்கள் எனப்பட்டனர்.
திருமுறை ஆசிரியர்கள் - 27
நூல்கள் - 76
திருப்பாடல்கள் - 18326
திருஞானசம்பந்தர்
இயற்பெயர் - ஆளுடைய பிள்ளை
பெற்றோர் - சிவபாத இருதயர். பகவதி அம்மையார்
பிறந்த ஊர் - சீர்காழி
இவ்வூருக்கு பிரமபுரம், வேணுபுரம், புகலி, தோணிபுரம், சிரபுரம், புறவம், கழுமலம்
முதலிய பன்னிரண்டு பெயர்கள் உண்டு.
குலம் - அந்தணர்
கோத்திரம் - கவுணியா
காழி வள்ளல். முத்தமிழாகரன், கலைவித்தகன், செழுமலையத் தமிழ்க்கேசரி,
என்றெல்லாம் சிறப்பிக்க ப்படுகிறார். இவரது பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகத்
தொகுக்கப்பட்டுள்ளன.
> பாடியவை பதினாறாயிரம் பதிகங்கள் (16 ஆயிரம்) கிடைத்தவை 384 பதிகங்கள்
> கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை 4168 என்பர் மு.வ.
> 23 பண்களில் பாடியுள்ளார்
> 220 தலங்களை வழிபட்டார்
சேக்கிழார் பெரிய புராணத்தில் 1256 பாடல்களில் திருஞானசம்பந்தர் புராணம்
பாடியுள்ளார். அதனால் பிள்ளைபாதி; புராணம் பாதி என்று பெரிய புாணத்தைக் கூறுவர்.
‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க' திருஞானசம்பந்தர் தோன்றினார்
என்று சேக்கிழார் பாராட்டுகிறார். ஆதி சங்கரர் இவரைத் ‘திராவிடச் சிசு' என்று கூறுகிறார்.
ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாடல் இராவணனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
ஒன்பதாம் பாடல் பிரமனும், திருமாலும் தேடிக் காணமுடியாத பெருமை உடையவன்
சிவபெருமான் என்று சிவபெருமானின் பெருமையைக் குறிப்பிடுகிறது. பத்தாம் பாடல் சமண, புத்த மத எதிர்ப்பைக் குறிப்பிடுகிறது. பதினோராம் பாடல் பதிகத்தை ஓதுவதால் ஏற்படும் பயன்களையும், பாடியவரின் பெருமையையும் குறிப்பிடுகிறது.
முக்கிய நிகழ்வுகள்
மூன்று வயதில் உமையாள் பொற்கிண்ணத்தில் வழங்கிய ஞானப்பாலை உண்டவர் . திருஞான சம்பந்தரின் பாடல்களை யாழில் இசைத்தவர் திருநீல கண்ட யாழ்ப்பாணர். யாழ்முரிப்பண் பாடிய இடம் தருமபுரம். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த இடம் திருப்புகலூர்.
சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அனைவருக்கும் அருள்புரிந்த இடம் திருச்செங்கட்டாங்குடி.
அரவம் தீண்டி உயிர்துறந்த வணிகனை விடம் தீர்த்து உயிர் பெற்று எழச் செய்த
இடம் திருமருகல்.
கொல்லிமழவன் என்னும் மன்னனின் மகளுக்கிருந்த தீராத நோயாகிய முயலகன்
என்னும் நோயைப் போக்கிய திருத்தலம் திருப்பாச்சிலாச்சிரமம்.
மக்களின் குளிர்ச்சுரத்தைப் போக்குவதற்காகப் பதிகம் பாடிய இடம் செங்குன்றூர்.
படிக்காசு பெற்று அடியவர்களின் பசிப்பிணியைப் போக்கிய இடம் திருவீழிமிழலை.
சிவனடியாரின் மகளாகிய பூம்பாவைக்கு உயிர் கொடுத்த இடம் திருமயிலை.
கோவில் கதவு திறக்கவும் மூடவும் பதிகம் பாடிய இடம் திருமறைக்காடு.
ஆண்பனை மரங்களை பெண் பனைமரங்களாக மாற்றிய இடம் திருவோத்தூர்.
சமணர்களை அனல்வாதத்திலும் புனல் வாதத்திலும் வென்ற இடம் மதுரை.
கூன் பாண்டியனின் வெப்புநோய் நீக்கி அம்மன்னனை சமண சமயத்திலிருந்து
சைவ சமயத்திற்கு மாற்றினார், கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் ஆனார்.
புனல் வாதத்தின்போது வைகையாற்றில் இட்ட ஏடுகள் கரையேறிய இடம் திருவேடகம்.
திருஞானசம்பந்தரின் சிவிகையைத் திருநாவுக்கரசர் சுமந்த இடம் திருப்பூந்துருத்தி. அப்பொழுது திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரைக் கொடுத்தவர் திருஞானசம்பந்தர்.
திருக்கோலக்கா என்னும் திருத்தலத்தில் இறைவன் பொற்றாளம் வழங்கினார்.
இறைவன் திருஞானசம்பந்தருக்கு முத்துச்சிவிகை அருளிய இடம் திருவாயில்
அரத்துறை முத்துப்பந்தல் அருளிய இடம் திருப்பட்டீச்சரம் பொற்கிழி வழங்கிய இடம்
திருவாடுதுறை. திருஞானசம்பந்தருக்குத் திருமணம் நடைபெற்ற இடம் திருநல்லூர்ப்
பெருமணம் திருநல்லூர்ப் பெருமணத்தில் திருமணக் கோலத்துடன் இறைவனடி சேர்ந்தார்.
திருஞான சம்பந்தரின் முத்திப்பிராயம் 16 ஆண்டு.
மேற்கோள்
ஞானப்பால் உண்டபோது பாடிய முதற்பாடல்.
“தோடுடைய செவியன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவன் அன்றே”
நல்லவர்க்கில்லை நாளும் கோளும் கோள்கள் தீமை செய்யமாட்டா; அடியவர்களுக்கு மிக நல்லவை என்று ஒரு பதிகம் பாடியுள்ளார். இப்பதிகத்தை ஓதுவார்க்குக் கோள்கள் தீமை
செய்யாது என்பது நம்பிக்கை கோளறு பதிகத்தின் முதற்பாடல்.
“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணைதடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலனிந்தென் உளமேபுகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே”
கூன்பாண்டியனின் வெப்புநோய் தீர்க்கப் பாடிய பதிகம் திருநீற்றுப் பதிகம்.
“காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவக் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் ருநீறே”
திருநல்லூர்ப் பெருமணத்தில் திருமணம் முடிந்ததும் பாடிய பதிகம். அப்பதிகத்தின்
முதற்பாடல்
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஒதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே”
**************** ********* *************
போட்டித் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
***************** ************* **********
0 Comments