உயிரைக் காக்கும் ஓசோன் படலம் ஓட்டையாகலாமா ? - சர்வதேச ஓசோன் தினம் - சிறப்புக் கட்டுரை

 

    சர்வதேச   ஓசோன்  தினம்.

                 15 • 9 • 2021

          உயிரினங்கள்  பூமியில்  உயிர்  வாழ  வளிமண்டல   ஓசோன்  படலம்  பெரும் பங்காற்றுகிறது.  பார்வைக்கு  அகப்படாத  இப்படலம்   காக்கும்  தெய்வமாகவே   விளங்குகின்றது. 

          மனிதனால்  ஓசோன்  படலத்திற்கு    ஏற்படும்   சீர்கேடுகளை உணரச்செய்து , அவற்றை  பாதுகாப்பதன்   அவசியத்தை உணரவும்   ஆண்டுதோறும்  செப்டம்பர்  16 - ம் நாளை  உலக  ஓசோன்   தினமாக  கடைப்பிடிக்கபடுகிறது.

         பூமியின்  கவசமாக   அமைந்திருக்கும்   ஓசோன்  படலம்  துளை  விழுந்ததாக   கருதப்பட்டு, முதலில் அண்டார்டிகா  பகுதியில்   "டாப்சன்"  அளவில்  காணும்போது,  அடர்த்தி   குறைவாக   கண்டறியப் பட்டது. இதையடுத்து 1987- ஆம்  ஆண்டு  நடந்த  ஓசோன்  குறித்த   சர்வதேச  மாநாடு  நடத்தப்பட்டது. 

          இவற்றின்  காரணமாக  1987 - ஆம்  ஆண்டு  செப்டம்பர் - 16 - ம்  நாள்  கனடாவில்  ஓசோன்  படலத்தை  அழிக்கும்   வேதியியல்  மாற்றத்திற்கு   எதிரான  " மொன்றியல் "  உடன் படிக்கை   கையெழுத்திட்டதை   அடுத்து  அந்த  தினமே 1995 - ஆம்  ஆண்டு  முதல்  சர்வதேச   ஓசோன்   தினமாக  அனுசரிக்கப்பட்டு  வருகின்றது. 

      1994 - ஆம்  ஆண்டு  டிசம்பர்   19 - ம்  நாள்   ஐநா  பொது  சபையில்   இதற்கான   தீர்மானம்  நிறைவேற்றப்பட்ட து. அதாவது    பூமிக்கு   ஆபத்தை   ஏற்படுத்தும்   மிக  முக்கியமான சுற்றுச் சூழல்   பிரச்சனைகளை   ஒருமுகப்படுத்தும்   தினமாக   இதனை   அனுசரிக்க  உலக நாடுகள்   தீர்மானித்து. 

இதன்படி  செப்டம்பர்  - 16  சர்வதேச   ஓசோன்  தினமாக  1994 - கடைப்பிடிக்கப் பட்டு  , "மான்ட்ரியல் " நெறிமுறைகள்  ( Montreal  Protocol)    அறிவுறுத்தப்படு வருகின்றன. 

ஓசோன்  படலம்

    ஓசோன்  என்பதற்கு  கிரேக்க  மொழியில்   நறுமணம்  என்று  பொருள்.  இவை  வளிமண்டலத்தில்  செங்குத்தாக  15 கி மீ  தொடங்கி  40 கி மீ  வரையிலான  செறிவாக   காணப்படும்  வாயு ஓசோன்  எனப்படும்.

ஓசோன்  என்பது  02    வின்   சிறப்பு  வடிவம் . ஓசோன்  வளிமண்டலத்தில்  குறைந்தே  காணப்பட்டாலும்  மனித  குலத்திற்கு   மாபெரும்   நலன்களை  வாரி  வழங்குகிறது.

இவை  வளிமண்டல த்தில்   அமைந்துள்ள   பகுதிக்கு   " ஸ்ட்ரேட்டோஸ்பியர் "   எனப்படும் .  இப்பகுதியில்   90%  ஓசோன்  காணப்படுகின்றது. ஓசோன்  அடுக்கடுக்கானது  சூரியனிடம்   இருந்து  வரும்  UV கதிரியக்கம்  போன்ற  தீய  கதிரில்  இருந்து  பாதுகாக்கிறது. 

குளோரோ   ஃளோரோ   கார்பன் , ஹேலகன்கள்  ( குளோரின்,  புரோமின் , அயோடின் )  ஆகியவை  ஓசோன்  படலத்தை  பாழ்படுத்தும்  தீமைகளாகும். இவை  ஓசோன் படலத்தைத்   துளைத்து   பாதிப்பை  ஏற்படுத்தும்.

ஓசோன் 03   ஆக்சிஜனை  0 2  ஆக  உடைக்கின்றன.  ஹேலஜன்களுடன்  குறிப்பாக  குளோரின்   மற்றும்  புரோமினுடன்  புற  ஊதாகதிர்களின்   முன்னிலையில்  வினைப்பட்டு,  பின்   தனித்து  விடப்படுகிறது.  பின்னர்  ஓசோனுக்கு  தீமைபயக்கும்   காரணியாக  மாற்றப்படுகின்றது. 


சராசரியாக ஒரு  குளோரின்  அணு  ஒரு   லட்சம்  ஆக்சிஜன்  அணுக்களை  அழித்து  விடுகின்றன. எனவே  குளோரோ,  ஃபுளோரோ , கார்பன்  மற்றும்  ஹைட்ரோ குளோரோ   கார்பன்  போன்றவை  சுற்றுச்   சூழலுக்குக்   கேடு   விளைவிக்கும் .இவற்றை  உருவாக்கும்   மூலங்களான   குளிர்பதனப் பெட்டி   ,  குளிரூட்டும்  சாதனங்களின்   பயன்பாட்டை  குறைக்க   வேண்டும் . இதன்  மூலம்   ஓசோன்   பாதுகாக்க   வழிக்காணப்படுகிறது.

2016 - ம்  ஆண்டு  ஏற்றுக் கொள்ளப்பட்ட  கிகாலி   திருத்தத்தின் ( Kigali   Amendment )மூலம்  புவி   வெப்பமயமாதலைத்  தூண்டும்  காரணிகளை  குறைப்பதற்கும்   ஆதரவு  அளிக்கப்படுகிறது. 

அமெரிக்கா , ஜப்பான் , ஐரோப்பிய  நாடுகள்   போன்ற   வளர்ந்த   நாடுகள்  ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன்  ( HFC ). ஐ  2019 - க் குள்ளும்,  சீனா  2024 - க்குள்ளும்,   இந்தியா  போன்ற   வளரும்  நாடுகள்   2028 - க்குள்ளும்   குறைக்கும்  படி  முடிவு  செய்ய ப்பட்டது. 

ஏனெனில்   HFC  - என்பது   கார்பன் - டை - ஆக்ஸைடை விட  (C02 )  ஆயிரம்மடங்கு   தீமையைத் தரக்கூடியது. 

டோப்சன்  அலகு

      ஓசோனின்   பண்புகளைக்   கண்டறிய   ஜி . எம் , பி . டோப்சனன்   என்பவர்   ஸ்பெக்ட்ரோ  போட்டோ  மீட்டரை  உருவாக்கினார்.   இதனை  நிலப்பரப்பில்   இருந்தே   வளிமண்டல  ஓசோனை   அளவிடப் படுகின்றது. ஓசோன்  கண்காணிப்பு   நிலையங்களின்   நெட்வொர்க்கை   உலகளாவிய  அளவில்  டோப்சன்  நிறுவினார்.

ஓசோன்  படலத்தின்  பயன்கள்

இடி மின்னல்  ஏற்படும் போது , பூமிக்கு  அருகே  படலம்  உருவாக்கி , அத்தாக்குதலில் இருந்து  புவியை  பாதுகாக்கிறது. குடைபோன்ற   அமைப்பாக  செயல்பட்டு  பூமியை  காக்கிறது. கிருமிகளை அழிக்கிறது.  தண்ணீரை  சுத்திகரிக்க  பயன்படுகிறது.மேலும்   சூரியனிடமிருந்து  வெளிப்படும்   தீங்கு  தரும்  புற ஊதா ( Ultra  Violet )  கதிர்கள்   பூமாயை  அடையாதவாறு   அவற்றை  உறிஞ்சி  பாதுகாக்கிறது.

ஓசோன் படல  பாதிப்பால்  உயிர்களுக்கு  ஏற்படும்   இன்னல்கள்

     சூரியக்கதிர்கள்  நேரடியாக   வருவதனால்  மனித னுக்கு   தோல்  சம்பந்தப்பட்ட  புற்று நோய்கள்   ஏற்படுகின்றன.

மனிதனின்  கண்பார்வை ,மற்றும் எதிர்ப்பு  சக்தி  குறைகிறது.

தாவரங்கள்  கருகி  நோய்  எதிர்ப்பு  சக்தி  அற்றுப் போகிறது.

மீன்களின்  முட்டைகள்  பல  கதிர்களால்   தாக்கப்பட்டு  , இனப்பெருக்கத்திற்கு  சாதகமான சூழல்  அமை வதில்லை.  இதனால்  இனப்பெருக்க ம்  குறைகிறது. 

ஓசோன்  பாதிப்பைத்  தடுக்கும்   நடவடிக்கைகள்.

 குளிரூட்டிகளில்  CFC - அற்ற  குளிரூட்டியை  பயன்படுத்துதல். 

ஓசோன்  படலத்தை  சிதைக்கும்   வேதியியல்  பயன்பட்டை   குறைத்தல்

ஓசோன்   தொடர்பான   ஆய்வுகளை  மேற்கொளல்.

பாதுகாப்பு  சம்பந்தப்பட்ட   சட்டங்களை   வகுத்து   , ஒவ்வொரு  நாட்டிலும்   செயல்படுத்துதல். 

      சூரிய  ஒளி யிலிருந்து  வரும் புற ஊதாக்   கதிர்வீச்சின்  தாக்கம்   மனிதனுக்கு  பல்வேறு  அசாதாரண  விளைவுகளை  உண்டாக்குகின்றன. அதிகமான  சூரியஒளி    உடலின்  மீது  விழுந்தால்   பல  தீங்குகளைத்  தருகிறது. எனவே ஓசோன்  தின  நெறிகளை   கடைப்பிடிக்கும்   இவ்வேலை  , ஓசோன்  துளை  குறித்தும்,  அவற்றை நீக்கும்  முறை குறித்தும்  அனைவரும்  சிந்திக்கும்  நிலையை  உருவாக்க கடமைப்பட்டுள்ளோம். 


ஆசானை  மதிக்காத   மாணவரும், 

ஓசோனை   அறியாத  மக்களும்

பெரும்   துயரத்தை   அடையும்  வாய்ப்புகள்   மிகுதியானவை என்பதனை  உணர்ந்து ,  நன்மை  தரும்  வழிகளான  ரசாயனப் பொருள்களின்  பயன் பாட்டைக் குறைத்தல், 

மரம்  வளர்த்தல்,   இயற்கையை  பாதுகாக்காத்தல்  போன்றவற்றைக்  கடைப்பிடிப்பதன்   மூலம்  ஓசோன்  படலத்தை  பாதுகாத்து  பயன் பெறலாம்.

நெகிழி  பயன்பாட்டைக்  குறைத்து   நன்மை  காண்போம் !

மரத்தை  வளர்த்து   மாண்புகள்   பெறுவோம் !

இயற்கையைப் போற்றி  ஓசோனைப்  பாதுகாப்போம்!

Post a Comment

0 Comments