ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 9 - தகவல்களைச் சேகரித்து துண்டறிக்கை உருவாக்குதல் / 9th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY - 9

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

செயல்பாடு -  9

தகவல்கள் சேகரித்துத்

துண்டறிக்கை உருவாக்குதல்

கற்றல் விளைவு:

         செய்தித்தாள்கள், இதழ்கள், கதைகள், இணையத்தில் காணப்படும் தகவல்கள், கட்டுரைகள் போன்றவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும் கருத்துரைகளையும் வெளிப்படுத்துதல்.

          பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்,

கற்பித்தல் செயல்பாடு:

அறிமுகம்:

                 துண்டறிக்கை என்பது மக்கள் விரைவாகவும் விரும்பியும் படிக்க ஏற்றது; படிக்க ஈர்ப்புள்ளதாக அமைவது; குறைந்த நேரத்தில் படிக்கத் தகுந்தது; மக்களை எளிதில் சென்றடைவதோடு நோக்கத்தை எளிதில் நிறைவேற்றுவது; சுருக்கமாகவும் அதேசமயம் விளக்கமாகவும் செய்திகளைப் பரப்பும் ஆற்றல் கொண்டது; இதுவே துண்டறிக்கை எனப்படும் தகவல்தொடர்பு அச்சு ஊடகம் ஆகும்.

துண்டறிக்கை உருவாக்குதல்

  மாணவர்களே! உங்கள் குடும்பத்தினரையும் அருகிலுள்ள உறவுகளையும் நண்பர்களையும் பறவை நோக்குதல் பயிற்சிப் பட்டறையின் ஒருநாள் பயிற்சி வகுப்பிற்கு அழைத்துச் செல்ல துண்டறிக்கை உருவாக்குவோம்.

துண்டறிக்கை வடிவமைக்கும் முறை

        எழுத்துகளின் வடிவமைப்பை மாறுபட்ட கோணங்களில் பெரியதாகவோ சிறியதாகவோ இடம்பெறச் செய்யவேண்டும். படிப்பவர்களின் கவனத்தைக் கவரக்கூடிய வண்ணங்களில் துண்டறிக்கை அமைதல் வேண்டும். அதில் தகுந்த புகைப்படங்கள் இடம்பெறுதல் வேண்டும். படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக அமைய வேண்டும்.

(எ.கா.)

துண்டறிக்கை-இடம்பெற வேண்டிய குறிப்புகள்:

பயிற்சி :   பறவை நோக்குதல் - ஓர் அறிமுகம்

காலம் :    ஒருநாள்

ஒருங்கிணைப்பு : சேலம் பறவையியல் கழகம் & தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

மாவட்டம்   : சேலம் மாவட்டம்

             பயிற்சியின் நோக்கங்கள்

*  பறவை நோக்குதலின் அடிப்படைகள்

*  பொதுப்பறவைகளிடம் உள்ள வேறுபாடு

*  களத்தில் பறவைகளை வரைதல்

*  மக்கள் அறிவியல் திட்டங்களின் நன்மைகள்

*  சேலம் மாவட்டத்திலுள்ள பறவைகளின் நிலை.

* நம் எதிர்காலம்

நாள்  :   15 மார்ச் 2020

பறவை நோக்கல் நேரம்   : 06.00 முதல் 08.30வரை

வகுப்பு நேரம் :  காலை9.30 முதல் மாலை 4.30வரை

இடம் :  ஏற்காடு அடிவாரம், சேலம்.

தொடர்பு எண் :  91-XXXXXXXXXX

எடுத்துவர வேண்டியவை

: குறிப்பேடு, எழுதுகோல், மடிக்கணினி,
திறன்பேசி

அனுமதி :  முதலில் பதிவு செய்யும் 30நபர்களுக்கு மட்டும்.

கட்டணம் :   ரூ.100/- காலை, நண்பகல் உணவிற்காக.



மதிப்பீட்டுச் செயல்பாடு


குறிப்புகளைக்கொண்டு வனவிலங்கு வாரவிழா, மரம் நடுவிழாக் குறித்து ஒரு
துண்டறிக்கை உருவாக்குக.


விழா   : வனவிலங்கு வாரவிழா

இடம் :   அரசு உயர்நிலைப்பள்ளி, முகாசிப் பிடாரியூர்,
ஈரோடு மாவட்டம்.


விழா : வனவிலங்கு வாரவிழாவும் மரம் நடுவிழாவும்

நாள்    : 06.07.2021

நேரம்  :   9.30மணிமுதல் 12.00மணிவரை

தலைமை : அ.பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்

சிறப்பு விருந்தினர் :திரு. கலைச்செல்வன், வனவிலங்கு - பறவைகள் ஆர்வலர்,
இயற்கை ஆர்வலர், புகைப்படக் கலைஞர்

புகைப்படக் கலைஞர் :

விழாவின் நோக்கம்

*  வனவிலங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.

*  வனவிலங்குகள் கணக்கெடுப்பை ஊக்குவித்தல்.

*  வனவிலங்குப் பூங்காக்கள், காப்பகங்களைப் பார்வையிடல்.

*  வனவிலங்குச் சட்டங்களை மதித்தல்
வெளிநாடு, உள்நாட்டுப் பறவைகளுக்குச் சிறப்புப் பாதுகாப்பு கொடுத்தல்.

*  மூலிகைச்செடியோடு பயன்தரும் மரங்களை வளர்த்துக்காடுகளை உருவாக்குதல்.


தொடர்முழக்கம் மற்றும் பேரணி நடத்துதல்

-  உடற்கல்வி ஆசிரியர்கள்


வனத்தைக் காத்து வனவிலங்கை வாழ்விப்போம்!

விதைப்பந்துகள் வழங்கல் - பசுமைப்படை மாணவர்கள்.

விழாத் தொகுப்பாளர்கள் - தமிழ்த்துறை ஆசிரியர்கள்.

விழா ஏற்பாட்டாளர்கள் - அறிவியல் ஆசிரியர்கள்

மரக்கன்று வழங்குபவர்கள் - சென்னிமலை வனக்காப்பாளர்கள்.

பரிசு வழங்கல்- வெளிநாடுவாழ் உள்ளூர் மக்கள்.

****************     **********    ********



Post a Comment

1 Comments