பத்தாம் வகுப்பு - அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 9 , நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் - வினா & விடை / 10th SCIENCE - REFRESHER COURSE MODULE -9 , QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - அறிவியல் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

பாடம் : 9 

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 

மதிப்பீடு;

1. சரியான விடையைத் தேர்ந்தெடு,

1. திரவ நிலையில் உள்ள உலோகம்

அ) கார்பன்    ஆ)பாதரசம்     இ)தாமிரம்

விடை : ஆ ) பாதரசம் 

2. ஓசோனில் (c,) உள்ள ஆக்சிஜன் அணுக்களின் எண்ணிக்கை -----

அ)  1        ஆ ) 3      இ) 2

விடை :  ஆ ) 3

3. உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?

அ) கம்பியாக நீளும் பண்பு

ஆ) தகடாக விரியும் பண்பு

இ) பளபளப்புத் தன்மை

விடை :  ஆ ) தகடாக விரியும் பண்பு

4. கார்பனின் குறியீடு

அ) N      ஆ) Na      இ ) C

விடை :  இ ) C 

5. வெப்பநிலை மானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்

அ) அலுமினியம் ஆ) பாதரசம்

இ ) பாஸ்பரஸ்

விடை :  ஆ ) பாதரசம் 

6. நீரில் உள்ள தனிமங்கள் ------மற்றும் -------

விடை :  H , O 

7. உருகுநிலை ----- க்கு அதிகம் (உலோகம்/அலோகம்)

விடை : உலோகம் 

8. பருப்பொருள்கள் --------  ------ மற்றும் ------- நிலைகளில் இருக்கும்.

விடை :  திண்ம , திரவ , வாயு 

9. அலுமினியத்தின் குறியீடு  ------  ஆகும்.

விடை :  Al

10. சாதாரண உப்பின் வேதிப்பெயர் --------

( சோடியம் கார்பனேட் /  சோடியம் குளோரைடு)

II. மாறுபட்டதை வட்டமிடுக.

1 )  {i} நீர், உப்பு, சர்க்கரை, சல்பர்

விடை :  சல்பர் 

2. (ii) அலுமினியம், தங்கம், சல்பர், இரும்பு

விடை :  சல்பர் 

III. பொருத்துக.

அ ) தனிமம்  -  தூய்மையான பொருள் 

ஆ) சேர்மம்   -  மூலக்கூறுகளால் உருவானது

இ )  கூழ்மம் - அணுக்களால் உருவானது

ஈ) தொங்கல் - அசையாமல் வைக்கும் போது கீழே படிகிறது

உ) கலவை  -  தூய்மையற்ற பொருள்


IV. அடைப்புக் குறியில் உள்ள எழுத்துக்களை மாற்றி சரியான சொல்லாக அமைக்கவும்,

1. நாம் சுவாசிக்கும் காற்றில் ------ (கன்ஆசிஜ) உள்ளது.

விடை :  ஆக்சிஜன் 

2. நாம் அணியும் அணிகலன்கள் -------- ஆல் (கதம்ங்) உருவானவை,

விடை :  தங்கம் 

V.கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்கப் பயன்படும் வாயு -------

விடை :  குளோரின் 

2. அமோனியாவில் (NH3) உள்ள தனிமங்கள்------- -------

விடை :  N . H 

3. நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு சோமங்களின் பெயர்களைக் கூறு.

விடை :  உப்பு , சர்க்கரை 

4. சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் மற்றும் ------ என இரண்டு வகைப்படும்.

விடை :  கரிமச்சேர்மங்கள் 

5. தீப்பெட்டி தயாரிக்கவும், எலி மருந்து தயாரிக்கவும் ------- பயன்படுகிறது.

விடை :  பாஸ்பரஸ் 

6. நீரிலிருந்து ஆல்கஹால் ---------மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது

விடை : பின்னக்காய்ச்சி வடித்தல் 

7. டெட்டாலின் சிறு துளிகளை நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?-

விடை :  டெட்டாலின் சிறு துளிகள் நீரில் விரவுவதால் நீர் கலங்களாக மாறுகிறது.

****************     ***********    ***********-


விடைத்தயாரிப்பு : 

திரு.S.பிரேம் குமார் , 

பட்டதாரி அறிவியல் ஆசிரியர் , 

அப்பர் மே.நி.பள்ளி , கருப்பாயூரணி , மதுரை.

***************     *************    ************

Post a Comment

0 Comments