பத்தாம் வகுப்பு - அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பாடம் : 7 , ஒலி
மதிப்பீடு:
1.சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?
(அ) காற்று
(ஆ) உலோகங்கள்
(இ)வெற்றிடம்
(ஈ) திரவங்கள்
விடை : ஆ ) உலோகங்கள்
2. ஒலி அலைகளின் வீச்சு தீர்மானிக்கிறது.
(அ) வேகம்
(ஆ) சுருதி
(இ) உரப்பு
(ஈ) அதிர்வெண்
விடை : இ ) உரப்பு
3. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி
(அ)ஹார்மோனியம்
(ஆ) புல்லாங்குழல்
(இ) நாதஸ்வரம்
(ஈ) வயலின்
விடை : வயலின்
4. இரைச்சலை ஏற்படுத்துவது
(அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள்
(ஆ)வழக்கமான அதிர்வுகள்
(இ) ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகள்
(ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
விடை : ஈ ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
5. மனித காதுகளால் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு
(அ)2Hz முதல் 2.000 Hz வரை
(ஆ)20Hz முதல் 2.000 Hz வரை
(இ) 20Hz முதல் 20,000 Hz வரை
(ஈ) 200Hz முதல் 20,000Hz வரை
விடை : இ ) 20Hz முதல் 20,000 Hz வரை
6. பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை?
(i) அதிர்வெண்
(ii ) கால அளவு
(iii ) சுருதி
(iv) உரப்பு
(அ) i மற்றும் ii
(ஆ)ii மற்றும் iii
(இ) iii மற்றும் iv
(ஈ) i மற்றும் iv
விடை : அ ) i மற்றும் ii
7. சித்தார் எந்த வகையான இசைக்கருவி?
(அ)கம்பிக்கருவி
(ஆ) தாளவாத்தியம்
(இ) காற்றுக்கருவி
(ஈ) இவை எதுவும் இல்லை
விடை : அ ) கம்பிக்கருவி
8. ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரிக்கும் போது, பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்கும்?
(அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.
(ஆ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது,
(இ) சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
(ஈ) உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
விடை : அ ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.
0 Comments