பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் ( 17 - 09 - 2021 ) சிறப்புக் கட்டுரை / PAKUTHTHARIVUP PAKALAVAN THANTHAI PERIYAR - BIRTHDAY 17 - 09 - 2021


தந்தைப் பெரியார்  பிறந்த  தினம் 

           17 • 9 • 2021


பெண்ணுரிமை  பேணவும்

சுயமரியாதை காக்கவும் 

பகுத்தறிவு   ஆயுதமேந்தி , 

பரிதவித்த   மக்களை

பாதுகாக்க  வந்த  பகலவன் !


நாடுதனில்   மலிந்திட்ட 

சாதிமத  இன, எண்ண , 

வண்ண  பேதங்கள்  நீக்கி

மனித  குல  சேதங்கள்  போக்கி

புரட்சிக்   கனல்  மூட்டி

விடுதலை   வெளிச்சம்  காட்டி...!

தீர்வுக்கு  வழிகாணும்   தீபமான 

சமூக நீதி   ஒளிச்சுடர்

ஈரோடு  ஈந்த  இனிய   தலைவனை

இறுமாப்புக்   கொண்டு   போற்றுவோம்.!

                 தென்னிந்தியாவின்   சாக்ரட்டீஸ்  ,  தந்தை  பெரியார் ,  என போற்றப்படும் ஈ. வே. ராமசாமி  அவர்கள்  1879 - ஆம்  ஆண்டு  செப்டெம்பர்   17 - ம்  நாள்  ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கர் - முத்தம்மாள்  (எ) சின்னத்தாயம்மாள்  இணையருக்கு  மகனாகப்  பிறந்தார்.

உடன்  பிறந்தவர்கள்  கிருஷ்ண சாமி , கண்ணம்மா,  பொண்ணுத்தாயி ஆயோராவர். பெரியாரின்  பகுத்தறிவும்   , சுயமரியாதைக்  கொள்கையும்  தமிழ்  நாட்டின்  தனிப்   பெரும்   பண்பாடாக   தலைநிமிர்ந்து.  இவை   அரசியல் ரீதியாக வும்  பெரும்   மாற்றங்களைக்  கண்டது.

        ஈ. வே. ரா  அவர்கள்  ஐந்தாம்  வகுப்பு  மட்டுமே  பயின்றார்.  பின்  கல்வியில்  நாட்டமின்மையால்  தந்தையாரின்  வணிகத் தொழிலைத்  தொடர்ந்தார். 

ஈ. வே.ரா  அவர்கள்  தெலுங்கு  மொழியைத்  தாய்மொழியாகக்  கொண்டவர். எனினும்  தமிழ் , தெலுங்கு, கன்னடம்  ஆகிய  மொழிகளிலும்  பேசும்   வல்லமை பெற்றார்.

             விருந்தோம்பலைப்  போற்றும்  தந்தையின்   நட்பு  வைணவப்  பண்டிதரிடம்   அறிவுரைகளை  கேட்கும் படி   பணிக்கப் பட்டார். அப்பண்டிதர்   வழங்கிய  அறிவுரைகளை  ஆர்வமாக  கேட்டு  இந்து மத  புராண இலக்கிய,  கதைகளில்  எழுந்த   ஐயங்களை  துணிவுடன்  வினவி  விடைகண்டார் . இத்துணிச்சலே  பின்னாளில்   ஆரிய  எதிர்ப்புக்  கருத்துக்களை  தெரிவிக்க  வழி கண்டன.


இளம்வயதிலேயே  ஈ. வே.ரா  அவர்கள்  சமயம்  என்பது   மக்களின்  மீது  தாக்கப்பட்ட  வஞ்சக சுரண்டலென  நெஞ்சம்  வருந்தினார். இவற்றைக்  களையவேண்டும்  என்பது   தமது  கடமையெனவும், மூடநம்பிக்கையையும்,  சமயத்தலைவர்களிடம்   இருந்தும்  மக்களைக்   காக்கவும்  ஏற்பட்ட  எண்ண  அலைகள்  முட்டி மோத  ,  அவற்றின்  செயல்  வடிவம்  காண  அரும்பாடுபட்டார்.

         அக்காலத்தில்  பெயரின் பின்னே  சாதிப் பெயரை  இணைப்பது  வழக்கம் ,  சுயமரியாதையை  வலியுறுத்திய  ஈ. வே.ரா அவர்கள்   செங்கல்பட்டு  சுயமரியாதை  மாநாட்டில்  தன் பின்னே  வரும்  சாதிப் பெயரை  நீக்கி   சுயமரியாதைக்கு  முழுமையான முகவரியானார். 

இனிய   குடும்பம்

          ராமசாமி  அவர்கள்  தான்  நேசித்த  நாகம்மை  அவர்களையே ,  பெற்றோரின்  இசைவுடன்  இனிதே  மணந்தார். கணவர் பணிசெய்து  அகம் மகிழும் வீரத்தமிழச்சியான  நாகம்மையும்  கணவரின்  புரட்சி எண்ணங்களுக்கேற்ற   வண்ணமாய்த்  தன்னை ஈந்து, தலைவன் வழிநடத்தும்  போராட்டங்களை  புரட்சிகரமான எழுச்சியுடன்  பங்கெடுத்தார். 

காசிப் பயணமும்,  களைந்த  மனமும்..!

 இராமசாமி  அவர்கள்  காசி  விசுவநாதரை  தரிசிக்க  1904 - ஆம் ஆண்டு   இந்துக்களின்  புனிதத் தலமான  காசிக்குப்  புனிதப்பயணம்  மேற்கொண்டார்.

அங்கு  அவர் கண்ட மனிதாபிமான மற்ற  செயல்கள் , பிச்சையெடுத்தல்,  பிணங்கள்  மிதக்கும்  கங்கை போன்ற  கொடுமையான  காட்சிகள் , பிராமணச்   சுரண்டல்களைத்  தெள்ளத் தெளிவாக்கின. புனிதப்  பயணம்  சென்றவர், கண்ட  காட்சிகள்    மனித நேயமே  மரணித்த  சாட்சிகளாக விளங்கியதைக்  கண்டு  உள்ளம்  வெதும்பினார். 

புரட்சிச்  சிந்தனையின்  வித்து

         காசியில்  ஈ. வே .ரா அவர்கள் கண்ட மற்றொரு  அவலநிலை ,  அவரின்  புரட்சிகரமான  சிந்தையில்   சிதறிய   வித்தாக,  கொத்தோடு   வேர்விட்டு , கிளையாக  , மரமாக   ஆழப்பதிந்து,  ஆர்ப்பரித்து  ஆரிய  கலாச்சாரத்தை  அடியோடு  வேரறுக்க  அடிக்கோலியது. பிராமணர்கள்  அல்லாதவர்களால்  வழங்கப்பட்ட  நிதியில்  நடத்தப்படும்  அன்னசத்திரத்தில்,  பிராமணர்  அல்லாத   ராமசாமிக்கு   உணவு  மறுக்கப்பட்டது. இந்த நிலையை  எண்ணி  வருந்தினாலும்,  பசியின்  கடுமையும், கொடுமையும்   தாளாது,  பிராமண  வேடமணிந்து ( பூணூல்  அணிந்து ) உள்நுழைய  முயன்ற  ராமசாமியை,  காட்டிக் கொடுத்தது  மீசை.ஆம் !  இந்து  மத  சாத்திரத்திபடி   பிராமணர்கள்  பெரிய  மீசை  வைப்பதில்லையாம்.  இவற்றை  அறிந்த  காவலாளியால்   கடிந்து  வீசப்பட்டார்.

விதி  செய்த  சதியால்  பசிதாளாமல்  குப்பைத்தொட்டியில்  இருக்கும்    எச்சில்  இலை  உணவை  உண்டு  பசியைப்  போக்கினார். இந்நிலைக் கண்டு உள்ளம்  உறைந்தார். இச்செயலால்  இந்து  சமயத்தின்  வேற்றுமை  உணர்வினை  எதிர்க்கும்  எண்ணம்  அன்றே  துளிர்த்தது. கடவுளைக்காண  புனித யாத்திரை  சென்றவர்,  கடைசிவரை  கடவுள்  மறுப்பாளராக  வாழ்ந்து  காட்டினார்.

அரசியல்  ஈடுபாடு:

1919 - ஆம்  ஆண்டு  ஈ. வே ரா  காங்கிரஸ் கட்சியில்  இணைய  ,  தான்  பார்த்த  பொதுப்  பதவிகளை  விலக்கி   காங்கிரஸ்  பேரியக்கத்தில்  இணைந்தார். காந்தியின்  கதர்  ஆடையை, தான் மட்டுமல்லாது  பிறரையும் அணியும்படிச் செய்தார்.   கள்ளுக்கடை மறியல்,  வெளிநாட்டு துணிகள்  விற்பனை  எதிர்ப்பு  ஆகிய வற்றிற்காக  மறியலில்  ஈடுபட்டு  சிறைசென்றார்.மற்றும்  ஒத்துழையாமை , மிதமாக  மது அருந்துதல்  போன்ற வற்றை  எதிர்த்து  மறியல்  செய்தும்  சிறைக்குச்  சென்றார்.

வைக்கம்  போராட்டம் : ( 1924 -- 1925 )

        கேரளாவில்   உள்ள   வைக்கம்  என்னும்  ஊரில் ,  அவ்வூர்  வழக்கப்படி  அரிசின   மக்களும் , ஈழமக்களும்    கோவிலுக்குள்  நுழையவும் , அக்கோவில் இருக்கும்  வீதியில்  நடக்கவும்  தடை  விதிக்கப் பட்டிருந்தது. 1924 - ம்  ஆண்டி   சாதி  எதிர்ப்பு   வலுவான   நிலையைக்  கண்ட   சமயமாதலால்  சாதி   எதிர்ப்புப்   போராட்டத்தை   சத்தியாகிரக   வழியில்    நடத்த  வைக்கம்   சிறந்த   இடமாக   தேர்ந்தெடுக்கப்பட்ட து.

வைக்கம்   போராட்ட   சீர்திருத்த வாதி   டி . கே . மாதவன்  முன்னிலையில்  ,  அன்னி  பெசன்ட்,   காந்தி    ஆகியோரின்   உதவியுடன்    சத்தியாகிரக  வழியில்  , வினோபா  பாவே,  கெ. பி .  கேசவ மேனன்,  கோவை  . அய்யாமுத்து,   பெரியார் ,  எம் . வி. நாயுடு  ஆகியோர்   பங்கெடுப்புடன்   இப் போராட்டம்   நடந்தது. 

ஏப்ரல்  14 -ம் நாள்  அன்று  இராமசாமி  அவரின் துணைவியார்  நாகம்மையாருடன்  வைக்கம்  போராட்ட த்தில்  கலந்து கொண்ட தால்   சிறைச்  சென்றார். அது  முதல்  வைக்கம்  வீரர் என  தமிழ்  மக்களால்  அழைக்கப்படுகின்றார். 

இந்தி  எதிர்ப்புப்   போராட்டம்

     1937 - ம் ஆண்டு  இராஜாஜி  மதராஸ்  மாகாண த்தின்   முதலமைச்சராக  இருந்தபொழுது   இந்தி  கட்டாய  மொழியாக  பள்ளிகளில்  அறிமுகப்படுத்தப்பட்டது. இது  இந்தி  போராட்டமாக  வெடித்தது. இதில்  நீதிக் கட்சியைச்  சேர்ந்தவரான  சர் . ஏ . டி .பன்னீர் செல்வம்   மற்றும்  தந்தைப்  பெரியார்  ஆகியோர்   இப்போராட்டத்திற்கு    ஆதரவு  கொடுத்தனர்.  போராட்டக்காரர்கள்  1938 - ல்  கைதுசெய்யப்  பட்டு  ராஜாஜி  அரசால்  சிறையில்    அடைக்கப் பட்டு  முடிவுக்கு  வந்தது. ஈ. வே . ரா  அவர்கள்  இந்தி  திணிப்பை  எதிர்த்து  "  தமிழ்  நாடு  தமிழருக்கே "  என்ற   முழக்கத்தை  ஊரெங்கும்  முழங்கச்  செய்தார்.

சுயமரியாதை  இயக்கம்

              தந்தைப் பெரியார்     இந்திய  விடுதலையுடன்  , சமூக விடுதலைக்காகவும்  போராடினார் .இவ்வியக்கம்  பிராமணர் அல்லாதோர்  , தாம்  பழம் பெரும்   திராவிடர்கள்    என்ற    பெருமையுடன்  வாழவும்  ,  உணரவும் , யாருக்கும்   அடிமையில்லை   என்ற   உணர்வு  கொள்ளவும்   உருவாக்கப்பட்டது.இது   மூடப்பழக்க  வழக்கங்களைக்   களையவும்   பரம்பரை  வழக்கத்தை   பின்  பற்றுதலை   தவிர்த்தும்   ,  மக்களைத்  தெளிவுடையவர்களாக  மாற்றவும்   பகுத்தறிவுச் செயல்பாடுகள்  மேற்க்கொள்ளவும்   வலியுறுத்தப்பட்டன. 

பகுத்தறிவாளர்கள்  கடமைகளாக..

ஆணும் , பெண்ணும்  சமம் ,  வேறுபாடின்றி  சரிநிகர்   சமமாக   வாழும்  முறையை  வவியுறுத்தியது.  சாதி  மறுப்பு  திருமணத்தையும் , கைம்பெண் திருமணத்தையும்  ஊக்கப்படுத்தியது. கோயில்களில்  சட்டத்திற்குப்  புறம்பாக  பின்பற்ற ப்படும்  தேவதாசி  முறையையும்,  குழந்தை திருமணத்தையும்  தடைசெய்தது. முக்கியமான   கொள்கையாக  அரசு  நிர்வாகப்  பணி,  கல்வி  ஆகிய வற்றில்  இடஒதுக்கீடு   முறையை  கடைபிடிக்க   மதராஸ்   அரசு  நிர்வாகத்தை  1928 - லேயே வலியுறுத்தியது.

நினைவகங்கள் 

       தமிழ்  நாடு  அரசு  ஈ. வே . ராமசாமி   நினைவைப்  போற்றும்  வகையில்   அவரது  ஈரோடு   இல்லத்தை   " பெரியார் -- அண்ணா நினைவு இல்லமாக " ஆக்கியுள்ளது.  இங்கு  ஈ . வே . ரா.  வின்  மார்பளவு  சிலை  அமைக்கப்பட்டுள்ளது. அவரது  வாழ்க்கை  வரலாறு  தொடர்பான  புகைப்பட ங்கள்  கண்காட்சியாக  வைக்கப்பட்டுள்ளன. 

கேரளத்தில்  அவர்  போராட்டம்  நடத்திய   வைக்கமில்   தந்தை  பெரியார்   நினைவகம்  அமைக்கப்பட்டுள்ளன.  இங்கு  பெரியாரின் திருவுருவச் சிலையும்,    திறந்த  நூலகமும்   அமைக்கப்பட்டுள்ளன. 

கருத்துகளைப்  பரப்பிய   இதழ்கள்

குடியரசு

        வார  இதழாக   வெளிவந்த   " குடியரசு "  1925 - ம்  ஆண்டு   மே மாதம்  2 -ம்   நாள்   தொடங்கப்பட்டது. 

ரிவோல்ட்  ( Revolt )

            ரிவோல்ட்  என்ற   ஆங்கில  வார  இதழ்  2928 - நவம்பர்- 7 - ம்  நாள். தொடங்கப்பட்டது.

பகுத்தறிவு (  நாளிதழ் )

      1934 -ம் ஆண்டு    ஏப்ரல்  15 ம்  நாள்  தொடங்கப்பட்டது

விடுதலை ( வாரம்  இருமுறை)

       1935 -ம்  ஆண்டு   ஜீன்  1- ம்  நாள்  தொடங்கப்பட்டது.

தி  மார்டர்ன்  ரேசனலிஸ்ட்   ( The  Modern  Rstionalist)

        The  Modern  Rstionalist  - என்ற  ஆங்கில  மாத  இதழ்  1971 - ம் ஆண்டு  செப்டம்பர்  1 - ம்  நாள்  தொடங்கப்பட்டது. 

இவ்வாறு  சமூகத்திற்காக  பாடுபட்டு  சாதனைகள்  பல  செய்து , பெண்ணுரிமையும் , சாதிய   வேறுபாட்டையும்  களைய தந்தைப் பெரியார்   மேற்கொண்ட  சிரமங்கள்  பல, துயரங்களுக் கிடையே  துணிச்சலாகப்  பேசி   தனி  மனித   உரிமையை  நிலைப்பெறச்  செய்த   பெரியார்  புகழ்  உலகமெங்கும்  ஒலி த்துக்  கொண்டிருக்கிறது  என்பது இந்தியர்களைப்  பெருமிதம்  கொள்ளச்  செய்கிறது .

தந்தைப்  பெரியாரின்  தனிப் பெரும்  புகழை  நாளும்   போற்றுவோம்.!

      

***************  ****************    **********

Post a Comment

0 Comments