பத்தாம் வகுப்பு - அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - பாடம் 16 , பொருளாதார உயிரியல் - மதிப்பீடு - வினாக்களும் விடைகளும் / 10th SCIENCE - REFRESHER COURSE MODULE - LESSON 16 - QUESTION & ANSWER

 

       பத்தாம் வகுப்பு - அறிவியல் 

         புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

   பாடம் : 16 , பொருளாதார உயிரியல் 

          வினாக்களும் விடைகளும்


மதிப்பீடு:

1.அறிவியல் பெயர்களை எழுதுக.

1. செம்பருத்தி  - Hibiscus rosa sinensis

2. குப்பைமேனி - Acalypha indica

3. சோற்றுக் கற்றாழை - Alo aristatta 

4. கத்தரிக்காய்  - Solanum melongena

5. கீழாநெல்லி  -  phyllanthus nirvi

II.பொருத்துக.

1. அ) சளி, இருமல்  -  துளசி 

ஆ) வயிற்றுவலி  - சோற்றுக்கற்றாழை 

இ) மஞ்சள் காமாலை  -  கீழாநெல்லி 

ஈ) பசியைத் தூண்டல்  -  புதினா 

உ)செரிமானம்  -  இஞ்சி 

III.விடையளி.

1. உயிரி உரமிடல் விவசாயத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. நிரூபி

  * உயிரி உரமிடுதல் விவசாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது . 

* இவை ஓம்புயிரிக்கான முதல் நிலை ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகிறது. 

* இவை வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்த உதவுகிறது.

* நோய்த்தடுப்பு உரமாகவும் பயன்படுகிறது.

* பாக்டீரிய எதிர்ப்பொருள் , பூஞ்சை எதிர்பொருளாகவும் பயன்படுகிறது.


2. காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக

* குளிர்வித்தல்

* உலர்த்துதல்

**************    *************   **************

விடைத்தயாரிப்பு : 

திரு. S. பிரேம்குமார் , அறிவியல் ஆசிரியர் ,

அப்பர் மேல்நிலைப்பள்ளி , 

கருப்பாயூரணி , மதுரை.

**************     ***************   ************

Post a Comment

0 Comments