12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 29 , கட்டுரைக்கான நெறிம்றைகள் - வினா & விடை / 12th TAMIL - REFRESHER COURSE MODULE - 29 , QUESTION & ANSWER

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 29

கட்டுரைக்கான நெறிமுறைகள்

கற்றல் விளைவுகள்

* கட்டுரையின் விளக்கத்தை அறியச் செய்தல்.

* கட்டுரையின் வகைகளைத் தெரிந்து கொள்ளுதல்.

* கட்டுரையின் அனைத்துத் தன்மைகளையும் உணர்ந்து எழுதச் செய்தல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்

            'கட்டு' என்றால் பொருள் என்ன ? எவற்றையெல்லாம் கட்டு என அழைப்பர். ஏன் அவ்வாறு அழைக்கிறார்கள் எனக் காரணம் கேட்டறிதல். உதாரணமாக நெற்கட்டு, கீரைக்கட்டு என்றெல்லாம் கூற வாய்ப்புகள் உண்டு, ஒரே மாதிரியான பொருளை நிறைய சேர்த்துக் கட்டினால் அதனைக் கட்டு என அழைப்பர். அதுபோல நிறைய செய்திகளை உள்ளடக்கி உரைத்தலால் 'கட்டுரை' என்பதை விளக்கிக் கூறி மாணவர்களை ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு: 1

கட்டுரை விளக்கம் :

* ஒரு பொருளைப்பற்றி இலக்கண முறையில் கட்டுரைப்பது கட்டுரை.

* உள்ளத்தில் தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை.

* அழகு நிரம்பிய உரையே கட்டுரை.

*  கட்டுரையாவது வகைப்படுத்திக் கூறுதல்.

              இவ்வாறு அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்படுவதைக் கட்டுரை எனலாம்.

செயல்பாடு: 2

கட்டுரை அமைப்பு :

            எந்தப் பொருளைப் பற்றி கட்டுரை எழுதினாலும் அது முன்னுரை - பொருளுரை - முடிவுரை ஆகியவற்றைக் கொண்டு விளங்க வேண்டும். முன்னுரையும் முடிவுரையும் ஒவ்வொரு பத்திக்குள் அமைய வேண்டும்.

               முன்னுரையானது எழுதப் போகும் கருத்தை வகுத்துக் காட்டுவதற்காக இருக்க வேண்டும். முடிவுரையானது சொல்லப்பட்ட கருத்துக்களைத் தொகுத்துக் கூறுவதாக அமைய வேண்டும். ஒரு கட்டுரையில் முன்னுரையையும் முடிவுரையையும் படித்தாலே கட்டுரையின் சிறப்புத் தன்மை விளங்கும்.


        பொருளுரையானது எடுத்துக் கொண்ட கருத்தைப் பல வழிகளில் விளக்கிக் கூறும் பகுதி ஆகும். ஆதலின் அதை பல பத்திகளாகப் பிரித்து எழுதுதல் வேண்டும். எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு ஏற்ப,
உள்தலைப்புகள் பலவற்றைக் கொண்டதாகப் பொருளுரை விளக்க வேண்டும். பொருளுரையில் மேற்கோள் அமைத்து எழுதுவது இன்னும் சிறப்பு.

       கட்டுரையானது சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நன்மொழி புணர்த்தல் முதலான அழகுகளைப் பெற்றிருக்க வேண்டும். கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மற்றொன்று விரித்தல்
முதலான குற்றங்கள் இல்லாமல் எழுதப்பட வேண்டும்.

செயல்பாடு: 3

கட்டுரையின் பொதுவிதிகள்:

• செய்திகளைத் திரட்டுதல்

* முறைப்படுத்துதல்

* தலைப்புக் கொடுத்தலும் பத்தி அமைத்தலும்.

• மேற்கோள்கள், பழமொழிகள் திரட்டுதல்

• பல்வகை வாக்கியங்களில் எழுதுதல்

• நடையழகு

• நிறுத்தக் குறியீடுகள் பயன்படுத்தி எழுதுதல்

• நல்ல கருத்துகளை எடுத்தாளும் திறன்

• மீள்பார்வை செய்தல்.

• நல்ல கையெழுத்தில் எழுதுதல்

        கட்டுரை எழுதும் போது இவ்விதிகளை நினைவிற்கொள்ளுதல் வேண்டும்.

செயல்பாடு: 4
.
கட்டுரையின் வகைகள் :

• கதை இயல்புக் கட்டுரை

* விளக்கக் கட்டுரை

* சிந்தனைக் கட்டுரை

* வருணனைக் கட்டுரை

* கற்பனைக் கட்டுரை

* ஆய்வுக் கட்டுரை

* வரலாற்றுக் கட்டுரை

• தருக்கக் கட்டுரை

* பாராட்டுக் கட்டுரை

• பத்திரிகைக் கட்டுரை

    என்பனவாகப் பகுத்துக்காட்டுவர். எவ்வகையான கட்டுரைகள் எழுதினாலும் அதற்குரிய அமைப்பையும் விதிகளையும் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும்.

மாணவர் செயல்பாடு

*  மாணவர்களுக்குத் தனித்தனியாகத் தலைப்புகள் கொடுத்துக் கட்டுரை எழுதச் செய்தல்.

சான்றாக:

* கடற்காட்சியை வருணித்துக் கட்டுரை.

*  'நீ திருவள்ளுவரைச் சந்தித்தால்' என்ற தலைப்பைக் கொடுத்து கற்பனைக் கட்டுரை,

* அணுவாற்றல் ஆக்கத்திற்கா? அழிவிற்கா? போன்ற தருக்கக் கட்டுரை

***************      *************    ************

                           மதிப்பீடு

1. கட்டுரை வரையறு?

 ஒரு பொருளைப்பற்றி இலக்கண முறையில் கட்டுரைப்பது கட்டுரை.

* உள்ளத்தில் தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை.

* அழகு நிரம்பிய உரையே கட்டுரை.

*  கட்டுரையாவது வகைப்படுத்திக் கூறுதல்.

              இவ்வாறு அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்படுவதைக் கட்டுரை எனலாம்.


2. கட்டுரையின் வகைகளைக் கூறுக?

கட்டுரையின் வகைகள் :

• கதை இயல்புக் கட்டுரை

* விளக்கக் கட்டுரை

* சிந்தனைக் கட்டுரை

* வருணனைக் கட்டுரை

* கற்பனைக் கட்டுரை

* ஆய்வுக் கட்டுரை

* வரலாற்றுக் கட்டுரை

• தருக்கக் கட்டுரை

* பாராட்டுக் கட்டுரை

• பத்திரிகைக் கட்டுரை

3. கட்டுரையின் பொதுவிதிகள் சிலவற்றைக் கூறுக?

கட்டுரையின் பொதுவிதிகள்:

• செய்திகளைத் திரட்டுதல்

* முறைப்படுத்துதல்

* தலைப்புக் கொடுத்தலும் பத்தி அமைத்தலும்.

• மேற்கோள்கள், பழமொழிகள் திரட்டுதல்

• பல்வகை வாக்கியங்களில் எழுதுதல்

• நடையழகு

• நிறுத்தக் குறியீடுகள் பயன்படுத்தி எழுதுதல்

• நல்ல கருத்துகளை எடுத்தாளும் திறன்

• மீள்பார்வை செய்தல்.

• நல்ல கையெழுத்தில் எழுதுதல்


4. முடிவுரை எவ்வாறு இருத்தல் வேண்டும்?

* ஒரு பத்திக்குள் இருக்க வேண்டும்

* கட்டுரையின் கருத்துகள் தொகுத்து சொல்லப்பட வேண்டும்.

* கட்டுரையின் சிறப்புத்தன்மை வெளிப்பட வேண்டும்.

******************    ************    ***********

Post a Comment

0 Comments