12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 13
தொடரில் காணப்படும் பிழைகளை நீக்குதல்
கற்றல் விளைவுகள்
* ஒரு தொடரில் என்னென்ன பிழைகள் ஏற்படும்?
* எழுத்துப் பிழை, சொற்பிழை இவற்றை நீக்கும் வழிமுறைகளை அறிதல்.
* பிழை ஏற்படும் சொற்களின் சரியான உச்சரிப்பை அறிந்து கொள்ளுதல்.
* பிழையின்றி எழுத மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
'என் உசிரு நீதானே' என்ற தொடரைக் கரும்பலகையில் எழுதி, 'இத்தொடரில் உள்ள பிழையை எவ்வாறு சரி செய்வது?' என மாணவர்களிடம் கேட்டு, 'என் உயிர் நீதானே' என்ற சரியான விடையை மாணவர்களையே கூறச் செய்து ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
எழுதும்போது தொடரில் ஏற்படும் பிழைகளை அறிந்து அவற்றைக் களைந்து சரி செய்வதன் மூலமாக மாணவர்கள் சரியான சொற்றொடர் எழுதும் முறையினை அறிந்து கொள்கின்றனர். மேலும், தமிழில் பிழையின்றி எழுதும் திறனை வளர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தமிழ்மொழி வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பை நம்மால் அளிக்க முடியும். செய்யுள் வழக்கைச் சரியாகப் பயன்படுத்துவதால் தொடரில் ஏற்படும் பிழையைச் சரி செய்ய முடியும். ஒருமைப் பன்மை வேறுபாடுகளை அறிவதும் பிழையற்ற தொடருக்கு வழிவகுக்கும்.
செயல்பாடு: 2
தொடரில் ஏற்படும் சில பிழைகளை சொற்றொடரில் எழுதி அதைச் சரி செய்து சரியான சொற்றொடரை மாணவர்களுக்கு உணர்த்துதல்.
சான்று:
1. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.
2. அவனும் அவளும் வந்தது.
அவனும் அவளும் வந்தனர்.
0 Comments