12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 12 , பிறமொழிச்சொற்களைத் தமிழ்ப்படுத்துதல் - வினா & விடை / 12th TAMIL - REGRESHER COURSE MAODULE - ACTIVITY 12 - QUESTION & ANSWER

 

12 ஆம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு 12

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துதல்

கற்றல் விளைவுகள்

* பிறமொழிச்சொற்களை நாம் பயன்படுத்துவதற்கான காரணத்தை அறிதல்,

* பிறமொழிக் கலப்பு இல்லாமல் பேசும் வழிவகைகளைத் தெரிந்து கொள்ளுதல்.

* பேசும்போதும் எழுதும்போதும் நாம் பயன்படுத்தும் பிறமொழிச்சொற்கள் பற்றி அறிதல்.

* பிறமொழிச்சொற்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நடைமுறை சிக்கலை அறிதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்

            வெளிநாடு செல்வதற்கு விசா, பாஸ்போர்ட் இரண்டும் கட்டாயம் தேவை. இத்தொடரில் விசா, பாஸ்போர்ட் இவ்விரு சொற்களும் பிறமொழிச்சொற்கள் ஆகும். இதற்குச் சரியான தமிழ் சொற்கள் எவை எனக் கேட்டல்.

விசா - நுழைவு இசைவு,

பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு.

என்ற சரியான தமிழ்ச் சொற்களை மாணவர்களையே கூறச் செய்து ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு:1

                பேசும்போதும் எழுதும்போதும் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதால் நமது தமிழ் மொழியில் பல பயன்பாட்டுச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் தூய தமிழ் சொற்கள் வழக்கற்றுப் போகும் நிலை உருவாகும். இவற்றைக் களைவதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே செயல்பாடு என்னவென்றால், அத்தகைய பிறமொழிச் சொற்களுக்கு நிகரான சரியான தமிழ்ச் சொற்களை மூல நூல்கள் வாயிலாகவும் முன்னோர்கள் மூலமாகவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இம்முறையைச் சரியான வழியில் நாம் செயல்படுத்துவோமானால் நமது தமிழ்மொழி கலப்பற்ற தூய மொழியாகும் என்பது திண்ணம்.

செயல்பாடு: 2

            பிறமொழிச்சொற்கள் இடம்பெற்ற சில தொடர்களை உதாரணமாக எழுதி சரியான விடையை எழுதுதல்.

சான்று:

1. பிசினஸ் சரியாக நடக்காத காரணத்தால் ராமனுக்கு இந்த வருடம் அதிக நஷ்டம் ஏற்பட்டது.

     தொழில் சரியாக நடக்காத காரணத்தால் ராமனுக்கு இந்த ஆண்டு அதிக இழப்பு ஏற்பட்டது.


2. சம்பளம் சரியாகத் தராத காரணத்தால் கம்பெனிக்கு எதிராக ஒர்க்கர்ஸ் எல்லோரும்
தர்ணாவில் ஈடுபட்டனர்.

          ஊதியம் சரியாகத் தராத காரணத்தால் குழுமத்திற்கு எதிராகப் பணியாட்கள் எல்லோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செயல்பாடு: 3

      நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில பிறமொழிச் சொற்களையும் அதற்கான
தமிழ்ச்சொற்களையும் மாணவர்களுக்கு உணர்த்துதல்.

பிறமொழி              தமிழ்மொழி

போலீஸ்                        காவலர்

உற்சாகம்                       மகிழ்ச்சி

உத்திரவாதம்                உறுதி

மாணவர் செயல்பாடு

தனி மாணவர் செயல்பாடு :

* பிறமொழிச் சொற்களைப் படிக்காத மக்களும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களை ஒவ்வொரு மாணவராக எழுப்பி கேள்வி கேட்டுச் சரியான பதிலை வரவழைத்தல்.

சான்று :

வருஷம், பஸ், போட்டோ, ஸ்டாப், பர்த்டே.

****************    **********    **************

                           மதிப்பீடு

1. பிறமொழிச்சொற்களைப் பயன்படுத்துவதால் தமிழில் ஏற்படும் சிக்கல்கள் யாவை?

* தூய தமிழ்ச்சொற்கள் வழக்கற்றுப் போகும் நிலை உருவாகும்.

* ' மொழிக்கலப்பு ' ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* பொருள் புரிதலில் இடர்பாடு தோன்றலாம்.

2. தொடரில் உள்ள பிறமொழிச் சொற்களை நீக்குக.

தபால்துறை பரீட்சையில் இங்கிலீஷ் வினாக்களுக்கு இம்பார்டன்ட் கொடுத்துப் படிக்க வேண்டும்.

         தபால்துறைத் தேர்வில் ஆங்கில வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும்.


3. கீழ்க்காணும் பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களை எழுதுக.

பாஸ்போர்ட், விசா, குரு, அபூர்வம், அக்கினி, அர்ச்சனை.


பாஸ்போர்ட்    -   கடவுச்சீட்டு 

விசா                 - நுழைவு இசைவு 

குரு                   - ஆசான் 

அபூர்வம்         - புதுமை 

அக்கினி         - நெருப்பு 

அர்ச்சனை      - போற்றி 

**************     **************    ***********

Post a Comment

0 Comments