பத்தாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 12
கடிதம் எழுதுதல்
கற்றல் விளைவு:
அன்றாட வாழ்வில் நிகழும் தனித்துவமான அனுபவங்களைப் (நிகழ்வுகள்/ சூழல்கள்) புத்தாக்க முறையில் வெவ்வேறு வழிகளில் கடிதமாக எழுதுதல். (சமூக ஊடகங்கள், நோட்டுப்புத்தகம், பதிப்பாளருக்குக் கடிதம் எழுதுதல்)
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
எழுத்து வடிவிலான தகவல் பரிமாற்றத்தைக் குறிப்பது கடிதம் அல்லது மடல் எனப்படும். பண்டைய காலத்தில் சுவடி, துணி, தாள் போன்றவற்றின் மூலமாகக் கடிதச் செய்தியை அறிந்து கொண்டனர். அக்காலத்தில் கடிதங்களைக் கொண்டு பல வரலாறுகளையும் இலக்கியங்களையும் பரிமாறியிருக்கிறார்கள். கடிதவடிவில் புதினங்களும் எழுதப்பட்டுள்ளன.
விளக்கம்:
தொலைவில் உள்ளோருக்குக் கருத்தைத் தெரிவிக்கப் புகையில் தொடங்கி ஒலியில் வளர்ந்து விலங்குகள், பறவைகள், மனிதர்கள் எனப் பல்வேறு உயிரினங்களால் தொடரப்பட்டது. இன்று அஞ்சலில் நிலைப்பெற்றுள்ளது அத்தகவல் பரிமாற்றம். அதுவே இன்று மின்னஞ்சல் உள்ளிட்ட புதுப்புதுப் படிநிலைகளில் வளர்ந்து கொண்டே வருகிறது. பரிமாற்றங்கள் எவ்வாறாக இருப்பினும் உயர்வான கருத்தும் உயிர்ப்புள்ள மொழியுமே செய்தி அளிப்பவருக்கும் பெறுபவருக்குமான உறவுப் பாலத்தை உறுதியாக்குகிறது
கடிதவகை
உறவுமுறைக்கடிதம்
அலுவலகக் கடிதம்
உறவுமுறைக் கடிதம்
நண்பர்கள், உறவினர்கள், அறிமுகமானவர்களுக்கும் அனுப்பப்படுவது உறவுமுறைக் கடிதம் ஆகும்.
உறவுமுறைக் கடிதத்திற்கான அமைப்புமுறை
கடிதம் எழுதுதல்
நாள் இடம்
விளித்தல் (அன்புள்ள தோழிக்கு.)
நலச்செய்தி
கடிதச்செய்தி
இப்படிக்கு,
உறைமேல் முகவரி
'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற
கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்திக் கடிதம் எழுதுக.
20.05.2021
2.கம்பர் தெரு,
சென்னை-79.
அன்புள்ள தோழா,
நலம். நலமறிய ஆவல். மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இயற்கையின் மீது நீ, எவ்வளவு ஆர்வம் கொண்டவன் என்பது எனக்குத் தெரியும். மரங்களை வளர்ப்பதிலும் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதிலும் உனக்குள்ள அக்கறையைக் கண்டு உன்னை எல்லாரும் பாராட்டுகின்றனர். இதுபோல், நீ எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு முதல்பரிசு பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன் அன்புத் தோழன்,
ம. செழியன்.
உறைமேல் முகவரி
பெறுநர்
ச. எழிலன்,
த/பெ. த. சங்கர்,
25,பாரதி நகர்,
மதுரை -04.
நன்றி.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அ.தமிழரசன்.
இடம் : வில்லிவாக்கம்
நாள் :19.05.2021
உறைமேல் முகவரி
பெறுநர்
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி ஆணையர் அலுவலகம்,
சென்னை-01.
************* ************** *************
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
2 Comments
இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
ReplyDeleteKathir vel jayaramankathirveljayaraman@gmail.com
ReplyDelete