12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - ஒரு மதிப்பெண் தேர்வு - 1 , வினா & விடை / 12th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM - ONE WORD TEST - 1

 

மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( 12 ) 

பொதுத்தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

இயங்கலைத்தேர்வு - 1 ( ஒரு மதிப்பெண் )

( பகுபத உறுப்புகள் , இலக்கணக்குறிப்பு , புணர்ச்சி விதிகள் , திணை , துறை ) 

வினாக்களும் விடைகளும்

*************   ************   *************

1) விகுதி பெறாத கட்டளை அல்லது ஏவல் வினையே ------

அ) இடைநிலை

ஆ) பகுதி

இ) சந்தி

ஈ) சாரியை

விடை : ஆ ) பகுதி 

2) திணை , பால் , எண் , இடம் ஆகியனவற்றைக் காட்டுவது -----

அ) பகுதி

ஆ) இடைநிலை

இ) விகுதி

ஈ) விகாரம்

விடை : இ ) விகுதி

3) வேர்ச்சொல் , முதனிலை என
அழைக்கப்பெறுவது ------

அ ) விகுதி
ஆ) பகுதி
இ ) சாரியை
ஈ) இடைநிலை

விடை : ஆ ) பகுதி

4) இடைநிலை -------வகைப்படும்.

அ) 6
ஆ) 3
இ) 4
ஈ) 5

விடை : இ ) 4

5) வருவான் என்பதில் 'வ்' என்பது ------
இடைநிலை

அ) இறந்தகால
ஆ) நிகழ்கால
இ) எதிர்கால
ஈ ) எதிர்மறை

விடை : இ ) எதிர்கால

6) எழுத்து தனித்தும் , தொடர்ந்தும்
பொருள்தரின் பதமாம். அது பகுபதம்,
பகாப்பதம் என இருபாலாகி இயலும் எனக்
குறிப்பிடுவது -----

அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ ) தொன்னூல் விளக்கம்
ஈ) இலக்கண விளக்கம்

விடை : அ ) நன்னூல்

7) கீழ்க்காண்பனவற்றுள் உடம்படு
மெய்களாவன ------

அ) க்,ச்
ஆ)த் .ப்
இ) ய், வ்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : இ ) ய் , வ்

8) பொருள் அற்றது -------

அ) பகுதி
ஆ) விகுதி
இ) சாரியை
ஈ) விகாரம்

விடை : இ ) சாரியை 

9) ' நின்றான் ' என்பதில் ' நில்' என்பது -------
விகாரம்.

அ) திரிதல்
ஆ) கெடுதல்
இ) குறில் நெடிலாக மாறிய
ஈ) நெடில் குறிலாக மாறிய

விடை : அ ) திரிதல்

10 ) எழுத்துப்பேறாக வரும் எழுத்து ------
அ) ப்
ஆ) ம்
இ) ய்
ஈ )த்

விடை : ஈ ) த் 

11 ) இரண்டு ----- சொற்கள் ஒட்டி வருவது
இருபெயரொட்டுப் பண்புத்தொகை

அ) வினை
ஆ) பெயர்
இ) இடை
ஈ) உரி

விடை : ஆ ) பெயர்

12 ) காலம் கரந்த பெயரெச்சம் ------

அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை

விடை : ஆ ) வினைத்தொகை

13) போல , போன்ற என்னும் உவம உருபு
மறைந்து வருவது ------

அ) உவமைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) வினையாலனையும் பெயர்

விடை : அ ) உவமைத்தொகை

14) சேரனும் சோழனும் - என்பதன்
இலக்கணக்குறிப்பு -----

அ) உவமைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) எண்ணும்மை

விடை : ஈ ) எண்ணும்மை

15 ) ' உயிர்முதல் ' என்பதன் சான்று -----

அ) மணிமாலை
ஆ) வாழை இலை
இ) தமிழ் நிலம்
ஈ) பொன்வண்டு

விடை : ஆ ) வாழை இலை

16 ) ' வாயொலி' - எவ்வகைப் புணர்ச்சி விதி
என்பதைச் சுட்டுக.

அ) ஈறுபோதல்
ஆ) இனமிகல்
இ) ஆதிநீடல்
ஈ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

விடை : ஈ ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

17) பொருள் பாகுபாட்டின் அடிப்படையில்
திணை - வகைப்படும்.

அ) 2
ஆ)6
இ ) 4
ஈ) 3

விடை : அ ) 2

18)' தொல்காப்பியம்' குறிப்பிடும்
திணைகள் ( புறம்சார்ந்தவை) -----

அ) 11
ஆ) 5
இ) 7
ஈ ) 12

விடை : இ ) 7

19) புகழெனின் உயிருங் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினுங்
கொள்ளலர்; அயர்விலர் - எனும் புறப்பாட்டு
சுட்டும் திணை --

அ) வெட்சித்திணை
ஆ) கைக்கிளை
இ) பொதுவியல்
ஈ) பாடாண்திணை

விடை : இ ) பொதுவியல் திணை

20 ) அரசன் செய்யவேண்டியகடமைகளை முறை தவறாமல்செய்யுமாறு அவன் கேட்க
அறிவுறுத்துதல் துறை -----

அ) செவியறிவுறூஉத்துறை
ஆ)பொருண்மொழிக்காஞ்சி
இ) பரிசல்துறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : அ ) செவியறிவுறூஉத்துறை

*****************   **********   *************

வினா உருவாக்கம் 

திருமதி.இரா.மனோன்மணி , 

முதுகலைத்தமிழாசிரியை , 

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி , திண்டுக்கல்.

*****************   *************   ************

Post a Comment

2 Comments