11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 12 ,மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல் - வினா - விடை / 11th TAMIL - REFRESHER COURE MODULE - 12 , QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 12

மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல்

கற்றல் விளைவுகள்

மயங்கொலிச் சொற்கள் என்ன என்பதை அறிதல்.

* மயங்கொலிச் சொற்கள் மூலம் எவ்வாறு பிழைஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுதல்.

*மயங்கொலிச் சொற்களைச் சரியாக புரிந்து கொள்ளுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்:

       மாணவர்களிடம் 'அவனை அளைத்து வா' என்று கூறி இதில் எது? மயங்கொலிச் சொல் என்று கேட்டு அதற்கு சரியான மயங்கொலிச் சொல்லை எடுத்துக் கூறி "அவனை அழைத்து வா" என்பதே சரி என்பதையும் அளை என்றால் புற்று எனப் பொருள்படும் என்பதையும் கூறி இவ்வாறு ஒரே ஒலிப்புமுறைக் கொண்ட சொல்லை மயங்கொலிச் சொற்கள் என்பதை மாணவர்களிடம் கூறி ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு : 1

               மயங்கொலிச் சொற்கள் என்பது உச்சரிக்கும்போது ஒரே மாதிரியான உச்சரிப்பு முறை கொண்டிருக்கும். கேட்பவர்களுக்கு பொருள் புரியாத வண்ணம் மயக்கத்தை (குழப்பத்தை) ஏற்படுத்தும் சொற்கள் மயங்கொலிச் சொற்கள் ஆகும்.

           மயங்கொலி என்பது எழுத்துகளைச் சரியாக உச்சரிக்காததும் தவறாகப் புரிந்து கொள்வதும் தான் மயங்கொலி எனப்படும். மயக்கத்தைத் தரக்கூடிய ஒலி என்பதாகும்.

காளை

காலை

மேற்கண்ட சொற்களைப் பாருங்கள். ஒரே மாதிரியான உச்சரிப்பு முறையைக் கொண்டுள்ளது.

       இதில் நுண்ணிய வேறுபாடே உள்ளது. இதை நாம் சரியாக புரிந்து கொண்டு உச்சரிக்கவில்லை என்றால் பொருளில் குழப்பம் ஏற்படும். இதுவே மயங்கொலிச் சொல் ஆகும்.

செயல்பாடு : 2

   நம்முடைய தாய் மொழியாகிய தமிழில் ண, ந, ன, ல, ள, ழ, ர, ற ஆகிய எட்டு எழுத்துகள் ஒரே மாதிரியான உச்சரிப்பு முறையை உடையவை. அவைகளை நாம் சரியாக உச்சரிக்கும் முறையைத் தெரிந்து கொண்டால் பிழை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்

தமிழ்மொழியில் மயங்கொலிச் சொற்கள் மூன்று வகையில் அமையும். அவற்றை

ந,ன, ண வேறுபாடு

ர,ற வேறுபாடு

கல, ழ, ள வேறுபாடு என்று வகைப்படுத்துவர்.


செயல்பாடு : 3

ணகர, னகர வேறுபாடு அறிதல்
* அரண் - மதில் பாதுகாப்பு கோட்டை
* அரன்  -  சிவன்
*அண்ணம் - மேல்வாய்
* அன்னம் - ஒரு பறவை
* கணை -  அம்பு
* கனை - கனைத்தல்
*  கணம் - தொகுதி
* கனம்   -  பளு, சுமை
* காண் -  பார்
* கான் - காடு

பொருள் வேறுபாட்டை உணர்த்த வாக்கியங்களாக அமைத்தல்.

தண் - குளிர்ச்சி - இரவு நேரங்களில் காற்று தண் என்று வீசும்

தன் - மனிதன் தன்னுடைய உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும்

பணி - வேலை - மனிதன் தன்னுடைய பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

பனி - பனிக்கட்டி - இரவுப் பொழுதில் பனி பெய்வதால் வெளியில் செல்லக்கூடாது.

ரற - வேறுபாடு

* மரம் - தாவர வகை
* மறம்  - வீரம்
* கரி    - யானை 
* கறி - காய்கறி
* பரி - குதிரை
* பறி - பிடுங்கு
* கரை  -  ஓரம்
* கறை  - அழுக்கு
* எரி       - தீ
* எறி  - வீசு 

ல -ழ-ள வேறுபாடு

* அலி - பேடி
* அழி - கெடு
* அளி  - கொடு
* வாலை -  இளம்பெண்
* வாழை  -    மர வகை
* தால் - நாக்கு
* தாழ் - பணிதல், வணங்கு
* தாள் - பாதம்

மாணவர் செயல்பாடு

கரும்பலகையில் மயங்கொலிச் சொற்களை எழுதி ஒரு மாணவனை அச்சொற்களுக்குச் சரியான பொருளைக் கூறச் செய்து சொற்றொடராக மாற்றுமாறு கூறுதல் வேண்டும்.

*************    ****************    ***********

                            மதிப்பீடு

1. மயங்கொலி என்றால் என்ன?

        மயங்கொலி என்பது எழுத்துகளைச் சரியாக உச்சரிக்காததும், தவறாகப் புரிந்து கொள்வதும் ஆகும். மயக்கத்தைத் தரக்கூடிய ஒலி மயங்கொலி.

2. மயங்கொலிச் சொற்கள் எவை?

தமிழ்மொழியில் மயங்கொலிச் சொற்கள் மூன்று வகையில் அமையும். அவற்றை

ந,ன, ண வேறுபாடு

ர,ற வேறுபாடு

ல, ழ, ள வேறுபாடு என்று வகைப்படுத்துவர்.


3. மயங்கொலிச் சொற்களால் எவ்வாறு குழப்பம் அடைகின்றோம்?

          மயங்கொலிச் சொற்களால் பொருள் குழப்பம் ஏற்படும்.


4. இரத்தல் - இறத்தல் பொருள் வேறுபாடறிக.

     இரத்தல் - யாசித்தல்

     இறத்தல் - மரணித்தல்

**************    **************   *************



Post a Comment

0 Comments