பத்தாம் வகுப்பு - அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
10 , அணு அமைப்பு
மதிப்பீடு:
1. சரியான விடையைத் தேர்ந்தெடு,
1 ) கேதோடு கதிர்கள் -----ஆல் உருவாக்கப்பட்டவை
அ) நேர்மின்சுமை பெற்ற துகள்கள்
ஆ)மின்சுமையற்ற துகள்கள்
இ) எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்
விடை : இ ) எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்
2. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர்,
அ) ரூதர்போர்டு
ஆ) டால்டன்
இ)ஜே.ஜே.தாம்சன்
விடை : இ ) ஜே.ஜே . தாம்சன்
3. ஜேம்ஸ்சாட்விக் ------- ஐ கண்டுபிடித்தார்.
அ) நியூட்ரான்
ஆ) புரோட்டான்
இ) எலக்ட்ரான்
விடை :அ ) நியூட்ரான்
4, புரோட்டானின் நிறை... ஆகும்.
அ) 1.6x10-24 கி.
ஆ) 9.1x10-20 கி.
5) 1.6 10 24 கி.
விடை : அ ) 1.6 × 10-24 கி.
5, எதிர்மின்வாய்க்கதிர்கள் ------- எனவும் அழைக்கப்படும்.
அ)ஆனோடு கதிர்கள்
ஆ) கேதோடு கதிர்கள்
இ)மின் கதிர்கள்
விடை : கேதோடு கதிர்கள்
II கோடிட்ட இடங்களை நிரப்புக.
1 ) ------ என்பது ஒரு தனிமத்தின் மிகச் சிறியதுகள்
விடை : அணு
2. நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை ----- நிறை விகிதத்தில்
இணைந்துள்ளன.
விடை : 1:8
3. புரோட்டான்கள் -------- மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன. (நேர் எதிர்)
விடை : எதிர்
4. பொருண்மை அழியா விதியை ஏற்படுத்தியவர் ------ ஆவார்.
விடை : லவாய்சியர்
III. தனிமங்களின் இணைதிறன் காண்க.
1. co,-ல் உள்ள கார்பனின் இணைதிறன்------
விடை : 4
2. NaCl - ல் உள்ள சோடியத்தின் இணைதிறன்
விடை : 1
IV.பொருத்துக.
அ) பொருண்மை அழியாவிதி - லவாய்சியர்
ஆ) மாறாவிகித விதி - ஜோசப் ப்ரௌல்ட்
இ) கேதோடு கதிர்கள் - சர்வில்லியம் குரூக்ஸ்
ஈ) ஆனோடு கதிர்கள் - கோல்ட்ஸ்டீன்
உ) நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
V.கோடிட்ட இடங்களை நிரப்புக,
1. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணுநிறைகளைப் பெற்றுள்ளன.
இவை.---- எனப்படும்.
விடை : ஐசோடோப்
2. டால்டனின் கூற்றுப்படி அணுவை ------- ------முடியாது.
விடை : ஆக்கவோ , அழிக்கவோ
3. எலக்ட்ரான்கள் உட்கருவை வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இந்த
வட்டப்பாதைக்கு ------ என்று பெயர்.
விடை : ஆர்பிட் அல்லது எலக்ட்ரான் கூடு
4. ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
விடை : 2n 2
5. ஆர்கானின் இணைதிறன்
விடை : 0
6. ஓர் அணுவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை -------
எனப்படும்.
விடை : நிறை எண்
7. கீழே உள்ள தனிமங்களில் நியூட்ரான்களின் எண்ணிக்கையை காண்க.
i) 6 C 12நியூட்ரான்களின் எண்ணிக்கை -----
விடை - 6
ii) 18 Ar40 = நியூட்ரான்களின் எண்ணிக்கை ---------
விடை : 22
8. அணுவின் உட்கருவில் உள்ள துகள்கள் ------ --------- ஆகும்.
விடை : புரோட்டான் , நியூட்ரான்
9. கீழே கொடுக்கப்பட்டுள்ள அணு எண் மற்றும் நிறை எண்களைக் கொண்டு, புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. (i) அணு எண் 3 மற்றும் நிறை எண் 7
N = A - Z
N = 7 - 3 = 4
10. கேதோடு கதிர்கள் கோட்டில் -------- செல்கின்றன.
0 Comments