மனம் கவரும் மரம் ! - இசைப்பாடல் - மு.மகேந்திர பாபு

 


               மனம் கவரும் மரம் 

                   இசைப்பாடல் 

சின்னச் சின்னக் குழந்தைகளே கேளுங்க !

இயற்கையோடு சேர்ந்து நீங்க வாழுங்க !

மண்ணின் வளம் காக்க வேணும் நாமதான் !

மகிழ்வோடு இருக்கும் நம்ம பூமிதான் !


பூமிச்சாமி தந்த வரம் மரங்கள்தான்  ! - அதைப் 

பொக்கிஷமாய்க் காக்க வேணும் மனிதர்தான் !

மண்ணில் இருக்கும் மரங்கள் நமக்கு தாயடா !

மரங்களோடு வாழ்ந்திடவே ஓடிடும் நோயடா !


உறவு போல பறவைக் கூட்டம் வருகுது !- பழம்

உண்ட பின்னே பாடல்களைத் தருகுது !

எச்சத்தாலே மரங்களைத் தினம் பெருக்குது !

மனித இனம் மரங்களைத்தான் சுருக்குது !


வீடிருக்கும் நண்பர்களே வாருங்கள் !

வீதியெங்கும் மரம் நடவே வாருங்கள் !

பிறந்த நாளில் நட்டிடலாம் வாருங்கள் !

பிள்ளை போல மரங்களைப் பாருங்கள் !

     


பாடல்

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

Post a Comment

0 Comments